இந்தியாவுல சூப்பர் கார்களுக்கு நேர்ந்த மிக மோசமான நிகழ்வுகள்!

Written By:

இந்தியாவில் கார் வைத்திருப்பதும், அதனை ஓட்டிச் செல்வதும் சாகசம் நிறைந்த விஷயமாக மாறிவிட்டது. வாட்ச்மேன், சிசிடிவி கேமரா உள்ள வீடுகளில் கூட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களை கூட ஆட்டையை போட்டு விடுகின்றனர்.

அதைவிட்டு வெளியில் சென்றால் செல்ஃபி எடுக்க முண்டியடிப்பவர்களால் கீறல்கள் பரிசாக கிடைத்துவிடும். இந்த சூழலில் சூப்பர் கார்களை வைத்திருப்பவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக மாறியிருக்கிறது. பல கோடி மதிப்புடைய அந்த கார்கள் இந்தியாவில் படும் பாட்டை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

அனாதையான சொகுசு கார்கள்

திருட்டு கார்களை வெளிநாடுகளில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்வது தொடர்பாக மத்திய புலனாய்வு துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. அதனைத்தொடர்ந்து, இரண்டு விலை மதிப்புடைய கார்கள் ரோட்டிலேயே பல மாதங்கள் அனாதையாக கிடந்தன. பின்னர் இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Photo Credit: pakwheels.com

அலட்சியம்...

சில தினங்களுக்கு முன் மும்பையை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தனது மனைவிக்கு பரிசாக லம்போர்கினி கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த காரை எடுத்துக் கொண்டு ரவுண்டு சென்றார் அந்த எம்எல்ஏ மனைவி. புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த காரை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டோ மீது மோதினார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. சூப்பர் காரை ஓட்டுவதற்கு சற்று பயிற்சியும், கூடுதல் கவனமும் தேவை. ஆனால், இந்தியாவில் பணம் இருந்தால் எதைபற்றியும், அதாவது அடுத்தவர் உயிரை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை.

பகல் வேளைகளில் போக்குவரத்து நெரிசலால் தங்களது சூப்பர் கார்களை இன்ச் இன்ச்சாக ஓட்டி அயர்ந்து போன பல பணக்காரர்கள், இரவு நேரங்களில் காலியாக உள்ள சாலைகளில் அசுர வேகத்தில் ஓட்டி மகிழ்வது வாடிக்கையான சமாச்சாரம். ஆனால், மதுபோதையில் இதுபோன்று ஓட்டுவதால் சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகளின் உயிரை குடித்து விடுகின்றனர். டெல்லியில் இதுபோன்று நடந்த ஒரு விபத்தில் இளம் தொழிலதிபர் பலியானார். அந்த காரும் சுக்குநூறானது. சக்திவாய்ந்த கார்களை கட்டுப்படுத்தும் கலையை அறிந்து கொள்வது முக்கியம்.

போர்ஷே

படத்தில் பார்க்கும் போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரும் அதிவேகத்தால் கேட்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதிவேகத்தில் சென்ற இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. எனவே, இந்தியர்களுக்கு அதிவேக கார்களை ஓட்டுவதற்கு கூடுதல் பயிற்சியும், மனக்கட்டுப்பாட்டு கலையையும் கற்றுக் கொள்வது அவசியம் என்பது புலனாகிறது.

இதுவும் காரணம்...

மும்பையில் ஆடி ஆர்8 கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்த கார் தீப்பிடித்து எரிந்ததற்கு காரணமாக, அந்த காரின் எஞ்சினில் செய்யப்பட்ட மாறுதல்களை காரணம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, உள்ளூர் மெக்கானிக்குகள், டியூனிங் நிறுவனங்களை வைத்து சூப்பர் கார் எஞ்சின்களில் மாறுதல் செய்யும்போது இதுபோன்று உயிருக்கே ஆபத்தான விஷயத்தில் முடியலாம்.

சகஜமப்பா...

இந்த படத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் லம்போர்கினி சூப்பர் கார் ஒன்றை நாய் ஒன்று பதம் பார்ப்பதை காணலாம். இதுவும் இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அரிய விஷயம்.

Photo Credit: Team BHP

திணறிய புகாட்டி

உலகின் அதிவேக கார் மாடலான புகாட்டி வேரான் இந்திய சாலைகளில் பட்ட அவஸ்தையை இந்த ஒரு படம் கண் முன் நிறுத்துகிறது. ஆந்திராவில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கடக்க அந்த கார் பட்ட பாட்டை இந்த படம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு அளவிலும், வடிவிலும் வேகத்தடைகளை நம் நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்.

உஷார்...

டெல்லியில் லீ மெரிடியன் ஓட்டலில் லம்போர்கினி சூப்பர் கார் ஒன்றை பார்க்கிங் பகுதிக்கு எடுத்துச் செல்ல முயன்ற ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தூணில் மோதினார். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற கார்களை அடுத்தவர் கையில் கொடுப்பதும் தவறு. ஓட்டத் தெரியாதவர்கள் எடுப்பதும் தவறு.

Photo Credit: Indian Express

நம்ம நாட்ல மட்டுமில்லீங்க, எல்லா நாட்டிலேயும் இது சகஜம்தான். வாருங்கள் துபாய் சாலைகளை பார்த்து மனதை ஆற்றிக் கொள்வோமாக... !!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Friday, September 2, 2016, 14:46 [IST]
English summary
Read in Tamil language: Supercars Have Been Badly Treated In India
Please Wait while comments are loading...

Latest Photos