பயணிகளுக்கு இடையே விமானத்தில் ஏற்பட்ட கலவரத்தை சாதுர்யமாக கையாண்ட பணிப்பெண்..!

பயணிகளுக்கு இடையே விமானத்திற்குள் ஏற்பட்ட சண்டை, பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

Written By:

விமானத்திற்குள் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை விமான பணிப்பெண் ஒருவர் சாதுர்யமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் டல்லாஸ் நகரில் இருந்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஓக்லேண்ட் நகருக்கு சென்று கொண்டிருந்தது.

பயணத்தின் நடுவே ஹாலிவுட் பர்பேங்க் விமான நிலையத்திற்கு சென்ற போது விமானத்தில் பயணிகள் சிலருக்கு இடையே திடீரென சண்டை மூண்டது.

பயணிகளில் இருவர் தங்களுக்குள் சரமாரியாக சண்டையிட்டுக்கொண்டனர். இதில் ஒருவருக்கு சரமாரியாக முகத்தில் குத்துகள் விழுந்தது.

இதனைக் கண்ட பெண் பயணிகள் கூச்சலிட்டவாறே அலறினர். ஏன் இந்த சண்டை ஏற்பட்டது என்ற காரணம் புரியாமல் சிலர் திகைத்து நின்றபடி வேக்கை பார்த்தனர்.

நேரம் செல்ல செல்ல சண்மை மிகவும் கடுமையானது, இருவரும் சீட்களுக்குள் மல்லுக்கட்டி அடித்துக் கொண்டனர்.

இந்த சண்டையை விலக்க யாரும் முன்வராத நிலையில், விமான பணிப்பெண் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

என்றாலும் சண்டை மிகவும் மோசமடைந்துகொண்டே சென்றது. மனம்தளராத விமானப் பணிப்பெண் கூச்சலிட்டு அவர்களுடன் மல்லுக்கட்டி சண்டையிட்டவர்களை பிரிக்க படாதபாடு பட்டார்.

பணிப்பெண்ணின் சாதுர்யத்தைக் கண்டு அவருக்கு உதவி புரியும் வகையில் பின்னர் பயணிகள் சிலரும் அவருடன் இணைந்து சண்டையை முடித்து வைத்தனர்.

பயணிகள் கடுமையாக மோதிக்கொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை தனது மொபைல் மூலம் பயணி ஒருவர் எடுத்துள்ளார். அவருக்கு சமீபத்தில் தான் கையில் காயம் ஏற்பட்டதால் அவரால் சண்டையை விலக்க முடியவில்லை என்று கூறினார்.

வீடியோவில் இரண்டு பேர் சண்டையிட்டுக்கொள்வதைக் காணமுடியும், என்றாலும் இந்த பிரச்சனையில் 3 பேர் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பர்பேங்க் விமான நிலைய காவலர்கள் சண்டையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

விமான பணிப்பெண்ணின் சாதுர்யத்தை சக பயணிகளும், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.

சரிவர சமீபகாலமாகவே விமான நிறுவனத்தினர் பயணிகளுக்கு சரிவர சேவை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக அமெரிக்காவில் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆண்கள் மூவர் கடுமையாக மோதிக்கொண்ட சண்டையில், தலையிட்டு பொறுப்புணர்வுடன் சமயோசிதமாக செயல்பட்ட விமான பணிப்பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடீயோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about video of fight which broke out in plane.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK