சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: வாடிக்கையாளர்கள் vs கார் உற்பத்தியாளர்கள் யாருக்கு வேட்டு?

மத்திய அரசின் பிஎஸ்-4 விதிமுறை அமல்படுத்தப்படும் காலக்கெடு நெருங்குவதால் பிஎஸ்3 கார்களுக்கு ஆஃபர்களை அள்ளித் தருகின்றன கார் நிறுவனங்கள். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் காரணமாக ஏற்பட்டுவரும் காற்று மாசுபாட்டை குறைக்க போராடி வரும் இந்திய அரசு, அதில் ஒரு பகுதியாக வாகனங்களால் ஏற்படும் மாசை குறைக்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ்-4 தர நெறிமுறைகளின்படி தயாரிக்கப்படும் இஞ்சின்களை பொருத்தி அனைத்து வாகனங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தியது.

நெருங்கும் ஏப்ரல் 1: வாடிக்கையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்களுக்கு விதித்த கெடு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 தர வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பின்னரும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்திய ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (SIAM) சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நெருங்கும் ஏப்ரல் 1: வாடிக்கையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் தற்போது வரை தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 வாகனங்களைன் எண்ணிக்கை குறித்த தகவல்களை அளிக்குமாறு இந்திய ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்களின் சம்மேளனத்திற்கு (SIAM) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நெருங்கும் ஏப்ரல் 1: வாடிக்கையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில்,

ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

நெருங்கும் ஏப்ரல் 1: வாடிக்கையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

முன்னதாக, பிஎஸ்-3 தரத்திலான 20,000 கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள், 7,50,000 இருசக்கர வாகனங்கள், 47,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 75,000 சரக்கு வாகனங்கள் இன்னமும் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆட்டொமொபைல் சம்மேளனம் அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நெருங்கும் ஏப்ரல் 1: வாடிக்கையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

ஆட்டொமொபைல் சம்மேளனத்தின் அறிக்கை அடிப்படையில் உச்சநீதிமன்றம்

முடிவு எடுக்க உள்ள நிலையில், ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்களுக்கு சாதகாமாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெருங்கும் ஏப்ரல் 1: வாடிக்கையாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

அரசின் புதிய விதிமுறைகள் அமலாகும் காலகட்டம் நெருங்கிவிட்டதால் தற்போது நெருக்கடி காரணமாக தங்களிடம் உள்ள பழைய பிஎஸ்-3 தர வாகனங்களுக்கு கார் மற்றும் இருசக்கர உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி அளித்து வருகிறது.


புதிய டாடா டிகோர் காம்பாக்ட் செடன் காரின் படங்களை இங்கு காணுங்கள்:

Most Read Articles
English summary
The Supreme Court has ordered vehicle manufacturers to disclose the number of unsold BS3 compliant vehicles still in stock as BS4 norms come into place.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X