ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் மறுபக்கம்... எல்லா விஷயமுமே ஆச்சரியம்தான்!!

கடந்த 1904ம் ஆண்டு மான்செஸ்ட்டரில் உள்ள ஒரு ஓட்டலில் சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸின் சந்திப்பில் உருவான ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் இன்று நூற்றாண்டையும் வென்று தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள் முதல் பெரும் கோடீஸ்வரர்கள் வரை தவம் கிடக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு உலக அளவில் இன்றளவும் மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் இருப்பதற்கும், அதன் வியக்க விலைக்கும் பின்னால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பொதிந்து கிடைக்கின்றன.

ஒவ்வொரு காரும் மிகுந்த நுணுக்கமாகவும், கலைநயத்துடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் தயாரிக்கப்பட்டு டெலிவிரி கொடுக்கப்படுகிறுது. அந்த கார்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பல சுவாரஸ்யங்களில் சிலவற்றை இங்கே உங்களுக்கு தொகுத்தளிக்கிறோம்.

முதல் காரின் சாதனை

முதல் காரின் சாதனை

1907ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் முதன்முதலாக அறிமுகம் செய்த மாடல் சில்வர் கோஸ்ட். அந்த முதல் கார் இடைநில்லாமல் 24,000 கிமீ தூரம் ஓடி சாதனை படைத்தது.

பெயர்

பெயர்

இங்கிலாந்து, க்ரூ மற்றும் லண்டனிலுள்ள ரோல்ஸ்ராய்ஸ் ஆலைகளில் கார்களை ராய்சஸ் என்றே குறிப்பிட்டனர். ரோல்சஸ் என்று அவர்கள் குறிப்பிடுவதில்லை.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ரோல்ஸ்ராய்ஸ் காரின் முன்பக்க பானட்டில் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி என்ற சிலை போன்ற சின்னம் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். மிக மகிழ்ச்சியான பயணத்தையும், வேகத்தையும் குறிக்கும் வகையில், 1911ம் ஆண்டு சார்லஸ் ஸ்கை என்பவர் இதனை உருவாக்கினார். ஆனால், தற்போது இதற்கு புதுப்புது அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. ஒருவேளை மோதல் ஏற்பட்டால், இந்த சிலை போன்ற ஆபரணம் தானாகவே உள்ளிழுத்துக் கொள்ளும் என்பதும் ஆச்சரியமே.

விலை

விலை

முதலில் வெளியான ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் 395 பவுண்ட் விலையில் விற்பனை செய்யப்பட்டன. இந்த கார்களின் தற்போதைய மதிப்புடன் ஒப்பிட்டால், 2.50 லட்சம் பவுண்ட்டுகளுக்கும் அதிகமாக கூறப்படுகிறது.

ஃபான்டம் IV

ஃபான்டம் IV

1950 முதல் 1955ம் ஆண்டு வரை மொத்தம் 18 ஃபான்டம் IV கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இவை ராஜ குடும்பத்தினர் மற்றும் தலைவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

 முகப்பு கிரில்

முகப்பு கிரில்

ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் முகப்பு கிரில் முழுக்க முழுக்க எந்தவொரு அளவீட்டு கருவிகளும் பயன்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்டது என்பது வியப்புக்குரிய விஷயம். ஒரு ரேடியேட்டர் கிரில்லை உருவாக்க ஒரு தொழிலாளி ஒரு நாளில் தயாரிக்கிறார். இதனை பாலிஷ் செய்வதற்கு மட்டும் 5 மணிநேரம் எடுத்துக் கொள்கின்றனர்.

தேசியமயமாக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ்

தேசியமயமாக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ்

1971ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை இங்கிலாந்து அரசால் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு பின் ரோல்ஸ்ராய்ஸ் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் மோட்டார்ஸ் தனியாக பிரிக்கப்பட்டது. 1980ல் விக்கர்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன்பின், 1998ல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்திடம் நிறுவனத்திடம் விற்றது. கடந்த 2002ம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகனிடமிருந்து பிஎம்டபிள்யூ வாங்கியது. இதன்பின்னர்தான், ரோஸ்ஸ்ராய்ஸ் கார்கள் தயாரிப்புக்காக பிரத்யேக ஆலை இங்கிலாந்தின் குட்வுட்டில் அமைக்கப்பட்டது.

 ஆயுள் அதிகம்

ஆயுள் அதிகம்

இதுவரை விற்பனை செய்யப்பட்ட 65 சதவீத ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இன்றும் சாலையில் இயங்கும் நிலையில் இருக்கின்றன.

ஃபான்டம்

ஃபான்டம்

பிஎம்டபிள்யூ கைக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு முதலாவதாக ரோல்ஸ்ராய்ஸ் பிராண்டில் புதிய தலைமுறை மாடலாக ஃபான்டம் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 44,000 வண்ணங்களில் ரோல்ஸ்ராய்ஸ் காரை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

 ஜெர்மனியில் தயாரிப்பு

ஜெர்மனியில் தயாரிப்பு

ஒவ்வொரு ஃபான்டம் காரும் ஜெர்மனியிலிருந்துதான் முதலில் தயாராகிறது. 200க்கும் மேற்பட்ட அலுமினிய பாகங்கள் மற்றும் 300க்கும் அதிகமான அலாய் பாகங்கள் கைகளால் வெல்டு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு ஃபான்டம் அனைத்து தயாரிப்பு நிலைகளையும் கடந்து முழு காராக மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும்.

 எஞ்சின்

எஞ்சின்

தற்போதைய தலைமுறை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் முழுக்க முழுக்க கைகளாலேயே கட்டமைக்கப்படுகின்றன. ஃபான்டம் காரில் பொருத்தப்பட்டிருக்கும் வி12 எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டும் சக்தி கொண்டது.

ஆஷ் டிரெ

ஆஷ் டிரெ

ரோல்ஸ்ராய்ஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆஷ் டிரேயை திறக்க இயலாது. அதில், போடும் சிகரெட் துண்டையும் பார்க்க முடியாது. அது தானாகவே பஸ்பமாகிவிடுமாம்.

பிரேக் டவுன்

பிரேக் டவுன்

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பிரேக் டவுன் ஆகாது என்று நம்பிக்கை அளிக்கப்படுகிறது.

ஏசி பவர்

ஏசி பவர்

ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் சில்வர் ஸ்பிரிட் குளிர்சாதன அமைப்பு 30 ஃப்ரிட்ஜ்-களுக்கு சமமானதாக கூறப்படுகிறது.

குடை

குடை

ஒவ்வொரு ஃபான்டம் காரின் கதவிலும் ஒரு குடை கொடுக்கப்பட்டிருக்கும். டெஃப்லான் பூச்சு கொண்ட இந்த குடையை ஒரு பட்டனை தட்டினால் அதன் அறைக்குள் இருந்து வெளியே வந்துவிடும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X