12 மணிநேரத்தில் டெல்லி டு மும்பை... வரப்பிரசாதமாகும் டால்கோ!

Written By:

அதிவேக ரயில்களை இயக்கும் முனைப்பில், ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயிலை இந்திய ரயில்வே துறை சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்த ஆய்வு திருப்திகரமாக இருந்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், சில வாரங்கள் இடைவெளிக்கு பின்னர், டால்கோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்றுமுன்தினம் மீண்டும் நடந்தது. டெல்லியில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு டால்கோ ரயில், நள்ளிரவு 2.57 மணிக்கு மும்பையை அடைய வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டது.

குறித்த நேரத்தில் டெல்லியில் டால்கோ ரயில் புறப்பட்டது. ஆனால், வழியில் சில நடைமுறை பிரச்னைகளால் 17 நிமிடங்கள் தாமதமாக 3.14 மணிக்கு மும்பைக்கு வந்து சேர்ந்தது. இருப்பினும், ராஜ்தானி, சதாப்தி ரயில்களுடன் ஒப்பிடும்போது, டால்கோ ரயிலின் பயண நேரம் 5 மணி நேரம் வரை குறைவாக இருக்கிறது.

இதனால், பயணிகள் மத்தியில் இந்த டால்கோ ரயில் பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து மும்பைக்கு நாளை இறுதி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தின்போது சரியாக 12 மணிநேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை தொடுவதற்கு டால்கோவுக்கு இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 150 கிமீ வேகத்தில் டால்கோ ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, மணிக்கு 180 கிமீ வேகத்தை டால்கோ ரயில் தொட்டிருப்பதால், இந்த வேகம் என்பது எளிதாக எட்டக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், டால்கோ ரயிலின் சராசரி வேகமும் மிக அதிகம் என்பதால் பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தனியார் டாக்சி நிறுவனங்கள், ஆம்னி பஸ் போல ராஜ்தானி, துரந்தோ ரயில்களின் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் இன்று தடாலடியாக மாற்றியமைத்துள்ளது.

எனவே, டால்கோ ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டாலும், அதன் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். எனவே, இது சாதாரண மக்களுக்கான அதிவேக ரயிலாக இருக்காது என்று கருதப்படுகிறது.

சென்னையிலிருந்து பெங்களூருக்கு டால்கோ ரயிலை சோதனை ஓட்டம் நடத்த தெற்கு ரயில்வே முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும்பட்சத்தில், 3 மணிநேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் சென்றுவிடும் வாய்ப்பு ஏற்படும்.

எளிமையான முறையில் கார் இன்ஸ்யூரன்ஸ் செய்யும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை எடுப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Friday, September 9, 2016, 15:48 [IST]
English summary
Read in Tamil: The Spanish Talgo train has been undertaking high-speed runs between Delhi and Mumbai for some time now and its high speed, Rajdhani beating test runs.
Please Wait while comments are loading...

Latest Photos