ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கினார் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி இருக்கிறார்.

Written By:

நடிகராக மட்டுமில்லாமல், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட திரை நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். 'கொலவெறி' பாடல் மூலமாக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் முணுமுணுக்கும் நபராக மாறினார்.

திரைத்துறை மீது நடிகர் தனுஷுக்கு எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தளவுக்கு அவருக்கு கார்கள் மீதும் ஆர்வம் அதிகம். அவரிடம் ஆடி ஏ8 உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. அண்மையில் ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி விட்டதாக ஒரு தகவலும் உலா வந்தது. இதுகுறித்து தனுஷ் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

காரை பெற்றுக் கொண்ட தனுஷ்!

இந்த நிலையில், சற்று வித்தியாசமான ரசனையுடன் புதிய ஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியிருக்கிறார். சமீபத்தில் அந்த கருப்பு வண்ண ஃபோர்டு மஸ்டாங் கார் அவரது வீட்டில் வைத்து டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் தனுஷ் டீம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. காரின் சாவியை அவர் பெற்றுக் கொண்டு கை குலுக்கும் படங்கள் அந்த க்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மஸில் ரக கார்

அமெரிக்க கார் சந்தையின் மிகவும் தனித்துவமான கார் மாடல்களாக வர்ணிக்கப்படும் மஸில் கார் ரகத்தை சேர்ந்த ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார். 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த கார் கால மாற்றத்துக்கு தக்க வாறு வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இன்றளவும் பெரும் திரளான ரசிகர்களையும், வாடிக்கையாளர்களையும் தக்க வைத்து வருகிறது.

புதிய மாடல்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகால வரலாற்றில் இடது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு 6-ம் தலைமுறையாக வெளியான ஃபோர்டு மஸ்டாங் காரில் முதல்முறையாக வலது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பும் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் அறிமுகம்

இந்த நிலையில், கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த காரை ஃபோர்டு நிறுவனம் இந்தியர்களின் பார்வைக்கு அறிமுகம் செய்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பவர்ஃபுல் எஞ்சின்

மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மஸ்டாங் காரின் அதிசக்திவாய்ந்த ஜிடி மாடல் விற்பனைக்கு வந்தது. இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 395 பிஎச்பி பவரையும், 542 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாப் ஸ்பீடு

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாகவும் கியர் மாற்ற முடியும்.

மைலேஜ்

இதுபோன்ற கார்களை வாங்குவோர் மைலேஜை பற்றி பேசக்கூடாது என்ற எழுதப்படாத விதிமுறை உண்டு. இருந்தாலும், வாசகர்களுக்கு இந்த காரின் மைலேஜ் விபரத்தை பகிர்ந்து கொள்கிறோம். இந்த கார் லிட்டருக்கு 7.4 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஃபோர்டு. அப்படியானால், நடைமுறையில் லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ் தரும். டிரிஃப்ட் சாகசம் செய்யும்போது இந்த மைலேஜ் இன்னமும் குறையலாம்.

விசேஷ நுட்பம்

இந்த காரில் லைன் லாக் என்ற விசேஷ தொழில்நுட்பம் உள்ளது. இதன்மூலமாக, . முன்சக்கரங்களை பிரேக்குகள் சுழல விடாமல் தடுத்து, பின்புற சக்கரங்களை மட்டும் சுழல செய்யும். டிரிஃப்ட் செய்யும்போது இந்த தொழில்நுட்பம் மிகவும் பயன்படும்.

வசதிகள்

இருள் வந்தால் தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், முன்புறத்தில் செல்லும் வாகனங்களை உணர்ந்து கொண்டு வேகத்தை கூட்டிக் குறைத்து செல்லும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பாக்கெட்டில் சாவியை வைத்துக் கொண்டு பட்டனை அழுத்தி கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட், மழை வந்தால் தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு வசதிகள்

டயரில் காற்றழுத்தம் குறைந்தால் எச்சரிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், விபத்தின்போது பயணிகளை காக்கும் காற்றுப் பைகள், நவீன பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இந்த அதிசெயல்திறன் மிக் காருக்கு பக்கபலமாக இருக்கும்.

புதிய சஸ்பென்ஷன்

முதல்முறையாக ஃபோர்டு மஸ்டாங் காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை வெளிவந்த மஸ்டாங் கார்களிலேயே இதுதான் மிகச்சிறப்பாக கையாளுமை கொண்டதாக இருக்கும்.

விலை விபரம்

ரூ.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இந்தியா வந்தது. ஆனால், வரிகள் உட்பட இந்த காரின் விலை ரூ.70 லட்சத்தை தாண்டும் வாய்ப்புள்ளது. அதேநேரம், அமெரிக்காவில் இந்த கார் ரூ.25 லட்சம் என்ற இந்திய மதிப்பில்தான் விற்பனையாகிறது. ஆனால், இந்த கார் இறக்குமதி மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளதும், ரூபாய் மதிப்பும் சேர்ந்து அதிக விலை கொண்ட மாடலாக இதனை மாற்றியிருக்கிறது.

விற்பனை முக்கியமல்ல...

இந்தியாவில் ஃபோர்டு மஸ்டாங் காரை அறிமுகம் செய்ததே, பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்காகத்தான் என்று ஃபோர்டு குறிப்பிட்டது. அதன்படியே, பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியை தொடர்ந்து தற்போது ஃபோர்டு மஸ்டாங் கார் வாங்கியிருக்கும் இந்தியாவின் இரண்டாவது பிரபல திரை நட்சத்திரம் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் கலெக்ஷன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரும்பி வாங்கிய கார்கள் மற்றும் பயன்படுத்தும் கார் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நடிகர் விஜய்க்கு பிடித்த கார் பிராண்டு எது தெரியுமா?

ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிவிட்டாலும், நடிகர் விஜய்க்கு பிடித்த கார் மற்றும் அவரிடம் இருக்கும் கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் பஜாஜ் டோமினார் பைக்கை கீழே உள்ள கேலரியில் கண்குளிர கண்டுரசியுங்கள்!

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, January 5, 2017, 16:52 [IST]
English summary
Tamil Actor Dhanush Bought A Ford Mustang Sports Car.
Please Wait while comments are loading...

Latest Photos

Latest Videos

New Launches