விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வான்புலிகள் பயன்படுத்திய விமானம் பற்றியத் தகவல்கள்!

By Saravana

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது.

விடுதலைப்புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை குறித்து உலக நாடுகளை வியந்து பார்த்த காலம் இருந்தது. விடுதலைப்புலிகளின் வான் படை பிரிவின் வல்லமையை பெருக்கிக் கொண்ட விதம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தாக்குதல் விமானம் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வான் படைப்பிரிவு

வான் படைப்பிரிவு

விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவு வான்புலிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இளநீல வண்ணத்திலான வரிப்புலி சீருடையை அணிந்திருந்தனர். வானோடி என்ற வாசகம் பொருந்திய சின்னத்தை அணிந்திருந்தனர்.

வான்ப்படை பிரிவு துவக்கம்

வான்ப்படை பிரிவு துவக்கம்

வான்படை பிரிவு துவங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனை பல தசாப்தங்களுக்கு முன்னரே விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் துவங்கிவிட்டனர். 1985-86ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே வான்படையை துவங்குவதற்கு முயற்சிகள் துவங்கப்பட்டன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த 1998ம் ஆண்டு உயர்நீத்த விடுதலைப்புலிகளின் நினைவாக நடைபெறும் மாவீரர் தினத்தன்று, வான்புலிப் படைப்பிரிவு துவங்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வெளியிட்டார்.

துவக்க நிகழ்வு

துவக்க நிகழ்வு

வான்புலிகள் படைப்பிரிவு துவங்கப்பட்ட 1998ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று, வான்புலி படைப்பிரிவுக்கு சொந்தமான வானூர்திகள் வாயிலாக பூக்கள் தூவப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது இலங்கை அரசாங்கத்துக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது.

வான்புலிகள்...

வான்புலிகள்...

முதல்முறையாக 2000ம் ஆண்டில்தான் வான்புலிகள் என்று வான்படைப்பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டது. தவிரவும், Air tigers, Flying Tigers, Sky Tigers என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

படைப்பிரிவு தலைவர்

படைப்பிரிவு தலைவர்

கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் தலைமையில் வான்புலிகள் படைப்பிரிவு துவங்கப்பட்டது. இவர் சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை படித்தவர். அதன் பின்னர், ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவிலும் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவர். இவர்தான் வான்புலி அமைப்புக்கான அச்சாரங்களை போட்டவராக கருதப்படுகிறார்.

வியக்க வைத்த நுட்பங்கள்

வியக்க வைத்த நுட்பங்கள்

வான்படைப்பிரிவை நடத்துவதில் பல்வேறு தொழில்நுட்ப சவால்களும், பயிற்சிகளும் தேவைப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் வென்று உருவாக்கப்பட்ட வான்புலிகள் படைப்பிரிவு உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

இலங்கை உளவுத் துறை

இலங்கை உளவுத் துறை

வான்புலி படைப்பிரிவு குறித்து தெரிந்தது முதல் பேரதிர்ச்சி கொண்ட இலங்கை அரசு, தனது உளவுத் துறை மூலமாக மேற்கொண்ட அனைத்து ஆய்வுகளும் போதிய பலன் தரவில்லை. விடுதலைப்புலிகளிடம் இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை, எங்கிருந்து இயங்குகிறது என்பதை கூட தெரிந்துகொள்ள இயலாமல், இலங்கை அரசும், அதன் உளவுத் துறையும் தவித்தது. அத்துடன், உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பரவவிட்டனர்.

ஓடுதளம்

ஓடுதளம்

கடந்த 2005ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவின் ஓடுதளம் இரணைமடு என்ற இடத்தில் இருப்பதாக இலங்கை ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஓடுதளத்தின் இயக்கம் குறித்து சரியானத் தகவல்களை இலங்கை அரசால் பெற முடியவில்லை என்பதே உண்மை. முல்லைத்தீவிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஓடுதளங்கள் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

முதல் தாக்குதல்

முதல் தாக்குதல்

2006ம் ஆண்டு பலாலி வான்படைத் தளம் மீது வான்புலிகள் போர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 26ந் தேதி இலங்கை கட்டுநாயகா விமானப்படை தளத்தின் மீது வான்புலிகள் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதுதான் விடுதலைப்புலிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் தாக்குதல் நிகழ்வு. இது இலங்கை அரசை கதிகலங்க வைத்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

அதிர வைத்த வான்புலிகள்

அதிர வைத்த வான்புலிகள்

கட்டுநாயாக விமானப்படை தாக்குதல் நடத்தி ஒரு மாதத்தில், பலாலி ராணுவ தளம் மீது இரண்டாவது தாக்குதலை நடத்தினர் வான்புலிகள் படைப்பிரிவினர். இந்த அடுத்தடுத்த தாக்குதல்கள் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

 தொடர் தாக்குதல்கள்

தொடர் தாக்குதல்கள்

வான்புலிகள் படைப்பிரிவு இலங்கை ராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாய் மாறிப்போனது. அவர்களது விமானங்கள் தலைநகரில் ஊடுருவி தாக்குதல் நடத்தியதையே அவர்களால் ஜீரணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2007 அக்டோபரில் அனுராதபுரம் வான்படை தளத்தின் மீதும், 2008ம் ஆண்டு திரிகோணமலை துறைமுகத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தினர். 2008ம் ஆண்டு வவுனியா சிறப்பு படைத்தலமையம் மீதும்,2008ம் ஆண்டு மன்னாள் தள்ளாடி படைத்தளம் மீதும், 2009ம் ஆண்டு கொழும்பு நகரில் உள்ள வான்படையினரின் தலைமையகம் மீதும் தாக்குதல்களை நடத்தினர்.

தாக்குதல் முறை

தாக்குதல் முறை

வான்புலிகள் பிரிவு தற்கொலை தாக்குதல்களை நடத்தும் என நம்பப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தாய் தளத்திற்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போர் விமானங்கள் திரும்பியது இலங்கை ராணுவத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்த மற்றொரு விஷயம். இதனால், அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்தும் அச்சம் எழுந்தது.

தாக்குதல் நுட்பம்

தாக்குதல் நுட்பம்

கட்டுநாயகா விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான இரு போர் விமானங்கள், ஒரு பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

விமானங்கள்

விமானங்கள்

முதலில் இரண்டு முதல் 6 போர் விமானங்கள் வரை விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், கடைசி வரை எத்தனை விமானங்கள் இருந்தன என்பது புரியாத புதிராகவே உள்ளன.

 விமான மாடல்

விமான மாடல்

விடுதலைப்புலிகளிடம் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுத் தயாரிப்பான Zlin Z13 விமானங்களை பயன்படுத்தினர். மோரவேன் ஒட்ரோகேவிஸ் என்ற விமான நிறுவனம் தயாரித்தது.

 தயாரிப்பு ஆண்டு

தயாரிப்பு ஆண்டு

Zlin Z43 என்ற விமானத்தின் மேம்பட்ட் மாடலாக, 1992ம் ஆண்டு முதல் இசட்143 ரக விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 63க்கும் அதிகமான விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

 பயிற்சி விமானம்

பயிற்சி விமானம்

இந்த விமானங்கள் பயிற்சி செய்வதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. இதனாலேயே, இந்த விமானங்களை விடுதலைப்புலிகள் இயக்கம் வாங்கியது. ஒற்றை எஞ்சினுடன், 4 இருக்கைகள் கொண்ட விமான மாடல் இது.

அசர வைத்த மூளை

அசர வைத்த மூளை

இந்த விமானங்களை வாங்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், இந்த விமானத்தில் 4 வெடிகுண்டுகளை பொருத்தும் வசதியுடன் சொந்தமாகவே மாறுதல்களை செய்தனர்.

வேகம்

வேகம்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய Zlin Z 143 விமானம் அதிகபட்சமாக 273 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக இருந்தது. சராசரியாக 210 கிமீ வேகம் வரை பறக்கும்.

பயண தூரம்

பயண தூரம்

இந்த விமானத்தை 610 கிமீ தூரம் வரை பயணித்து திரும்பும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 3,800 மீட்டர் உயரத்தில் பறக்கும்.

 வீழ்ந்த விமானங்கள்

வீழ்ந்த விமானங்கள்

2008ம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியில் பறந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இலங்கை வான்படை அறிவித்தது. இதையடுத்து. 2009ம் ஆண்டு உச்சக்கட்ட போரின்போது கொழும்பு நகரில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு வான்புலிகள் இரண்டு விமானங்களில் சென்றனர். அந்த இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால், தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல் நிகழ்வில் வான்புலிகள் பிரிவை சேர்ந்த கேணல் ரூபன், லெப். கேணல் சிரித்திரன் ஆகியோர் வீர மரணம் அடைந்ததாக விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது.

குழப்பம்

குழப்பம்

2009ம் ஆண்டு போர் முடிவடைந்தவுடன், இலங்கை ராணுவம் மேற்கொண்ட முதல் வேட்டை என்ன தெரியுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் இருப்பதாக கருதப்பட்ட மேலும் 3 போர் விமானங்களை கண்டறிய சல்லடை போட்டு தேடினர். ஆனால், இறுதி வரை ஜென்ம பிரயேத்னங்களை மேற்கொண்டும் விமானங்கள் கிடைக்கவில்லை.

ராணுவத்திற்கு செலவிடுவதில் உலகின் டாப் 10 நாடுகள்... இந்தியாவை வாயடைக்க வைத்த சீனா!

ராணுவத்திற்கு செலவிடுவதில் உலகின் டாப் 10 நாடுகள்... இந்தியாவை வாயடைக்க வைத்த சீனா!

Source 1

Source 2

Source 3

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Some Unknown Facts About LTTE Fighter Aircrafts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X