டிரக்குகளுக்கான உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை...!!

By Saravana Rajan

மின்சார ரயில்கள் இயங்குவது போன்றே, டிரக்குகளை இயக்குவதற்கான உலகின் மின் மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை ஸ்வீடனில் திறக்கப்பட்டிருக்கிறது.

மிகச் சிறப்பான தொழில்நுட்பமாக திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்த மின்மயமாக்கப்பட்ட சாலை குறித்த கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

உலக அளவில் போக்குவரத்து சாதனங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் சீமென்ஸ் ஏஜி மற்றும் டிரக் தயாரிப்பில் புகழ்பெற்ற ஸ்கானியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த மின்மயமாக்கப்பட்ட சாலை திட்டத்தை உருவாக்கியிருக்கின்றன.

மின்மயம்

மின்மயம்

மின்சார ரயில்கள் மின்சார கம்பி வடத்தை தொட்டுக் கொண்டு செல்வது போலவேதான் இந்த சாலையின் அமைப்பும். பெரிய வேறுபாடுகள் இல்லை. சாலையின் பக்கவாட்டில் உள்ள கம்பங்கள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் மின் கம்பி வடத்தை தொட்டுக் கொண்டே பயணிக்கின்றன டிரக்குகள்.

விசேஷ தொழில்நுட்பம்

விசேஷ தொழில்நுட்பம்

இந்த மின்மயமாக்கப்பட்ட பாதையில் செல்வதற்காக, ஸ்கானியா டிரக்குகளில் மேலே மின்சார கம்பியை தொட்டுக் கொண்டே செல்வதற்கான விசேஷ ஹைட்ராலிக் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வேண்டும்போது மேலே தூக்கிக் கொண்டு மின் கம்பியை தொட்டுக் கொண்டே பயணிக்கும். தேவையில்லாதபோது மடக்கிக் கொள்ளும்.

 ஹைபிரிட் டிரக்

ஹைபிரிட் டிரக்

இந்த மின்பாதையில் செல்வதற்காக விசேஷ ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட டிரக்குகளை ஸ்கானியாக தயாரித்துள்ளது. கம்பி வழியாக கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, மின்மோட்டார்கள் மூலமாக டிரக் செல்லும். சில வேளைகளில் பிற வாகனங்களை முந்துவதற்கான சூழல்களில் கம்பி வட தொடர்பு நின்றுபோகும்போது, டீசல் எஞ்சினில் உடனடியாக டிரக் இயங்கும்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

இந்த புதிய மின்மயமாக்கப்பட்ட சாலை திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. மேலும், சரக்கு போக்குவரத்தில், மரபு சார் எரிபொருளை நம்பி இருக்கும் சூழலையும் இது மாற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

மரபுசார் எரிபொருளில் இயங்கும் கனரக வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு ஏற்படுகிறது. ஆனால், இந்த மின்மயமாக்கப்பட்ட பாதை திட்டம் மூலமாக, புகை வெளியேற்றத்தை வெகுவாக குறைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 வரவேற்பு

வரவேற்பு

ஸ்வீடன் நாட்டின் மத்திய பகுதி வழியாக செல்லும் E16 நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மின்மயமாக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு டிராம் ரயில் போன்றே தோன்றுகிறது.

 அடுத்தது...

அடுத்தது...

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலும் இதுபோன்றதொரு மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையை சீமென்ஸ் நிறுவனம் அமைந்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்த சாலை திறக்கப்பட்ட சோதனை ஓட்டங்கள் துவங்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Sweden Opens World’s First Electric Highway.
Story first published: Friday, June 24, 2016, 12:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X