கடைசி நம்பிக்கை... சுனாமியிலும் உயிர் தப்பிக்க உதவும் உயிர் மிதவை பந்து!

By Saravana

பெரு வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மனிதர்கள் உயிர் பிழைக்க உதவும் மிதவை பந்து போன்ற சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த சர்வைவல் கேப்சூல் நிறுவனத்தினர் உருவாக்கியிருக்கின்றனர்.

எந்தவொரு கடுமையான சீதோஷ்ண நிலையிலும் இந்த உயிர் காக்கும் பந்து சிறப்பாகவும், உறுதியாகவும் இருக்கும் வகையில் விசேஷ கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த புதிய சாதனம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கேப்சூல்

கேப்சூல்

Survival capsule என்று இதனை குறிப்பிடுகின்றனர். இந்த சர்வைவல் கேப்சூல் மூலமாக எந்தவொரு இயற்கை சீற்றத்திலும் உயிர் பிழைக்க முடியும் என்று கூறுகின்றனர் இதனை உருவாக்கிய பொறியாளர் குழுவினர்.

வலுவானது...

வலுவானது...

பார்ப்பதற்கு பெரிய பூமி உருண்டை போல காட்சியளிக்கும் இந்த பந்து போன்ற சாதனத்தின் உள்ளே உறுதியான உலோக கம்பிகள் மூலமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, இதன் வெளிப்புற அமைப்பும் மிக வலுவானது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இரண்டு பேர் முதல் 10 பேர் வரை அமரும் வசதி கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜனும் இந்த சர்வைவல் கேப்சூல் உள்ளே கிடைக்கும்.

விசேஷ ஜன்னல்

விசேஷ ஜன்னல்

வெளிப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கணித்து மீண்டும் வெளியேறும் வகையில் சிறிய கண்ணாடி ஜன்னல் உள்ளது.

காற்றழுத்த கட்டுப்பாடு

காற்றழுத்த கட்டுப்பாடு

உட்புறத்தில் காற்றழுத்தத்தை சீராக பராமரிக்கும் வகையில், குக்கர் போன்று விசேஷ துளை ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறத்திலிருந்து காற்று அல்லது நீர் உள்ளே புகாதவாறு ஒருவழிப்பாதை நுட்பம் மூலமாக கூடுதல் காற்றழுத்தம் வெளியேற்றும் அம்சம் கொண்டது.

மூடி

மூடி

இந்த சர்வைவல் கேப்சூலில் கொடுக்கப்பட்டிருக்கும் கதவை வெளியிலிருந்தும், உள்புறத்திலும் திறக்க முடியும். அத்துடன், நீர்மூழ்கி சாதனங்களில் இருப்பது போன்ற கதவு அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், உள்ளே பிட்டு நீர் கூட புகாது.

உணவு பொருட்கள்

உணவு பொருட்கள்

ஒருவருக்கு 5 நாட்களுக்கு தேவையான பிஸ்கட், தண்ணீர் போன்ற உணவுப் பொருட்களை வைப்பதற்கான வசதியும் உள்ளது. இதனால், நிலநடுக்கத்தின்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொள்பவர்கள் எளிதாக தப்பிக்க வழியுண்டு.

சுனாமியிலும்...

சுனாமியிலும்...

சுனாமி, பெரு வெள்ளம் ஏற்படும்போது இந்த சர்வைவல் கேப்சூல் மூலமாக தப்பிக்க முடியும். இந்த கேப்சூல் எந்த இடத்தில் மோதினாலும் சேதமடையாது. அதேபோன்று, கூர்மையான உலோகங்கள் போன்றவை மோதினாலும், பாதிப்பு ஏற்படாத வகையில் மிக வலுவான கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

மிதக்கும்

மிதக்கும்

தண்ணீரில் செல்லும்போது கீழ்பாகத்தில் உள்ள பலூன் போன்ற அமைப்பு மூலமாக மிதந்து செல்லும். மேலும், இது கவிழாமல் நேராக செல்லும் வகையிலும் அந்த பலூன் அமைப்பு சமன் செய்து கொடுக்கும்.

விளக்கு

விளக்கு

இரவு நேரத்தில் ஆபத்து ஏற்பட்டாலும் எளிதாக ஏறும் வகையில், சிறிய விளக்கு ஒன்றும் இதில் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே, எளிதாக தப்பிக்க முடியும்.

கழிவறை

கழிவறை

கார்களுக்கு கூடுதலாக கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவது போன்றே, இந்த உயிர் காக்கும் பந்திற்கும் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதில், கழிவறை மற்றும் மியூசிக் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன.

ஐடியா

ஐடியா

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியின்போது லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்போதுதான் இந்த உயிர் காக்கும் சாதனத்தை உருவாக்கும் ஐடியா தோன்றியதாக இதனை உருவாக்கிய பொறியாளர் குழு தெரிவிக்கிறது.

ஆர்டர்

ஆர்டர்

தற்போது இறுதிக் கட்ட சோதனையில் இருக்கும் இந்த சாதனத்திற்கு ஆர்டர் பெறப்படுகிறது. மேலும், இதனை அதிக அளவில் உற்பத்தி செய்தால்தான் விலை குறையும். எனவே, அதற்கான முதலீட்டை பெறும் முயற்சிகளிலும் இந்த நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Survival Capsule offers safety from the Tsunami.
Story first published: Tuesday, May 24, 2016, 16:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X