திருடுபோய் 42 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்!

By Saravana

அமெரிக்காவில் திருடு போன ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் 42 ஆண்டுகளுக்கு மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் எட்கர் ஜான்சன் ஜூனியர். இவரது தந்தையிடம் 1954 மாடல் ஹார்லி டேவிட்சன் ஹைட்ரா கிளைட் மோட்டார்சைக்கிள் இருந்தது. இந்தநிலையில், 1972ம் ஆண்டு அந்த மோட்டார்சைக்கிள் திடீரென காணாமல் போனது.

Harley Bike

பல இடங்களில் தேடியும் அந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், திருடுபோய் 42 ஆண்டுகளுக்கு பின் அந்த மோட்டார்சைக்கிள் சமீபத்தில் மீட்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட இருந்த அந்த மோட்டார்சைக்கிளை அமெரிக்க சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.

பின்னர், அந்த மோட்டார்சைக்கிளை விசாரணைக்கு பிறகு உரிமையாளரான எட்கர் ஹோவர்டு ஜான்சனிடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், அவர் இறந்த தினத்தில் கூட இந்த மோட்டார்சைக்கிள் பற்றி பேசியதாகவும் எட்கர் கண்கலங்கி கூறினார்.

மேலும், தனது தந்தையிடம் இருந்து கிடைத்த பரிசாகவே இந்த மோட்டார்சைக்கிளை பார்ப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த மோட்டார்சைக்கிளை கண்டறிந்து கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜான்சன். மேலும், மோட்டார்சைக்கிளை மீட்டுக் கொடுத்தவர்களை போற்றும் விதத்தில் ஆட்டோ ஷோக்களில் இந்த மோட்டார்சைக்கிளை காட்சிக்கு வைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Most Read Articles
English summary
Stolen in 1972 from Edgar Howard Johnson a cop in North Carolina, a 1954 Harley Davidson Hydra-Glide was finally found on September 7 this year in Los Angeles after interception of U.S. Customs and Border Protection (CPB) officers. 
Story first published: Saturday, October 11, 2014, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X