ஏர்பஸ் ஏ380 மார்க்கெட்டை நொறுக்கிய போயிங் ட்ரீம்லைனர் விமானத்தின் சுவாரஸ்யங்கள்!

By Saravana

கடந்த வாரம் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை படித்தீர்கள். அந்த சிறப்புச் செய்தியின் கடைசி ஸ்லைடில், ஏர்பஸ் ஏ380 விமானம் ஒரு ப்ளாப் மாடலாக கருதப்படுவதாக தெரிவித்திருந்தோம். அப்படி, ஏர்பஸ் ஏ380 விமானத்தை ப்ளாப் மாடலாக்கிய பெருமை போயிங் ட்ரீம்லைனர் விமானத்தையே சாரும்.

ஆம், ஏர்பஸ் ஏ380 விமானத்தின் மார்க்கெட்டை குறிவைத்து போயிங் நிறுவனம் அறிமுகம் செய்த ட்ரீம்லைனர் என்ற நீண்ட தொலைவு பறக்கும் வல்லமை கொண்ட விமானம் வர்த்தக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நவீன யுகத்துக்கான அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்ட இந்த விமானத்தின் சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

போயிங் ட்ரீம்லைனர்

போயிங் ட்ரீம்லைனர்

பயணிகள் விமானத் தயாரிப்பில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துக்கும், ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்துக்கும் எப்போதும் போட்டா போட்டிதான். அந்த வகையில், ஏர்பஸ் ஏ380 விமானத்துக்கு போட்டியாக போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. ஏர்பஸ் ஏ380 டபுள் டெக்கர். ஆனால், போயிங் 787 சிங்கிள் டெக் கொண்டது. ஆனாலும், நீண்ட தூர விமான மார்க்கெட்டில் இரண்டிற்கும் இடையேதான் இப்போது போட்டி.

8ம் நம்பர் ராசி

8ம் நம்பர் ராசி

முதலில், 7E7 என்ற பெயரில் இந்த விமானம் அழைக்கப்பட்டது. பின்னர், தனது பாரம்பரிய பெயர் வைப்பு முறைப்படி, 787 ட்ரீம்லைனர் என பெயரில் விற்பனைக்கு வந்தது. தவிர, சீனாவில் 8-ம் எண்ணை ராசியாக கருதுவதால், அந்த விமானத்தின் பெயரில் 8ஐ சேர்த்ததாம் போயிங். ஏனெனில், போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனை மையமாக சீனாவை கருதியதே காரணம். எதிர்பார்த்தபடியே, அங்கிருந்து ஏராளமான ஆர்டர்கள் குவிந்தது இன்னொரு கதை.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2009ம் ஆண்டு இந்த விமானம் முதல்முறையாக வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வணிக ரீதியில் விற்பனை செய்வதற்கான பாதுகாப்பு சான்றிதழ்கள் கிடைத்ததையடுத்து, 2011ம் ஆண்டு செப்டம்பர் ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு முதல் விமானம் டெலிவிரி கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த ஆண்டு அக்டோபர் 26ந் தேதி முதல் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டமைப்பு

கட்டமைப்பு

இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதே. இதன்மூலம், நீண்ட தூரம் பறக்கும் விமானமாக இதனை அறிமுகம் செய்தனர். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வகையில், இலகு எடை கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டன. அதாவது, இந்த விமானத்தின் 80 சதவீத பாகங்கள் இலகு எடை கொண்ட கலப்பு உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் உறுதிமிக்க அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

வடிவம்

வடிவம்

இதன் இறக்கையின் பிரத்யேக வடிவமைப்பு மூலம், உலகிலேயே மிக விசாலமான ஜன்னல் அமைப்பை கொண்ட விமானமாக கூறப்படுகிறது. வேறு எந்த விமானத்திலும் இதுபோன்ற அமைப்புடைய ஜன்னலை பார்க்க இயலாதாம்.

எடை

எடை

இந்த விமானம் 1,17,617 கிலோ எடை கொண்டது. இந்த விமானமானது 60 மீட்டர் நீளமும், 57 மீட்டர் அகலவும், 17 மீட்டர் உயரமும் உடையது.

ஸ்மூத்தான பயணம்

ஸ்மூத்தான பயணம்

மிகவும் சொகுசான பயண அனுபவத்தை வழங்க வல்லது. இதன் வெளிப்புறம் முழுவதும் பல சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், வெளிப்புற சூழலுக்கு தகுந்தவாறு, விமானத்தின் உட்புறத்தில் சீரான வெப்பநிலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட காற்றையும் வழங்கும். மேலும், இதன் மேக்ஸிப்ளெக்ஸ் என்ற இறக்கை அமைப்பு ஏர்பாக்கெட் ஊடாக பறந்து செல்லும்போது அதிக அதிர்வுகள் இல்லாதவாறு, இதன் இறக்கை அதற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ளும் தகவமைப்பு கொண்டது.

உதிரிபாகங்கள்

உதிரிபாகங்கள்

இந்த விமானத்தில் 23 லட்சம் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சப்ளை பெறப்படுகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 242 முதல் 335 பயணிகள் வரை செல்வதற்கான இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 15,130 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிரது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் 1000 ஆகிய எஞ்சின்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 954 கிமீ வேகம் வரை பறக்கும்.

விலை

விலை

ஒரு விமானம் வசதிகள் மற்றும் எஞ்சினுக்கு தக்கவாறு விலை மாறுபடுகிறது. அதிகபட்ச விலை 250 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது.

ரீகால்

ரீகால்

இந்த விமானம் பேட்டரி பிரச்னை உள்ளி்ட்டவைகளால் அடிக்கடி ரீகால் பிரச்னையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1,057 விமானங்களுக்கான ஆர்டரை போயிங் நிறுவனம் பெற்றிருக்கிறது.

எதிர்கால மாடல்

எதிர்கால மாடல்

தற்போது 787- 8, 787-9 மற்றும் 787-10 ஆகிய பயணிகள் வகை மாடல்களில் கிடைக்கிறது. வரும் 2018ம் ஆண்டு வாக்கில் இதன் சரக்கு ஏற்றிச் செல்லும் கார்கோ மாடலையும் அறிமுகம் செய்ய போயிங் திட்டமிட்டிருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Interesting Facts About Boeing 787 Dreamliner.
Story first published: Thursday, June 11, 2015, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X