தங்க நிறத்தில் தகதகக்கும் மலேசிய சுல்தானின் போயிங் ஜெட் விமானம்!

மலேசியாவிலுள் ஜோஹர் மாகாணத்தின் சுல்தானான இப்ராஹிம் இஸ்மாயில் மோட்டார் உலகத்தின் மீது தீராத பற்றுக் கொண்டவர் என்பதைவிட, அதில் மிகுந்த தனித்துவத்தை எதிர்பார்ப்பவர். அவரிடம் ஏராளமான கார்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன.

ஏன், கடந்த ஆண்டு உலகின் காஸ்ட்லியான மேக் டிரக் ஒன்றைகூட ஆர்டர் செய்து வாங்கி தனது கராஜில் நிறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், தனது உலகம் சுற்றும் ஆசையை தீர்த்துக் கொள்ளும் விதத்தில் புதிய தனிநபர் ஜெட் விமானத்தை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். அந்த விமானத்தின் கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

விமான மாடல்

விமான மாடல்

போயிங் 737- 800 ஜெட் விமானத்தில் சுல்தான் இப்ராஹிம் விருப்பத்திற்கு ஏற்ப வசதிகள் மற்றும் வண்ணப் பூச்சுகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவு இந்த விமானத்தை இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு கஸ்டமைஸ் செய்துள்ளது.

டெலிவிரி

டெலிவிரி

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்த விமானம் அமெரிக்காவிலிருந்து மலேசியாவுக்கு எடுத்து வரப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட்டது. அப்போது, விமானத்தை டெலிவிரி பெறுவதற்காக நேரில் விமான நிலையத்திற்கு வந்தததுடன், தனது விமானத்தை ஆர்வமாக சுற்றி பார்த்து ரசித்தார் சுல்தான் இப்ராஹீம்.

இப்போதைய பரபரப்பு

இப்போதைய பரபரப்பு

தற்போது இந்த விமானத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார் சுல்தான் இப்ராஹீம். மேற்கு ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்டு வரும் விடுமுறை காலத்தை கழிப்பதற்கான தங்களது சொகுசு இல்லத்தை காண்பதற்காக அங்கு சென்றிருக்கிறார். இப்போது மீடியாக்களின் கவனம் எல்லாம், இந்த விமானத்தை பற்றியதாகவே உள்ளது.

தங்க வண்ணம்

தங்க வண்ணம்

மலேசியாவின் ஜோஹர் மாகாண சுல்தானின் விமானம் தங்க வண்ண பூச்சால் தகதகக்கிறது. மேலும், நீல வண்ணக் கோடுகளும் ஜோஹர் மாகாணத்தின் அரசு சின்னமும் விமானத்தின் வால் பகுதியில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

சுல்தானின் விருப்பத்திற்கு ஏற்ப படுக்கையறை, மூன்று சமயலறைகள், பொழுதுபோக்கு அறை, சொகுசு இருக்கைகள் கொண்ட ஆலோசனை கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த விமானம் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் சுற்றும் திட்டம்

உலகம் சுற்றும் திட்டம்

தனது மூதாதையர்கள் கப்பலில் உலகை வலம் வந்ததாகவும், தான் இந்த விமானத்தில் உலகின் பல பகுதிகளை சுற்றி பார்க்க இருப்பதாகவும் சுல்தான் தெரிவித்துள்ளார். மேலும், ஜோஹர் மாகாணத்தின் பெருமைகளை உலக அளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விமானத்தை வாங்கியிருப்பதாகவும் சுல்தான் கூறியிருக்கிறார்.

பைலட் லைசென்ஸ்

பைலட் லைசென்ஸ்

ஜோஹர் சுல்தான் இப்ராஹீம் விமானத்தை இயக்கும் உரிமம் பெற்றவர். எனவே, இந்த விமானத்தை தானே இயக்குவதற்கு சிமுலேட்டர் மூலமாக விசேஷ பயிற்சியை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் குழு

அதிகாரிகள் குழு

இந்த விமானத்தில் 25 முதல் 30 பேர் வரை பயணிக்க முடியும். மேலும், தனது ஒவ்வொரு பயணத்தின்போதும் ஜோஹர் மாகாணத்தின் அதிகாரிகள் குழுவையும் உடன் அழைத்துச் செல்கிறார் சுல்தான்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

இந்த விமானம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சுல்தானுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இப்ராஹீம் இஸ்மாயிலின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் காஸ்ட்லி மேக் டிரக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய மலேசிய சுல்தான்!

உலகின் காஸ்ட்லி மேக் டிரக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய மலேசிய சுல்தான்!

Images Source 1

Images Source 2

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sultan Of Johor’s Golden Boeing 737 Private Jet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X