சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ஆயுத சக்திகள்!

இந்தியா- சீனா இடையில் நீண்டகால நல்லுறவு இருந்து வந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக எல்லைப் பிரச்னை காரணமாக முட்டல் மோதல்கள் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. 1962ல் நடந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக, எல்லைப் பிரச்னை நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், பொருளாதாரம், படைபலம் ஆகிய அனைத்திலும், சீனா ஒரு படி முன்னே இருந்தாலும், இந்தியா மீது போர் தொடுப்பது என்பது அந்த அந்த நாட்டுக்கு பல வகைகளில் பல வகைகளில் இழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும். அதற்கு பூகோள ரீதியான காரணம் மட்டுமின்றி, இந்திய ராணுவத்திடம் இருக்கும் சில ஆயுதங்களும் முக்கிய காரணமாக கூறலாம்.

01. ஐஎன்எஸ் சக்ரா

01. ஐஎன்எஸ் சக்ரா

இது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல். சாதாரண நீர்மூழ்கி கப்பல்கள், பாட்டரியை சார்ஜ் செய்யவும், எரிபொருள் நிரப்பவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாய் துறைமுகத்துக்கு வர வேண்டியிருக்கும். ஆனால், இந்த நீர்மூழ்கி கப்பல் அணுசக்தியில் இயங்குவதால், ஒரு மாதம் வரை கூட கடலுக்கடியில் இருக்கும். மேலும், எதிரி நாடுகளால் கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியாது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 12 ஏவுகணைகளையும், அதில் அணுகுண்டுகளையும் பொருத்தி, இலக்குகளை குறி தவறாமல் தாக்குதல் நடத்த முடியும். இந்த மாபெரும் நீர்மூழ்கி போர்க்கப்பலில் 80 பேர் வரை செல்ல முடியும். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த வகை நீர்மூழ்கி கப்பல் உள்ளது.

 02. ஃபால்கன் அவாக்ஸ்

02. ஃபால்கன் அவாக்ஸ்

வான்வழி, நீர்வழி மற்றும் கடல்வழியாக ஊடுருவல் முயற்சிகளை முன்கூட்டியே கண்டறியும் வசதியுடைய ஃபால்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் நடமாடும் கண்காணிப்பு விமானங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டில் உருவான அதிநவீன இந்த கண்காணிப்பு ரேடார் சாதனம், ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட ஐஎல்-76 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போர் நடைபெறும் பகுதிகளில் எதிரிகளின் அசைவுகளை துல்லியமாக கண்டறிந்து, எதிரி விமானங்கள், துருப்புகளை இடைமறிப்பதற்கு இந்த விமானத்தின் தகவல்கள் பயன்படும். மேலும், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முற்படும் விமானங்களையும் கண்டறிந்து, ராணுவ கட்டுப்பாட்டு மையத்தற்கு தகவல்களை அனுப்பும். பிற நவீன கண்காணிப்பு சாதனங்களைவிட 10 மடங்கு அதிவேகமானது. மூன்று விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

Photo Credit:ewarfare.com

03. பிரம்மோஸ் ஏவுகணை

03. பிரம்மோஸ் ஏவுகணை

இந்திய- ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான குறைந்த தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையும் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை எளிதாக முறியடிக்கும் திறன் கொண்டது. மேலும், சீனாவின் அத்துமீறல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் பிரம்மோஸ் ஏவுகணை பிரிவை மத்திய அரசு அமைத்து வருகிறது. அதிகபட்சமாக 290 கிமீ தூரம் கொண்ட இலக்குகளை இந்த சூப்பர்சானிக் வகை ஏவுகணை தப்பாமல் அழிக்கும்.

Photo Credit:

 04. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

04. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

இந்தியாவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க் கப்பல். ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த போர்க்கப்பலில் 30 மிக் 29கே போர் விமானங்கள் அல்லது தேஜஸ் விமானங்கள் மற்றும் 12 ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். 1,600 வீரர்கள் செல்வதற்கான வசதி கொண்டது. இந்திய கடற்பகுதி பாதுகாப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பதுடன், சீனாவிற்கு அச்சத்தை தந்திருக்கும் விமானதாங்கி போர்க் கப்பலாகவே குறிப்பிடப்படுகிறது. ரூ.15,000 கோடி மதிப்புடையது.

Photo Credit: yuvaengineers.com

05. ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

05. ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

உலக அளவில் அமெரிக்காவிடம் மட்டுமே இப்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானம் உள்ளது. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராஃப்டர் என்ற அந்த விமானம் எதிரிகளின் ரேடார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பறக்கும் திறன் கொண்டது. இதேபோன்றதொரு விமானத்தை தயாரிக்க ரஷ்யாவுடன் இணைந்து செயலாற்றி வருகிறது இந்தியா. சுகோய் எஃப்ஜிஎஃப்ஏ என்ற குறியீட்டுப் பெயரில் இந்த போர் விமானம் உருவாகிறது. வான்வழி மற்றும் தரை தாக்குதல்களில் இப்போதுள்ள விமானங்களைவிட பன்மடங்கு திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த திட்டமும் சீனாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் விஷயம்.

Photo Credit: Wikipedia

06. பீஷ்மா பீரங்கி

06. பீஷ்மா பீரங்கி

இதுவும் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட நவீன வகை பீரங்கிகள். உயர்வகை தீத்தடுப்பு அம்சங்கள் மற்றும் அதிவிரைவாக செல்லும் அம்சங்களை பெற்றது. மூன்று தசாப்தங்களாக பயன்பாட்டில் இருக்கின்றன. மூன்று வீரர்கள் இந்த பீரங்கியை இயக்க முடியும். 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, தண்ணீர் நிறைந்த பகுதிகள் மற்றும் கரடு முரடான இடங்களிலும் வெகு எளிதாக செல்லும். தற்போது 700 பீஷ்மா பீரங்கிகள் உள்ளன. மேலும், 347 பீஷ்மா பீரங்கிகள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளன. இந்த பீஷ்மா பீரங்கியும் சீனாவிற்கு அச்சுறுத்தலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Photo Credit: theotherguy.files.wordpress.com

07. பினாகா ஏவுகணை செலுத்தி

07. பினாகா ஏவுகணை செலுத்தி

கார்கில் போரின் வெற்றிக்கும், இந்த பினாகா என்ற ஏவுகணை செலுத்தியும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. இது பல்குழல் கொண்டிருப்பதால், ஒரேநேரத்தில் பல ஏவுகணைகளை ஏவ முடியும். வெறும் 44 வினாடிகளில் 72 ஏவுகணைகளை ஏவ முடியும். அந்த சமயத்தில் 4 சதுர கிலோமீட்டர் பரப்பு இடத்தை கூட துவம்சம் செய்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. மேலும், அனைத்து திசைகளிலும் விரைவாக ஏவுவதற்கான வசதியும் கொண்டது. எனவே, இதுவும் சீன ராணுவத்திற்கு பெரும் அச்சுறுத்தலை கொடுத்தும், நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

Photo Credit:photodivison.gov.in

08. சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ

08. சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ

எதிரிகளின் இலக்குகளை தாக்குதல் நடத்துவது மட்டுமின்றி, எதிரி நாட்டு வான்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஆற்றல் பெற்றவை இந்த சுகோய் எம்யூ-30 எம்கேயூ விமானம். நம் நாட்டு விமானப் படையில் 200 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த விமானத்தில் சிறிய மாறுதல்களை செய்து பிரம்மோஸ் ஏவுகணையையும் பொருத்தி, எதிரிகளின் இலக்குகளை தாக்க முடியும்.

Photo Credit:airlines.net

09. அக்னி- 5

09. அக்னி- 5

அக்னி வரிசையில் இந்தியா உருவாக்கி வரும் ஏவுகணைகள் நீண்ட தூர இலக்குகளை திறன் கொண்டவை. மேலும், அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் சென்றும் தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தவை. அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை. கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணை ஒரு டன் அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு 5,000 கிமீ பயணித்து இலக்குகளை அழிக்கும். இந்த ஏவுகணையும் சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது.

10. பூகோள ரீதியிலான காரணம்

10. பூகோள ரீதியிலான காரணம்

பெருமளவு கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்தே சீனா இறக்குமதி செய்கிறது. மேலும், இந்த கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து இந்திய பெருங்கடலை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. போர் தொடுத்தால், சீன எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை செக் வைத்துவிடும். இதனால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சீனாவிற்கு பெரும் இடையூறு ஏற்படும் என்று கருதப்படுகிறது. எனவே, ராணுவ பலத்தில் ஒரு படி முன்னே இருந்தாலும், அவ்வளவு எளிதாக இந்தியா மீது போர் தொடுக்க இயலாத நிலை சீனாவுக்கு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are some Indian Military Weapons That Will Make Our Enemies Fear.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X