புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

By Saravana

உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வெய்ரான் கார் பல கோடீஸ்வர கார் பிரியர்களின் கனவு மாடல். விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்ட அனைத்து கார்களும் விற்று தீர்ந்துவிட்டதாக புகாட்டி அறிவித்துவிட்டது.

மேலும், வெய்ரானுக்கு மாற்றாக சிரோன் என்ற பெயரில் புதிய மாடலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், வர்த்தக ரீதியில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களின் அரசனாக விளங்கும் புகாட்டி வெய்ரான் கார் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.


1.லிமிடேட் எடிசன்

1.லிமிடேட் எடிசன்

2006ல் புகாட்டி வெய்ரான் உற்பத்தி துவங்கப்பட்டது. மொத்தம் 450 புகாட்டி வெய்ரான் கார்கள் விற்பனை இலக்கு வைக்கப்பட்டன. அதில், 300 கார்கள் கூபே வகையிலும், 150 கார்கள் கன்வெர்ட்டிபிள் மாடல்களாகவும் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

2.அதிவேக சாதனை

2.அதிவேக சாதனை

வெய்ரான் காரின் சூப்பர் ஸ்போர்ட் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 431.072 கிமீ வேகத்தை தொட்டு வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் மாடல்களில் அதிவேக கார் என்ற பெருமையை பெற்றது. கடந்த ஆண்டு புகாட்டி வெய்ரான் காரின் ரோட்ஸ்டெர் மாடல் மணிக்கு 408.84 கிமீ வேகத்தில் பறந்து, உலகின் அதிவேக ரோட்ஸ்டெர் மாடல் என்ற சாதனையை படைத்தது.

3.எஞ்சின்

3.எஞ்சின்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் டபிள்யூ16(2 வி8எஞ்சின்கள் இணைந்தது) எஞ்சின் 4 டர்போசார்ஜர்களின் உதவியுடன் 1,000எச்பி பவருக்கு மேல் வழங்கும் வல்லமை கொண்டது.

4. டாப் ஸ்பீடில் ஓட்டினால்...

4. டாப் ஸ்பீடில் ஓட்டினால்...

அதிகபட்ச வேகமான மணிக்கு 402 கிமீ வேகத்தில் தொடர்ந்து செல்லும்போது, இந்த காரின் டயர்கள் வெறும் 15 நிமிடத்தில் முழுமையாக தேய்ந்துவிடும். முழுமையாக நிரப்பப்பட்ட இதன் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் எரிபொருள் டேங்க் 12 நிமிடத்தில் காலியாகிவிடும்.

5.சுவாசம்

5.சுவாசம்

மணிக்கு 407 கிமீ வேகத்தில் செல்லும்போது, ஒரு நிமிடத்திற்கு 47,000 லிட்டர் காற்றை இதன் எஞ்சின் கிரகிக்கும். அதாவது, ஒரு மனிதன் 4 நாட்கள் சுவாசிக்க போதுமான காற்று அளவு இது.

 6.பார்ட் பார்ட்டாக...

6.பார்ட் பார்ட்டாக...

இந்த காரில் இருக்கும் 14 போல்ட்டுகளை கழற்றி விட்டால், காரை மூன்று பாகங்களாக கழற்றி விடலாம்.

7.விளம்பரம்

7.விளம்பரம்

1,000 எச்பி பவர் கொண்ட சாதாரண சாலைகளில் இயக்க அனுமதி பெற்ற தயாரிப்பு நிலை கார் மாடலாக விளம்பரம் செய்யப்பட்ட உலகின் முதல் கார் மாடல் இதுதான்.

8.ரேடியேட்டர்

8.ரேடியேட்டர்

இந்த காரின் அதிசக்திவாய்ந்த எஞ்சினிலிருந்து ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்காக 12 ரேடியேட்டர்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு ரேடியேட்டரை தயாரிக்க 15 மணிநேரம் பிடிக்கிறதாம்.

9.ஃப்யூவல் பம்ப்

9.ஃப்யூவல் பம்ப்

இந்த காரின் எஞ்சினுக்கு எரிபொருளை செலுத்தும் ஃப்யூவல் பம்ப், சாதாரண கார்களைவிட 8 மடங்கு வேகத்தில் எரிபொருளை செலுத்தும் வல்லமை கொண்டது.

10. பெட்ரோல் டேங்க்

10. பெட்ரோல் டேங்க்

ஒரு புகாட்டி வெய்ரான் காருக்கான பெட்ரோல் டேங்க்கை தயாரிப்பதற்கு மட்டும் 8 நாட்கள் பிடிக்குமாம்.

11.விசேஷ டயர்கள்

11.விசேஷ டயர்கள்

இந்த காரில் மிச்செலின் நிறுவனத்தின் மிச்செலின் பேக்ஸ் என்ற விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்புறத்தில் இருக்கும் டயர்கள் 14.5 இஞ்ச் அகலம் கொண்ட டயர்கள் உள்ளன. சாதாரண கார்களைவிட இரு மடங்கு கூடுதல் அகலம் கொண்டது இந்த டயர்கள்.

12.டயர் மாற்றும் செலவு

12.டயர் மாற்றும் செலவு

இந்த விசேஷ டயர்களை புகாட்டி வெய்ரான் கார்களுக்கு மட்டுமே தயாரித்து கொடுக்கிறது மிச்செலின் நிறுவனம். வேறு எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், வாடிக்கையாளர் டயரை மாற்ற வேண்டுமெனில், பிரான்ஸ் நாட்டிலுள்ள புகாட்டி ஆலைக்கு காரை அனுப்பி வைக்க வேண்டும். ஒரு முறை டயர் மாற்றுவதற்கு மட்டும் 70,000 டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

13. 10 ஃபெராரிக்கு சமம்

13. 10 ஃபெராரிக்கு சமம்

புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட் மாடல் கார் 24 லட்சம் டாலர் விலை மதிப்பு கொண்டது. இந்த விலையில் 10 ஃபெராரி 458 இட்டாலியா கார்களை வாங்கிவிட முடியும் என்பதோடு, மீதம் ஒரு லட்சம் டாலர் கையில் இருக்கும்.

14.பிரேக்

14.பிரேக்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1,800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கும் சக்தி கொண்டது. டாப் ஸ்பீடில் செல்லும்போது பிரேக் பிடித்தால் வெறும் 10 வினாடிகளில் கார் முழுமையாக நிறுத்திவிட முடியும்.

15.ஸ்பாய்லர் பிரேக்

15.ஸ்பாய்லர் பிரேக்

இந்த கார் டாப் ஸ்பீடை நெருங்கும்போது, இதன் பின்புற ஸ்பாய்லர் ஏர் பிரேக் போன்று செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. நஷ்டத்திற்கு விற்பனை

16. நஷ்டத்திற்கு விற்பனை

ஒவ்வொரு புகாட்டி வெய்ரான் கார் விற்பனையிலும், புகாட்டியன் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு 6.25 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படுகிறதாம்.

Most Read Articles
English summary
Bugatti Veyron is a very special car.Here are some interesting facts to remember about the Veyron. Some you might already know for instance ;
Story first published: Thursday, December 18, 2014, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X