ஆட்டோமொபைல் வரலாற்றை கிளறிய போது கிடைத்த சில சுவாரஸ்யங்கள்!

By Saravana

ஆட்டோமொபைல் துறை வரலாற்றை கிளறி பார்க்கும்போது எண்ணிலடங்கா சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன.

அவற்றில் சுவாரஸ்யமான சிலவற்றை தொகுத்து வாசகர்களுக்கு வழங்கி வருகிறோம். அந்த வகையில், ஆட்டோமொபைல் வரலாற்றின் சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

 ஜீசஸ் பெயரில்...

ஜீசஸ் பெயரில்...

இதுவரை 6 பேர் இயேசு கிறிஸ்து பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனராம்.

உலகின் அதிக விலை கார்

உலகின் அதிக விலை கார்

உலகின் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கார் 1931 மாடல் புகாட்டி ராயல் கெல்னர் கூபே. இந்த கார் 87 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நீளமான லிமோசின்

நீளமான லிமோசின்

உலகின் மிக நீளமான லிமோசின் வாகனமாக மிட்நைட் ரைடர் புகழப்படுகிறது. 40 பேர் பயணிக்கும் வசதி கொண்ட இந்த லிமோசின் ரக வாகனத்தில் மூன்று ஓய்வறைகள் மற்றும் பார் ஒன்று உள்ளது.

கார் ரேடியோ

கார் ரேடியோ

காருக்கான முதல் ரேடியோவை பால் கெவின் உருவாக்கினார். 1929ம் ஆண்டு இந்த ரேடியோ அறிமுகம் செய்யப்பட்டது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

காரில் பொருத்தப்படும் ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப்பைகள் 22 பேரை காப்பாற்றும் அதே நேரத்தில், ஒருவரின் உயிரையும் பறித்து விடுகிறதாம்.

நிலவுக்கு பயணம்

நிலவுக்கு பயணம்

பூமியிலிருந்து கார் மூலம் நிலவுக்கு சென்றடைய 150 ஆண்டுகள் ஆகுமாம்.

சுத்தம்...

சுத்தம்...

கார் உரிமையாளர்களில் 53 சதவீதத்தினர் மாதத்திற்கு ஒருமுறை தங்களது காரை கழுவுகின்றனராம். இதில், 16 சதவீதத்தினர் காரை கழுவுவதே இல்லையாம்.

சிவப்பு அலர்ஜி

சிவப்பு அலர்ஜி

சீனாவின் ஷாங்காய் நகரில் சிவப்பு நிற கார்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மான் வேட்டை

மான் வேட்டை

வேட்டைக்காரர்கள் கொல்லும் மான்களின் எண்ணிக்கையைவிட கார் டிரைவர்கள் கொல்லும் மான்களின் எண்ணிக்கை அதிகமாம்.

ஃபெராரி கார் தயாரிப்பு

ஃபெராரி கார் தயாரிப்பு

நாள் ஒன்றுக்கு 14 கார்களை ஃபெராரி நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் கார் ரேஸ்

முதல் கார் ரேஸ்

கடந்த 1895ம் ஆண்டு சிகாகோ நகரில்தான் உலகின் முதல் வாகன பந்தயம் நடந்தது. இந்த பந்தயத்தில் பிராஃங்க் துர்யே மணிக்கு சராசரியாக 115 கிமீ வேகத்தில் காரை செலுத்தி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Story first published: Wednesday, April 9, 2014, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X