ஆட்டோமொபைல் உலகின் சூப்பரான பணிகள் எவை தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது பலரின் ஆர்வமாகவும், கனவாகவும் இருக்கிறது. ஃபெராரி, லம்போர்கினி, டுகாட்டி என இந்த எண்ணத்துக்கு தூபம் போடும் பிராண்டின் பெயர்களும் பலரை சுண்டியிழுப்பதற்கான காரணங்கள்.

எந்த துறையை எடுத்தாலும், அதில் எளிமையாக செய்யக்கூடிய பணிகளும், அதற்கு நேர்மாறான கடினமான பணிகளும் இருக்கும். அதேபோன்று, ஆட்டோமொபைல் துறையிலும், ஆபத்துக்கள் நிறைந்த பணிகளும், சில மனது ஒன்றி செய்யக்கூடிய சுகமான பணிகளும் இருக்கின்றன. அதில், சூப்பரான ஆட்டோமொபைல் துறை பணிகள் எவை எவை என்பைத இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. சூப்பர் கார் எஞ்சின் தயாரிப்பு

10. சூப்பர் கார் எஞ்சின் தயாரிப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டான ஏஎம்ஜி காரின் எஞ்சினை ஒரேயொரு பணியாளர் மட்டுமே கைகளாலேயை கட்டமைக்கிறார். இது ஏஎம்ஜி பிராண்டின் கொள்கையும் கூட. கட்டமைத்தவரின் பெயர் எஞ்சினில் பொறிக்கப்பட்டிருக்கும்.

கொசுறுத் தகவல்: ஏஎம்ஜி சிஎல்எஸ்63 ஷூட்டிங் பிரேக் காருக்கு மட்டும் One Man, One Engine என்ற இந்த கொள்கை பின்பற்றப்படவில்லை.

09. விண்டேஜ் கார் புனரமைப்பு நிபுணர்

09. விண்டேஜ் கார் புனரமைப்பு நிபுணர்

காலத்தை வென்று வாழ்ந்துகொண்டிருக்கும் விண்டேஜ் கார்களுக்கு மறுபிறவி கொடுக்கும் கலியுக பிரம்மாக்கள்தான் இவர்கள். பழைமை மாறாமல் இன்றைக்கும் சிறப்பான இயக்கத்தை பெற்றிருக்கும் இந்த கார்கள் வாழ்ந்துகொண்டிருப்பது இவர்களால்தான். ஆட்டோமொபைல் துறையில் பலரின் மரியாதைக்குரிய ஸ்தானத்தில் இருக்கும் பணிகளில் இதுவும் ஒன்று.

08. கார் கஸ்டமைஸ் நிபுணர்

08. கார் கஸ்டமைஸ் நிபுணர்

மிகுந்த கற்பனை திறனும், அதனை செயல்படுத்தி வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்த வாகனங்களை உருவாக்கும் இவர்களுக்கு பணமும், புகழும் சேர்ந்த கிடைக்கிறது. நம்முடைய கற்பனை, எண்ணங்களின் எல்லையை தாண்டி இவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு மாடலும் வியக்க வைக்கின்றன. மனநிறைவை தரும் ஆட்டோமொபைல் பணிகளில் இதுவும் ஒன்று.

07. ராஜா வீட்டு கன்றுக்குட்டி

07. ராஜா வீட்டு கன்றுக்குட்டி

ராஜா வீட்டு கன்றுக் குட்டியை போலவே அரச குடும்பத்தினரிடம் ஓட்டுனர் பணியும் சிறப்பானதே. கைநிறைய சம்பளம், விதவிதமான சொகுசு கார்களை இயக்கிப் பார்ப்பதற்கான வாய்ப்புகள், வசதிகள் என ஆட்டோமொபைல் உலகின் சிறப்பான பணிகளில் இதுவும் ஒன்றே.

6. மோட்டார் ஷோ அழகிகள்

6. மோட்டார் ஷோ அழகிகள்

ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் ஒவ்வொரு வாகன நிறுவனங்களின் அரங்குக்கு அழகையும், கவர்ச்சியையும் தருவதில் இவர்களது பங்கு இன்றியமையாதது. பணத்துக்கும் பஞ்சமில்லை. மீடியாக்களில் முகத்தை எளிதாக காட்டுவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.

05. வேலை வாங்குறதுதான் இந்த வேலையே

05. வேலை வாங்குறதுதான் இந்த வேலையே

அடுத்தவர்களை வேலைவாங்குவதுதான் இவரின் வேலை. இப்போது ஆட்டோமொபைல் உலகின் சி.இ.ஓ.,க்களின் சம்பள பட்டியலை கேட்டு பலர் இந்த துறைக்கு தாவி வருகின்றனர். உலகின் மாபெரும் வாகன குழுமமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தின் சிஇஓ., மார்ட்டின் வின்டர்கோனின் ஆண்டு சம்பளம் 25 மில்லியன் டாலர்களாம். எதுக்கும் அப்ளிகேஷனை போட்டு பார்த்துடுவோம்.

04. எஞ்சின் சோதனை நிபுணர்கள்

04. எஞ்சின் சோதனை நிபுணர்கள்

பல்வேறு நிலைகளில் எஞ்சின் இயக்கம், வெப்ப நிலை குறித்து சோதனைகள் செய்து கம்ப்யூட்டரில் சரிசெய்யும் பணி. எஞ்சின் ரீமேப்பிங் மூலம் எஞ்சின் சக்தியை கூட்டுவது, குறைப்பது போன்றவையும் எளிதாக செய்யக்கூடிய வேலைதான் இது.

 03. ஃபார்முலா ஒன் சேஃப்டி டிரைவர்

03. ஃபார்முலா ஒன் சேஃப்டி டிரைவர்

ரேஸ் நடைபெறும்போது மழை வந்து ரேஸ் டிராக்கில் ஓடும் ஃபார்முலா கார்களுக்கு ஆபத்தான சமயங்களிலும் அல்லது அவசர சூழலிலும், ஃபார்முலா ஒன் ரேஸ் கார்களுக்கு முன்னதாக பாதுகாப்பான வேகத்தில் இந்த கார் முன்னே இயக்க வேண்டும். 2000ம் ஆண்டு முதல் பெர்ன்ட் மேலேண்டர் ஃபார்முலா ஒன் சேஃப்டி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் முன்னாள் ஃபார்முலா ஒன் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02. ரேஸ் பைக் சோதனை நிபுணர்கள்

02. ரேஸ் பைக் சோதனை நிபுணர்கள்

பைக் ரேஸ் ஓட்டுவது ஓர் சூப்பரான வேலை என்று சொன்னதும் வியப்படையாதீர்கள். அந்த ரேஸ் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதும், அதனை சரியாக டெஸ்ட் செய்து ஆலோசனைகளை வழங்கி மேம்படுத்துவதிலும் இவர்கள் பங்கு இன்றியமையாதது. பல வெற்றிகரமான மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் உருவாவதற்கு இவர்களின் பங்கு அளப்பரியது.

 01.'டிரைஸ்பார்க் எடிட்டர்'!!

01.'டிரைஸ்பார்க் எடிட்டர்'!!

இந்த பட்டியலில் என்னுடைய வேலையும் சேர்த்திருப்பதற்கு காரணம் பல. அதில் சில உங்களுக்காக... உலகின் சிறந்த ஆட்டோமொபைல் துறை வேலை என்று கேட்டால், டிரைவ்ஸ்பார்க் எடிட்டோரியலில் (ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்) பணிபுரிவதை பெருமையுடன் கூறுவேன். மற்ற எடிட்டோரியல் பணி போன்று எழுதுவதோடு நின்றுவிடாமல், அனைத்து வகை கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை ஓட்டி பார்க்கும் வாய்ப்பையும், அதன் தொழில்நுட்ப அம்சங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. கோடி ரூபாய் காரில் கோடியில் இருக்கும் சின்ன குறையையும் வெளிச்சம் போட்டு காட்ட முடியும். எந்தவொரு காரின் நன்மை, தீமைகளை அலசி விமர்சிக்க முடியும். எனவே, ஆட்டோமொபைல் உலகின் சிறந்த பணியாக டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் பணியை கூறினால் மிகையில்லை.

என்னப்பா இது இவ்ளோ அப்ளிகேஷன்கள் வந்திருக்கு!!

Most Read Articles
English summary
Top 10 coolest jobs in the automobile world. These jobs are quite possibly the most coolest jobs which any automobile enthusiast would love to do.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X