ஹம்மர் கார் பரிசு கொடுத்து ஸ்பாட் ஃபிக்ஸிங்? - ஸ்ரீசாந்த் 'திடுக்' வாக்குமூலம்!

முன்னணி வீரர்களுக்கு ஹம்மர் காரை சூதாட்டத் தரகர்கள் பரிசாக கொடுத்துள்ளதாக போலீசாரிடம் ஸ்ரீசாந்த் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டப் புகார் தொடர்பாக ஸ்ரீசாந்த்திடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது லேப்டாப், ஐபேட் உள்ளிட்ட சாதனங்களையும் போலீசார் கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத் தரகர்கள் ஹம்மர் கார், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்துள்ளதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், மதுவிருந்து, அழகிககள் சப்ளை செய்தும் முன்னணி வீரர்களை சூதாட்டத் தரகர்கள் தங்களது வலையில் வீழ்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையா?

உண்மையா?

இந்திய கிரிக்கெட் அணியில் ஹம்மர் காரை கேப்டன் டோணியும், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங்கும் வைத்துள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீசாந்த் கூறியிருக்கும் புகாரால் பரபரப்பு கூடியிருக்கிறது.

 ஸ்ரீசாந்த் தந்தை புகார்

ஸ்ரீசாந்த் தந்தை புகார்

ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டவுடன், கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் மீது ஸ்ரீசாந்த் தந்தை பரபரப்பு புகாரை தெரிவித்தார். தனது மகனை இருவரும் சேர்ந்து ஒழித்துக் கட்ட பார்ப்பதாக கூறிய அவர், பின்னர் அதனை வாபஸ் பெற்றதோடு, மன்னிப்பும் கேட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.

விலையுயர்ந்த பரிசுகள்

விலையுயர்ந்த பரிசுகள்

ஹம்மர் கார் மட்டுமின்றி பல விலையுயர்ந்த கார்களையும், கைக்கடிகாரங்களையும் முன்னணி வீரர்களுக்கு சூதாட்டத் தரகர்கள் பரிசாக வழங்கியுள்ளதாகவும், அவர்களின் பெயரையும் ஸ்ரீசாந்த் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசார் தீவிரம்

போலீசார் தீவிரம்

ஸ்ரீசாந்த் கூறியிருக்கும் புகார்கள் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். மேலும், ஸ்ரீசாந்தின் புகார்கள் குறித்து உடனடியாக உறுதிப்படுத்த இயலாது என்றும் டெல்லி போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலம் கேள்விக்குறி

எதிர்காலம் கேள்விக்குறி

கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோன்று, இந்த விவகாரம் ஒரு சில வீரர்களோடு நின்று விடாது என்று தெரிகிறது. இது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
During the course of police investigations of the spot-fixing episode, it has emerged that S Sreesanth revealed the names of prominent India players who were reportedly lured by bookies through expensive gifts. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X