காவேரி எஞ்சினுடன் சுதேசியாக மாறும் தேஜஸ் போர் விமானம்!

தேஜஸ் போர் விமானத்தில் காவேரி ஜெட் எஞ்சினை பொருத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சியின் சாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

போர் விமானத்தை தயாரிப்பது மிகவும் சிக்கலான, தொழில்நுட்ப வல்லமை வாய்ந்த விஷயம். அதிலும், போர் விமானத்துக்கான எஞ்சினை தயாரிப்பது அதனைவிட கடினமான காரியம்.

ஆனால், அந்த திட்டத்தை கையில் எடுத்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றனர் இந்திய வல்லுனர்கள். ஓரளவு என்று குறிப்பிடுவதற்கு தேஜஸ் போர் விமானம் முற்றிலும் சுதேசி விமானமாக கருத முடியாததுதான்.

அமெரிக்க எஞ்சின்

ஏனெனில், தேஜஸ் போர் விமானத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஜிஇ நிறுவனத்திடமிருந்து எஞ்சின்கள் பெற்று பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை, நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எஞ்சினை பொருத்தியிருந்தால், அது முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பாக பெருமை கொள்ள முடியும்.

சுதேசி ஜெட் எஞ்சின்

அதேநேரத்தில், தேஜஸ் போர் விமானத்துக்கான ஜெட் எஞ்சினை தயாரிக்க நம் நாட்டு வல்லுனர் குழு தவறவில்லை. அதற்காக உருவாக்கப்பட்ட காவேரி எஞ்சின் போர் விமானத்திற்கு ஈடுகொடுக்கும் செயல்திறனை வெளிப்படுத்த இயலாததால், காவேரி எஞ்சின் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சோதனை

மொத்தம் 3,000 மணிநேரம் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஐஎல்-76 விமானத்தில் பொருத்தி 30 மணிநேரம் சோதனை செய்யப்பட்டது. ஆனால், தேஜஸ் போர் விமானத்தில் பொருத்துவதற்கான தகுதியை பெற வில்லை.

முதலீடு

கிட்டத்தட்ட ரூ.2,000 செலவில் உருவாக்கப்பட்ட அந்த எஞ்சின் தேஜஸ் போர் விமானத்தில் இடம்பெற முடியாமல் போனது பெரும் ஏமாற்றம்தான். ஆனால், தற்போது காவேரி எஞ்சினுக்கு புதுவாழ்வு கிடைக்க இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டு உதவி

ஆம், ரஃபேல் போர் விமானங்களுக்கான எஞ்சினை தயாரித்து கொடுத்து வரும் பிரான்ஸ் நாட்டின் சஃப்ரான் [முன்னர் ஸ்நெக்மா] நிறுவனம் காவேரி எஞ்சினை மேம்படுத்தி தருவதற்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இதற்காக டிஆர்டிஓ மற்றும் சஃப்ரான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தும் பணி

அடுத்த 18 மாதங்களில் காவேரி எஞ்சினை மேம்படுத்தி தருவதற்கான உறுதியையும் சஃப்ரான் வழங்கியிருக்கிறது. 2018ம் ஆண்டு தேஜஸ் போர் விமானத்தில் காவேரி எஞ்சினை பொருத்தி முதல்கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

இதற்காக, ரூ.600 கோடி வரை செலவிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவேரி எஞ்சினின் செயல்திறனை மேம்படுத்தி தருவதுடன், அதனை தேஜஸ் போர் விமானத்தில் பொருத்துவதற்கான தர உறுதி சான்றையும் சஃப்ரான் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாதக அம்சங்கள்

காவேரி எஞ்சினை மேம்படுத்துவதன் மூலமாக பல சாதக அம்சங்கள் உள்ளன. தேஜஸ் போர் விமானத்தில் மட்டுமில்லாமல், ஆள் இல்லா விமானங்கள், புதிய போர் விமானங்களிலும் பயன்படுத்த முடியும்.

ஏற்றுமதி

அத்துடன், தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு சில வெளிநாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. தேஜஸ் போர் விமானத்தை வாங்கும் வெளிநாடுகள், எஞ்சின் சப்ளை செய்யும் நிறுவனம் மற்றும் அந்நாட்டு அரசுடன் மற்றொரு ஒப்பந்தம் செய்ய வேண்டி வரும். உள்நாட்டு தயாரிப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒப்பந்தம் போதும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
Story first published: Friday, December 2, 2016, 13:07 [IST]
English summary
Tejas Fighter Jet To Get Indigenous Kaveri Engine Soon.
Please Wait while comments are loading...

Latest Photos