ரத்தத்தை உறைய வைக்கும் வேகம்... உலகின் அதிவேக ராக்கெட் கார் பற்றிய தகவல்கள்!

உலகின் அதிவேக சாதனைக்காக வடிவமைக்கப்பட்டு வரும் பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி ராக்கெட் காரின் வடிவமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 1609 கிமீ வேகத்தை தொட்டு புதிய உலக சாதனையை படைப்பதற்காக இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு வடிவமைப்புப் பணிகள் துவங்கப்பட்ட இந்த ராக்கெட் காருக்கான காற்றியக்கவியல் தத்துவம் மற்றும் காரில் பயன்படுத்தப்பட்டப்பட வேண்டிய உதிரிபாகங்கள் குறித்த இறுதி முடிவுகளை திட்டக்குழுவினர் எட்டியுள்ளனர். வரும் 2016ம் ஆண்டில் உலகின் அதிவேக சாதனையை கடக்கும் வகையிலான இந்த புதிய ராக்கெட் கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளட்ஹவுண்ட் ராக்கெட் காரின் கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் தொடர்கிறது!

ஒரு பார்வை

ஒரு பார்வை

இதுவரை தரையில் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்தி நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், உலகத்தை ஆவலில் ஆழ்த்தியுள்ள புதிய அதிவேக சாதனையையும் பற்றிய ஒரு பார்வையை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

முதல் சாதனை

முதல் சாதனை

கடந்த 1983ம் ஆண்டு த்ரஷ்ட்2 என்ற ராக்கெட் காரில் உலகின் அதிவேக சாதனை படைக்கப்பட்டது. ஜான் அக்ராய்டு என்பவர் வடிவமைத்த இந்த காரை ரிச்சர்ட் நோபுள் ஓட்டினார். மணிக்கு 1,047.49 கிமீ வேகத்தை அந்த ராக்கெட் வடிவிலான கார் தொட்டு உலக சாதனை படைத்தது.

Picture Credit: Wikipedia

 இரண்டாவது சாதனை

இரண்டாவது சாதனை

கடந்த 1997ம் ஆண்டு இரண்டாவது உலகின் அதிவேக தரை சாதனை நிகழ்த்தப்பட்டது. 1983ம் ஆண்டு த்ரஷ்ட்2 காரை ஓட்டிய ரிச்சர்ட் நோபுள் தலையிலான குழு த்ரஷ்ட் எஸ்எஸ்சி என்ற பெயர் கொண்ட இந்த காரை வடிவமைத்தது. மணிக்கு 1,228 கிமீ வேகத்தில் இந்த கார் தொட்டு உலக சாதனையை படைத்ததுடன், ஒலியின் வேகத்தை கடந்த முதல் ராக்கெட் கார் என்ற பெருமையையும் பெற்றது. இங்கிலாந்து விமானப்படை விமானி ஆண்டி க்ரீன் இந்த காரை ஓட்டினார்.

Picture Credit: Wikipedia
மூன்றாவது சாதனைக்காக...

மூன்றாவது சாதனைக்காக...

முதல் இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் விதத்தில் ரிச்சர்ட் நோபுள் தலைமையிலான 70 பேர் கொண்ட குழு பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி என்ற மூன்றாவது ராக்கெட் காரை வடிவமைத்து வருகிறது. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த காருக்கு மணிக்கு 1,000 மைல் வேகம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மணிக்கு 1,609 கிமீ வேகத்தை எட்டுவதே இதன் இலக்கு.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

அடுத்த ஆண்டு பிளட்ஹவுண்ட் காரை மணிக்கு 800 மைல் (1,288கிமீ) வேகத்தில் இயக்கி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 2016ம் ஆண்டில் மணிக்கு 1600 கிமீ வேகத்தை தொட்டு இலக்கை நிறைவு செய்ய திட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சவால்கள்

சவால்கள்

7.5 டன் எடையுடன் வடிவமைக்கப்பட்டு வரும் பிளட்ஹவுண்ட் எஸ்எஸ்சி ராக்கெட் கார் வடிவமைப்பில் பல்வேறு சவால்களை வடிவமைப்பு பொறியாளர்கள் சந்தித்து வருகின்றனர். விண்வெளி, விமானவியல் மற்றும் ஃபார்முலா- 1 கார்களின் டிசைன்களின் அடிப்படைகளை இந்த காரின் வடிவமைப்பில் பயன்படுத்தி வருகின்றனர்.

சக்கரங்கள்

சக்கரங்கள்

ஒலியின் வேகத்தை தாண்டும் வல்லமை கொண்ட இந்த காரில் டயர்கள் கொண்ட சக்கரங்களை பயன்படுத்த இயலாது என்பதால், 90 கிலோ எடை கெண்ட அலுமினிய டிஸ்க்குகள் பயன்டுத்தப்பட உள்ளன.

 ஏர் பிரேக்

ஏர் பிரேக்

சாதாரண வகை பிரேக் அமைப்புகள் மணிக்கு 320 கிமீ வேகம் வரையிலும் வாகனத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே, இந்த ராக்கெட் காரில் விஷேச ஏர் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது.

3டி பிரிண்டர்

3டி பிரிண்டர்

இந்த காரின் பாடியில் பொருத்தப்படும் பெரும்பான்மையான பாகங்கள் 3டி பிரிண்டரில் உருவாக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவிதமான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முன்புறம் கார்பன் ஃபைபர் பின்புறத்தில் அலுமினியம் ப்ரேம் என பல்வேறு கலவைகளிலான உதிரிபாகங்கள் இதன் பாடியில் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்

பவர்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஜெட் எஞ்சின்கள் மற்றும் துணை எஞ்சின்கள் சேர்த்து 1.35 லட்சம் பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும்.

எரிபொருள்

எரிபொருள்

இந்த ராக்கெட் காரில் இருக்கும் கேப்சூல் வடிவிலான ஸ்டீல் டேங்கில் ஹை டெஸ்ட் பெராக்ஸைடு(HTP) எரிபொருள் நிரப்பப்பபட்டிருக்கும். வெறும் 20 வினாடிகளில் 980 லிட்டர் எரிபொருளை ராக்கெட் உறிஞ்சித் தள்ளும்.

 ரத்தமே உறைந்துபோகும்

ரத்தமே உறைந்துபோகும்

இந்த காரை 19 கிமீ நீளமுள்ள பகுதியில் வைத்து சோதனை நடத்த உள்ளனர். 0- 1609 கிமீ வேகத்தை வெறும் 42 வினாடிகளில் எட்டிவிட வேண்டும் என்பது இலக்கு. இதுபோன்ற வேகத்தில் காரை செலுத்தும்போது ஓட்டுபவருக்கு பல உடலில் சிக்கல்கள் ஏற்படுமாம். எனவே, தற்போது ஓட்டுபவருக்கு விமானங்களிலும், சிமுலேட்டரிலும் வைத்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதாம். காரை அதிவேகத்திற்கு கொண்டு செல்லும்போதும், நிறுத்தும்போதும் ரத்தமே உறைந்துபோகும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

 சாதனைக்கான இடம்

சாதனைக்கான இடம்

தென் ஆப்ரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன் பகுதியில் வைத்து இந்த காரை சோதனை செய்து சாதனை படைக்க உள்ளனர். இந்த சோதனை தளம் 19 கிமீ நீளமும், 3.2 கிமீ அகலமும் கொண்டது.

 திட்ட மதிப்பு

திட்ட மதிப்பு

8 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த புதிய ராக்கெட் கார் வடிவமைப்புத் திட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக சாதனைக்கான புதிய ராக்கெட் கார்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த அதிவேக சாதனைக்கான புதிய ராக்கெட் காரை ஓட்டப்போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆன்டி க்ரீன் அல்லது ரிச்சர்ட் நோபுள் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X