சாலையில் சென்ற கார் வீட்டின் கூரையின் மீது ஏறியது எப்படி?

Written By:

சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது என்பது சகஜமான ஒன்று தான். உயிர்பலியோ அல்லது பொருட்சேதமோ ஏற்படுவது மீகவும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சில விபத்துகள் மிகவும் வினோதமாக நடந்து முடிகிறது. அது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதைப்போல ஒரு கார் விபத்து சீனாவில் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள சாலை ஒன்றில் வேகமாக சென்ற ஹோண்டா எஸ்யூவி கார் ஒன்று, திடிரென கட்டுப்பாட்டை இழந்து சென்று அருகிலிருந்த வீட்டின் கூரை மீது ஏறி நின்றது. இது பார்த்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குறுக்கே சென்ற ஒரு மூன்றுசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க காரை திடிரென திருப்பியபோது, அது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிச் சென்று சாலையின் அருகே சற்று தாழ்வாக இருந்த வீட்டின் கூரை ஒன்றின் மீது போய் ஏறி நின்றது. இது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

வீட்டின் கூரை மீது ஏறி நின்ற காரில் இருந்த ஓட்டுநர், அரை மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் கூரை மீது சீக்கித் தவித்துள்ளார். பின்னர், ஏணி கொண்டுவரப்பட்டு அருகிலி இருந்தவர்களால் அவர் மீட்கப்பட்டார். இது குறித்து சீன காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்:

English summary
It is said that the driver pressed the accelerator pedal, changing directions and skidding off the road and landing on the roof.
Please Wait while comments are loading...

Latest Photos