ரஜினிகாந்திற்குள் ஏற்பட்டுள்ள மாற்றம்; ஆடம்பர பி.எம்.டபுள்யூ எக்ஸ்5 காரில் வலம் வரும் சூப்பர் ஸ்டார்

Written By:

ரஜினிகாந்த் என்ற பெயருக்கு இந்தியாவில் ஒரு பெரிய மாஸ் இருந்தாலும். அவர் மிகவும் எளிமையான மனிதராகத்தான் வலம் வருவார்.

அவரது கார் கலெக்‌ஷன் கூட சாதரணமானது தான். ஃபியட், செவர்லே டவேரா போன்ற கார்களை பயன்படுத்தி வந்தவர், சமீபமாக இன்னோவா காரை பயன்படுத்தி வந்தார்.

ரஜினிகாந்த் என்ற பெயருக்கு இந்தியாவில் ஒரு பெரிய மாஸ் இருந்தாலும், அவர் மிகவும் எளிமையான மனிதராகத்தான் வலம் வருவார்.

அவரது கார் கலெக்‌ஷன் கூட சாதரணமானது தான். ஃபியட், செவர்லே டவேரா போன்ற கார்களை பயன்படுத்தி வந்தவர், சமீபமாக இன்னோவா காரை பயன்படுத்தி வந்தார்.

பெரியளவில் கார் ஓட்டுவதிலோ, ஹையரெண்டு கார்களை வாங்குவதிலோ விருப்பம் இல்லாதவர். ஆனால் பயணங்கள் மீது ரஜினிக்கு தீரா காதல் உண்டு.

தற்போதைய அரசியல் சூழலில் ரஜினிகாந்தின் பெயர் பெரிதாக அடிப்பட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில் கடந்த வாரத்தில் மூன்று நாட்களாக ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார்.

பல அதிரடி பேச்சுகள், சமீப அரசியல் சூழலை குறித்த விமர்சனங்கள் என மிகவும் காரசார நிகழ்வுக்கு மத்தியில் ரஜினிகாந்த் தற்போது புதிய மாடல் காரை பயன்படுத்த தொடங்கியிருப்பது தெரியவந்தது.

பெரும்பாலும் பெரிய பெரிய சந்திப்புகள், விழாக்கள், நிகழ்வுகள் என்று வந்தால், ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷின் பிஎம்டபுள்யூ எக்ஸ் 3 காரில் செல்வது தான் வழக்கம்.

ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் ரஜினிகாந்த புதிய நீல நிற பி.எம்.டபுள்யூ எக்ஸ் 5 எஸ்.யூ.வி காரில் ஜம்மென வந்து இறங்கினார்.

இம்பீரியல் ப்ளூ நிறத்தை கொண்ட ரஜினியின் எக்ஸ் 5 மிகவும் அசத்தலாக இருந்தது. ரூ.68 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை விலைபெற்ற இந்த கார், பிஎம்டபுள்யூ ஸ்போர்டஸ் மாடலில் டாப் மாடல் காராக இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் பலருக்கும் விருப்பத் தேர்வாக உள்ள பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 ரஜினியை வசீகரித்தத்தில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

எஸ்.யூ.வி ரகத்தில் டாப் மாடலாக உள்ள இதில் ஆடம்பரம், வசதி, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் என பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 காரில் 3.0 லிட்டர் இன்-லைன் சிக்ஸ் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 258 பிஎச்பி பவர் மற்றும் 580 என்எம் டார்க் திறனை வழங்கும் ஆற்றல் கொண்டது.

இதனுடைய டாப் காராக எம்.எஸ். ஸ்போர்டு மாடல் உல்ளது. மேலும் இதில் மேலும் ஒரு எம் வெர்ஷன் கொண்ட மாடலும் உள்ளது. பிஎம்டபுள்யூ எம் வெர்ஷன் இந்தியாவில் ரூ.1.8 கோடி விலை உடையது.

இந்தியாவில் பிஎம்டபுள்யூ எம் வெர்ஷன் காரை வைத்திருக்கும் பிரபலங்களின் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். ஆனால் ரஜினியிடம் இது போன்ற ஹையரெண்டு ஏதுமின்றி எக்ஸ் 5 மாடலை தான் வைத்துள்ளார்.

ரா-ஒன் படம் வெற்றியடைந்ததை அடுத்து, ஷாருக்கான் ரஜினிக்கு பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரை பரிசளிக்க எண்ணினார். ஆனால் ரஜினி அதை வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார்.

ரஜினிகாந்த் சமீப காலம் வரை இன்னோவா காரை பயன்படுத்தி வந்தார். அதற்கு முன்னதாக ஹோண்டா சிவிக் மற்றும் டவேரா கார்களை பயன்படுத்தினார்.

தற்போது ஹோண்டா சிவிக் காரை அவரது மனைவி லதா ரஜினிகாந்த பயன்படுத்தி வருகிறார்.

என்ன தான் தற்போது பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 காரை வாங்கிவிட்டாலும், ரஜினிகாந்தின் அதிக விருப்பத்திற்குரிய கார் பழைய ஃபியட் தான்.

காரணம், அவரது முதல் சம்பாதியத்தில் வாங்கி முதல் கார் ஃபியட் ஆகும். இன்றும் அந்த காரை ரஜினிகாந்த் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Wednesday, May 24, 2017, 13:57 [IST]
English summary
Superstar Rajinikanth Finally buys a India's most appreciated BMW X5 Luxury Car. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos