வாகன ஓட்டிகளே உஷார்... தமிழகத்தில் கடுமையாக்கப்படும் சாலை விதிகள்!!

Written By:

சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 2016ல் 73,431 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த விபத்துகளில் மொத்தம் 17,128 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிப்பட்டுள்ளது.

2016க்கு பிறகு தமிழக அரசும் மற்றும் காவல்துறையும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் பல சாலை விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தாண்டு மார்ச் மாதம் வரை தமிழகத்தில் மொத்தம் 16,576 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இதில் மொத்தம் 4,148 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மீதிபேர் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டவர்கள்.

இந்த எண்ணிக்கை தமிழக அரசின் சாலை பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகளில் வளர்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டில் நடைபெற்ற 4,148 விபத்துகளில் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாலை விதிகளை பின்பற்றாததே அதிக எண்ணிக்கையில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

சாலைகளில் பயணிக்கும் போதும், அதற்கேற்ற விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவது பல உயிரழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

இதனால் இதை மேலும் வளரவிடாமல் தடுக்க தமிழக அரசு சாலை போக்குவரத்து விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 1988 மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் மத்திய மோட்டார் வாகன விதி 1989 தொடர்பான பிரிவுகளின் படி சில உரிமைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம், சிவப்பு விளக்கை தாண்டுதல், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு, ஓட்டுநரின் உரிமத்தை தகுதியிழப்பு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சாலை விதிமீறல்கள் செய்பவர்களின் உரிமங்களை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தகுதியிழப்பு செய்ய காவல் துறை அதிகாரிகள் கோரப்பட்டுள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Friday, May 26, 2017, 13:38 [IST]
English summary
Tamil Nadu Government makes Strong measures in Traffic Rules. Due to Take some Prevention Activities for Road Traveling
Please Wait while comments are loading...

Latest Photos