ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வியக்க வைக்கும் கஸ்டமைஸ் வசதிகள்!!

By Saravana

தொழில்நுட்ப திறமையின் உச்சம் என்று கூறுவதையும் தாண்டி, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை உச்சாணியில் வைத்திருப்பதற்கு காரணம், வாடிக்கையாளர்களின் கனவுகளை நிஜமாக்கி தரும் கஸ்டமைஸ் கலைதான்.

ஆம், கடந்த ஆண்டுகளில் விற்பனையாகும் கார்களில் 85 சதவீதத்திற்கும் மேல் விற்பனையாகும் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்டமைஸ் வசதி என்றால் ஒரு சில மாடல்களை வைத்து அதற்கேற்றபடி வாடிக்கையாளர்களை தலையசைக்க வைப்பதல்ல.

வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும், உள்ளத்தையும் சரியாக புரிந்து கொண்டு காரை உருவாக்கி தரும் பணியை ரோல்ஸ்ராய்ஸ் செய்து வருகிறது. அவ்வாறு வாடிக்கையாளர்கள் சிலரின் விருப்பத்திற்கேற்ப ரோல்ஸ்ராய்ஸ் வடிவமைத்து கொடுத்த சில வசதிகளை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்

பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்

ஒரு கோடீஸ்வர வாடிக்கையாளர் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தனது காரின் கதவில் பிளாஸ்க் என்று அழைக்கப்படும் சேமசெப்புவை வைத்து தருமாறு வேண்டியுள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பிளாஸ்க் வைக்கப்பட்ட ஒரு கதவை உருவாக்கி அதனை கிராஷ் டெஸ்ட் செய்து பார்த்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ். அதன் பிறகு அதேபோன்று மற்றொரு கதவை பிளாஸ்க் வைக்கும் வசதியுடன் உருவாக்கி பொருத்தி கொடுத்தது.

பிக்னிக் செட்

பிக்னிக் செட்

இன்னொரு வாடிக்கையாளர் தனது விருப்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட பிக்னிக் செட்டை காரின் டிக்கியில் பொருத்தி தருமாறு வேண்டியுள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்ட பிக்னிக் செட்டை டிக்கியில் பொருத்தி கொடுத்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ்.

பாத்து, பத்திரமா...

பாத்து, பத்திரமா...

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவு நிபுணர்களின் கைவண்ணத்திலும், எண்ணத்திலும் உருவான ஒயின் கிளாஸ் வைப்பதற்கான பிரத்யேக அமைப்பு. கார் செல்லும்போது ஒயின் கிளாஸ் அலுங்கல் குலுங்கலில் உடையாதவாறு பூட்ரூமில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

 அட ராமா...

அட ராமா...

சீனாவை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 7 விதமான டிசைன் கொண்ட அலாய் வீல்களை ஆர்டர் செய்துள்ளார். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைன் கொண்ட அலாய் வீல் செட்டை மாட்டிக் கொண்டு செல்வதற்காகத்தான் அவை.

மேட்சிங் மேட்சிங்

மேட்சிங் மேட்சிங்

காரில் வெளியூர் செல்லும்போது எடுத்து செல்வதற்காக காருக்கு பொருந்தும் வகையிலான பெட்டுகள் மற்றும் பைகளை ரோல்ஸ்ராய்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் செய்து கொடுத்துள்ளது.

ஆபரண பெட்டி

ஆபரண பெட்டி

காரின் கிளவ் பாக்ஸில் உருவாக்கித் தரப்பட்டுள்ள ஆபரணப் பெட்டி.

உங்க இனிஷியல்...

உங்க இனிஷியல்...

வாடிக்கையாளர்களின் இனிஷியல்கள் கார் இருக்கையின் ஹெட்ரெஸ்ட்டில் பொறித்து தருகிறது ரோல்ஸ்ராய்ஸ்.

கலை நுணுக்கம்

கலை நுணுக்கம்

மிகுந்த கலை நுணுக்கமான மரவேலைப்பாடுகள் செய்து கொடுக்கப்படுகிறது.

நெகிழ வைக்கும் ஆர்ஆர்

நெகிழ வைக்கும் ஆர்ஆர்

ரோல்ஸ்ராய்ஸ் காரை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த தோட்டத்தில் உள்ள மரங்களை பயன்படுத்தி காரை அலங்காரம் செய்து கொள்ள முடியும். இது காருக்கும், உரிமையாளருக்குமான உறவை நிச்சயம் பல படி மேலே கொண்டு செல்லும்.

வண்ணமே வாழ்க்கை

வண்ணமே வாழ்க்கை

ஷோரூமுக்கு சென்றவுடன் 3 முதல் 5 வண்ணங்களை நீட்டுவார்கள். அதில் உங்களுக்கு விருப்பமான கலரை தேர்வு செய்து கூறினால் அது ஸ்டாக் இல்லை. அதுக்கு வெயிட்டிங் பீரியட் அதிகம் என்று எரிச்சல் படுத்துவர். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்களை நீங்கள் எந்தவொரு வெளிப்புற மற்றும் உட்புற வண்ணத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

 கடிகாரம்

கடிகாரம்

ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் இடம்பிடிக்கும் வாடிக்கையாளரகளை கவர்ந்த உயர்ரக கடிகாரம்.

 செலஸ்டியல் ஃபான்டம்

செலஸ்டியல் ஃபான்டம்

செலஸ்டியல் ஃபான்டம் ஸ்பெஷல் எடிசன் காரில் 446 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கப் ஹோல்டர்

கப் ஹோல்டர்

டிசைனர் அலெக்ஸ் இன்னிஸ் எண்ணத்தில் உருவான அலுமினிய கப் ஹோல்டர்கள். இதுபோன்று எண்ணற்ற கஸ்டமைஸ் வசதிகளை செய்து கொடுக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் சிறப்புகள், சுவாரஸ்யங்களை மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்ந்து கொள்கிறோம்.

Most Read Articles
English summary
Some outrageous Ways Rolls-Royce Can Customize Your Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X