இரண்டு சக்கரங்களில் கார் ஓட்டி சாகசம் புரிந்தவருக்கு ஜெயில் தண்டனை!

இரண்டு சக்கரங்களில் கார் ஒட்டி சாகசம் செய்த வீடியோ சமூக வலைத்தலத்தில் வைரலானதால் வாலிபர் ஒருவருக்கு ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

துபாய் தலைநகர் ஷார்ஜாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாலிபர் ஒருவர், ஸ்டண்ட் செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார்.

தன் திறமையை பறைசாற்றிட திருமண நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தவர், தனது காரை இரண்டு சக்கரங்களிலேயே சிறிது தூரம் ஓட்டிச் சென்று கூடியிருந்த உறவினர்களை வியக்க வைத்துள்ளார்.

வாலிபரின் இந்த சாகசத்தை படம்பிடித்த உறவினர் ஒருவர், அதனை
சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

காவல்துறையின் கவனத்திற்கு சென்ற வீடியோ குறித்து விசாரணை நடத்தியதில், பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டண்ட் செய்து வைரலான வீடியோ:

இது குறித்து ஷார்ஜா போக்குவரத்து துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "காரில் சாகசம் செய்த வாலிபர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்று வேண்டுமென்றே காரின் வெளிப்புறத்தில் படங்களை ஒட்டியும், பதிவு எண் பலகையை நீக்கியும் உள்ளார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்" என கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்ட போது போக்குவரத்து காவலர் ஒருவரின் கால் மீது சொகுசு காரில் வந்தவர் ஏற்றிச் சென்றதால், ரூ.30 கோடி மதிப்பிலான 10 சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாருதி பலீன ஆர்எஸ் காரின் படங்கள்:

Most Read Articles
English summary
A stunt video posted on social media has gone viral which lead to the arrest of the driver in Sharjah. The driver was driving his vehicle on two wheels.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X