பெரும் கைகளுக்கு தோதான விலையில் உலகின் டாப் - 10 தனிநபர் விமானங்கள்!

Written By:

வியாபார விஷயமாகவும், அலுவலக விஷயமாகவும் அடிக்கடி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்செல்வோர் தனி விமானத்தை சொந்தமாக வாங்கியோ அல்லது குத்தகை அடிப்படையிலோ எடுத்து பயன்படுத்துகின்றனர். வீட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து தரப்படும் இந்த விமானங்கள் பெரும் விலை கொண்டதாக இருக்கின்றன.

அதிக விலை கொண்ட தனிநபர் விமானங்களை பற்றி அதிக செய்திகள் வருகின்றன. ஆனால், சாதாரண பணக்காரர்களுக்கும் ஏற்ற தனிநபர் விமானங்கள் மிக குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளன. அப்படி, குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் அல்லது உருவாக்கப்பட்டு வரும் 10 விமானங்களின் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

10. ஹோண்டா எச்ஏ-420 ஹோண்டா ஜெட்

விலை: ரூ.29.96 கோடி

உலகின் குறைவான விலை கொண்ட விமானங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள விமானங்களில் சற்று விலை அதிகமுடைய மாடல். ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார் கம்பெனியால் தயாரிக்கப்பட்டு 2003ம் ஆண்டு முதல்முறையாக பறந்த இந்த விமானம் இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ரகத்திலான விமானங்களைவிட இது மிகுந்த செயல்திறன் கொண்டதாகவும், 35 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனமிக்கதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணிகளுக்கான இடவசதி 5.43 மீட்டர் நீளம் கொண்டதாகவும்,1.46 மீட்டர் உயரமும், 1.52 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது. ஒரு பைலட் அல்லது இரண்டு பைலட் இயக்க முடியும். 4 முதல் 6 பேர் வரை பயணிக்கலாம். இது இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மணிக்கு 782 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,234 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

09. ஸ்பெக்ட்ரம் எஸ்-33 இன்டிபென்டென்ஸ்

விலை: ரூ.26.27 கோடி

இன்னும் உருவாக்கத்தில்தான் இருக்கிறது. மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்ட இந்த விமானம், தற்போது விற்பனையில் இருக்கும் இதன் ரகத்திலான விமானத்தைவிட 50 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு பைலட் இயக்கும் வசதி கொண்ட இந்த விமானத்தில் 6 முதல் 9 பேர் செல்ல முடியும். இதில், ரெஸ்ட் ரூம் வசதியும் இருக்கிறது.

இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானமானது மணிக்கு 787 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 3,700 கிமீ தூரம் வரை பறக்கும். குறுகிய தூர பயன்பாட்டுக்கு மிக ஏற்றதாக இருக்கும்.

08. எம்பரர் ஃபெனோம் 100

விலை: ரூ.23.97 கோடி

பிரேசில் நாட்டு தயாரிப்பு. இதுவரை 250 விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டு விட்டன. 6 பேர் வரை பயணிக்க முடியும். சொகுசான இருக்கை வசதியுடன், கஸ்டமைஸ் செய்தால் 4 பேர் செல்ல முடியும்.

கனடா நாட்டின் பிராட் அண்ட் ஒயிட்னி நிறுவனத்திடமிருந்து PW617-F எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 722 கிமீ வேகம் வரை பறக்கும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 2,182 கிமீ தூரம் வரை பறக்கும்.

07. செஸ்னா சிட்டேஷன் மஸ்டாங்

விலை: ரூ.17.64 கோடி

செஸ்னா நிறுவனத்தின் சிறிய ரக தனிநபர் விமானம். இதுவரை 400க்கும் மேற்பட்ட மஸ்டாங் விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 5 பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

இந்த விமானத்தில் இரண்டு பிராட் அண்ட் ஒயிட்னி எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மணிக்கு 630 கிமீ வேகம் வரை பறக்கும். முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 2,161 கிமீ தூரம் வரை செல்லும்.

06. எக்லிப்ஸ் 500

விலை: ரூ.14.31 கோடி

கடந்த 2006ம் ஆண்டு டெலிவிரி துவங்கியது. இதுவரை 260 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்த விமானத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து, 2013ம் ஆண்டில் எக்லிப்ஸ் 550 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. 2015ம் ஆண்டில் எக்லிப்ஸ் நிறுவனம் கெஸ்ட்ரல் ஏர்கிராஃப்ட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு, எக்லிப்ஸ் 500 அடிப்படையிலான கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் மாடலாக வெளியிடப்பட்டது.

இரண்டு பிராட் அண்ட் ஒயிட்னி எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானத்தை இயக்குவதற்கு இரண்டு பைலட்டுகள் தேவை. மணிக்கு 685 கிமீ வேகம் பறக்கும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 2,084 கிமீ தூரம் வரை பறக்கும்.

05. ஸ்ட்ரேடோஸ் 714

விலை: ரூ.13.31 கோடி

மிக இலகு வகை விமான மாடல். அதிகபட்சமாக 4 பேர் பயணிக்கலாம். மிக வேகமாகவும், அதிக தூரம் செல்லும் திறன் கொண்ட குட்டி விமானமாக இதனை வடிவமைத்தனர். இந்த விமானத்தில் வில்லியம்ஸ் FJ44-3AP என்ற ஒற்றை எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

விலை: ரூ.13.31 கோடி

மிக இலகு வகை விமான மாடல். அதிகபட்சமாக 4 பேர் பயணிக்கலாம். மிக வேகமாகவும், அதிக தூரம் செல்லும் திறன் கொண்ட குட்டி விமானமாக இதனை வடிவமைத்தனர். இந்த விமானத்தில் வில்லியம்ஸ் FJ44-3AP என்ற ஒற்றை எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

04. டைமன்ட் டி-ஜெட்

விலை: ரூ.12.58 கோடி

டைமன்ட் ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு. சொந்தமாக விமானத்தை இயக்கும் திறன் கொண்ட பெரும் கோடீஸ்வரர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட விமான மாடல். செஸ்னா சிட்டேஷன் மஸ்டாங் மற்றும் எக்லிப்ஸ் 500 ஆகிய விமானங்களைவிட இந்த விமானமானது மிகவும் பாதுகாப்பானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த விமானம் மணிக்கு 583 கிமீ வேகம் வரை பறக்கும். இந்த விமானத்தில் 4 பேர் பயணிக்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,500 கிமீ தூரம் வரை பறக்கும்.

03. சிர்ரஸ் விஷன் எஸ்எஃப்50

விலை: ரூ.11.45 கோடி

தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் இருக்கும் இந்த விமானத்தில் அதிகபட்சமாக பைலட் உள்பட 7 பேர் பயணிக்க முடியும். வில்லியம்ஸ் எஃப்ஜே335ஏ எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. தனிநபர் பயன்பாட்டு மார்க்கெட்டை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே, விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலோ அல்லது எஞ்சின் செயலிழந்துவிட்டாலோ, பாராசூட் மூலமாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் தொழில்நுட்பம் கொண்டது. இந்த விமானமானது மணிக்கு 556 கிமீ வேகத்தில் பறக்கும்.

02. ஸ்போர்ட்ஜெட் - II

விலை: ரூ.7.99 கோடி

இந்த விமானமும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. இன்னும் உற்பத்தி துவங்கப்படவில்லை. அதிகபட்சமாக 5 பேர் வரை பயணிக்கலாம். இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 1,852 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். மணிக்கு 704 கிமீ வேகம் வரை எட்டும் திறன் கொண்டது. தற்போது இதன் கேபின் கூடுதல் இடவசதி கொண்டதாக மேம்படுத்தப்பட்டு உற்பத்தி நிலையை நோக்க சென்று கொண்டிருக்கிறது.

01. எபிக் விக்டரி

விலை: ரூ.6.65 கோடி

2009ம் ஆண்டு இந்த விமானத்தை தயாரித்த எபிக் ஏர்கிராப்ட் நிறுவனம் திவாலானது. ஆனால், சீனாவை சேர்ந்த ஏவியேஷன் இன்டஸ்ட்ரி நிறுவனம் இதனை கையகப்படுத்தி, நிதி நிலையை மேம்படுத்தியதுடன் உற்பத்தியையும் துவங்கியது. பெயருக்கு ஏற்றாற்போல் விலையில் முத்திரை பதிக்கும் விமானம் இது. இந்த விமானத்தில் 5 பேர் செல்வதற்கான இடவசதி இருக்கும். இதுவரை 16 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருவர் இயக்கும் வசதி கொண்டது. மணிக்கு 592 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,222 கிமீ தூரம் வரை பறக்கும். ஒரு மில்லியன் டாலருக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு தயாரிக்கப்பட்ட விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யானையை கட்டி தீணி போடுவது போல, விமானத்தை வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கான முதலீடு ஒருபங்கு என்றால், அதற்கான பணியாளர் சம்பளம், விமான நிலைய பயன்பாட்டு கட்டணம், பார்க்கிங், போக்குவரத்து செலவு மற்றும் பராமரிப்பு என்று அதற்கான கூடுதல் செலவுகள் மிக அதிகம். இதுவே பெரும் கோடீஸ்வரர்களையும் கூட தயங்க வைக்கிறது. வாடகைக்கு எடுத்துச் செல்வதே அவர்களுக்கு சிறந்த வழியாக இருக்கின்றது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Saturday, October 8, 2016, 13:30 [IST]
English summary
Ten Most Affordable Private Jets In The World. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos