கலிஃபோர்னியாவை ஃபெராரி கலிஃபோர்னியா காரில் கலக்கிய இசையமைப்பாளர் அனிருத்!

By Saravana

தமிழ் சினிமாத் துறையின் கலக்கல் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் அனிருத். டீன்- ஏஜ்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்யும் இசைக் கோர்வைகளை தொடர்ந்து வழங்கி ரசிகர்களிடையே கொண்டாடப்படும் இசை நாயகனாக உருவெடுத்துள்ளார்.

இந்தநிலையில், கத்தி படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் கலிஃபோர்னியாவிலிருந்து லாஸ் வேகாஸ் நகருக்கு ஃபெராரி கலிஃபோர்னியா காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஃபெராரி காரை ஓட்ட வேண்டும் என்பது தனது இளம் வயது கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபெராரி காரை ஓட்டவேண்டும், உரிமையாக்க வேண்டும் என்பது கார் பிரியர்களுக்கு பொதுவானது என்பதை நிரூபிக்கும் விதத்திலான இந்த நிகழ்வை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளார்.

ஃபெராரி காருடன் அனிருத் எடுத்த படங்கள் மற்றும் ஃபெராரி கலிஃபோர்னியா காரின் சிறப்பம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 அறிமுகம்

அறிமுகம்

2008ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் ஃபெராரி கலிஃபோர்னியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படையில் மஸராட்டிக்காக உருவாக்கப்பட்ட கான்செப்ட் மாடல்தான் இது என்றும், உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரிக்கும் என்ற அச்சத்தால், ஃபெராரி பேட்ஜை குத்தி, இந்த காரை ஃபியட் குழுமம் வெளியிட்டதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் ஆணித்தரமாக தெரிவித்தன. ஆனால், இதற்கு ஃபியட் குழுமம் மறுப்பு தெரிவித்தது.

 ஃபெராரி கலிஃபோர்னியா பெயர்

ஃபெராரி கலிஃபோர்னியா பெயர்

1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபெராரி 250ஜிடி காரின் கலிஃபோர்னியா பெயரை மீண்டும் இந்த காருக்கு பயன்படுத்தியது ஃபெராரி நிறுவனம். ஆனால், இதனை ஃபியட் குழுமம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

2012ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கூடுதல் சக்தியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, கடந்த ஆண்டு பிரத்யேக அம்சங்கள் கொண்ட கலிஃபோர்னியா எச்எஸ் என்ற மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த ஆண்டு கலிஃபோர்னியா டி என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெட்டலில் உருவான பாடி, புதிய இன்டிரியர், புதிய சேஸீ மற்றும் டர்போசார்ஜ்டு எஞ்சின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 'முதல்' பெருமைகள்

'முதல்' பெருமைகள்

இந்த கார் பல புதிய சிறப்பம்சங்கள் கொண்ட முதல் ஃபெராரி கார் என்ற பெருமைக்குரியது. அவற்றை கீழே காணலாம்.

  • முன்புற எஞ்சின் அமைப்பு
  • 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்
  • உலோகத்தால் ஆன திறந்து மூடும் கூரை
  • மல்டி- லிங்க் ரியர் சஸ்பென்ஷன்
  • டைரக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம்
  •  ஏரோடைனமிக்ஸ் சோதனை

    ஏரோடைனமிக்ஸ் சோதனை

    இதன் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதன் மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்ட ஸ்கேல் மாடலை 1,000 மணிநேரம் 'விண்ட் டியூனல்' சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஃபெராரி எஃப்- 12 பெர்லினேட்டா அறிமுகம் செய்வதற்கு முன்பு வரை அறிமுகமான ஃபெராரி கார்களிலேயே மிகச்சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்ட காராக இது பெருமை பெற்றது.

    புதிய உற்பத்தி பிரிவு

    புதிய உற்பத்தி பிரிவு

    இத்தாலியின் மரனெல்லோ பகுதியிலுள்ள ஃபெராரி ஆலையையொட்டி, இந்த காருக்காக புதிய உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டது.

    எஞ்சின்

    எஞ்சின்

    பாஷ் நிறுவனம் தயாரித்து கொடுத்த டைரக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய 4,297சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 453பிஎச்பி பவரைும், 485என்எம் டார்க்கையும் வழங்கும். டர்போசார்ஜர், சூப்பர்சார்ஜர் இல்லாமல், 453 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது.

    பெர்ஃபார்மென்ஸ்

    பெர்ஃபார்மென்ஸ்

    அதிகபட்சமாக மணிக்கு 310கிமீ வேகம் வரை எட்டக்கூடிய திறன் படைத்த இந்த கிரான்ட் டூரிங் ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும். 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எடை 30 கிலோ வரை குறைக்கப்பட்டதுடன், 30 பிஎஸ் பவரும் கூடுதலாக்கப்பட்டது.

    ரீகால்

    ரீகால்

    எஞ்சின் கிராங்சாஃப்டில் இருந்த பிரச்னையால் எஞ்சின் செயலிழக்கும் அபாயமும், இல்லையெனில் விபத்தில் சிக்கும் அபாயமும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2012ம் ஆண்டில் ஃபெராரி கலிஃபோர்னியா கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன.

    விலை

    விலை

    இந்தியாவிலும் விற்பனையில் இருக்கும் இந்த கார் ரூ.2.50 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
The young Tamil music composer Anirudh is in the U.S and has taken ride from California to Vegas in a red Ferrari.
Story first published: Monday, November 10, 2014, 9:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X