மலைக்க வைக்கும் பொருட்செலவில் உருவான உலகின் 10 காஸ்ட்லி தொங்கு பாலங்கள்!!

By Saravana

பல கிலோமீட்டர்கள் தரை வழியாக சுற்றி செல்ல வேண்டிய இடங்களை, பாலங்கள் மூலமாக சில நூறு மீட்டர்களாக சுருக்கி விடுகின்றனர். நெரிசல் மிகுந்த சந்திப்புகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்களில் போக்குவரத்தை எளிதாக்கும் விதத்திலும் பாலங்கள் தரை வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், எரிபொருள் சிக்கனம், நேர விரயம் போன்றவற்றை தவிர்க்க உதவுகின்றன.

நில அமைப்பு மற்றும் இதர நடைமுறை பிரச்னைகளால் பாலங்களின் நீளமும், திட்ட மதிப்பும் வெகுவாக அதிகரிக்கின்றன. அதுபோன்று, உலகில் மிகவும் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் பிரிட்ஜ் எனப்படும் 10 தொங்கு பாலங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. மேரிலாண்ட் தொங்கு பாலம்

10. மேரிலாண்ட் தொங்கு பாலம்

அமெரிக்காவின் மேரிலாண்ட் வளைகுடாவில் அமைக்கப்பட்டிருக்கும் செசாபீக் பாலம், மேரிலாண்ட் பகுதியின் மேற்கு கடற்கரை பகுதியையும், கிழக்கு கடற்கரை பகுதியையும் இணைக்கிறது. இந்த பாலம் 1952ம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்னர் , 1973ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பாலம் 778.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட்டது. உலகின் காஸ்ட்லியான தொங்கு பாலங்களில் பத்தாவது இடத்தை இது பெறுகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் பார்த்தால் கிட்டத்தட்ட 5,000 கோடி பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

Photo credit: Wiki Commons/ezioman

09. டகோமா நேரோஸ் பாலம்

09. டகோமா நேரோஸ் பாலம்

பட்டியலில் 9வது இடத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் டகோமா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் டகோமா பாலம் இடம்பெறுகிறது. இந்த தொங்கு பாலம் 1950ல் கட்டப்பட்டது. அங்கு ஏற்கனவே இருந்த பாலம் அதிக உடைந்து விழுந்ததையடுத்து, இந்த புதிய பாலத்தை அமைத்தனர். அந்த பகுதியில் அதிவேகத்தில் வீசும் காற்று காரணமாக, இரண்டாவதாக அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் புதிய தொழில்நுட்ப நடைமுறைகளை பின்பற்றி அமைத்தனர். இந்த பாலம் 827.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அப்போதைய பண மதிப்பிலும் இது அதிக திட்ட செலவுதான். ஆனால், இன்றைய இந்திய மதிப்பில் பார்த்தால் மலைக்க வைக்கிறது. ஆம், இன்றைய மதிப்பில் இதன் திட்ட மதிப்பு ரூ.5,300 கோடி ஆகிறது.

Photo credit: Wiki Commons/Travis

08. கூப்பர் ஆற்றுப் பாலம், தெற்கு கரோலினா

08. கூப்பர் ஆற்றுப் பாலம், தெற்கு கரோலினா

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஓடும் கூப்பர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள சார்லெஸ்டன் மற்றும் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளை இந்த தொங்கு பாலம் இணைக்கிறது. நியூயார்க் நகரைச் சேர்ந்த பார்சன்ஸ் பிரின்கெர்ஹாஃப் எஞ்சினியரிங் நிறுவனம் இந்த தொங்கு பாலத்தை வடிவமைத்து கட்டியது. இதனை ஆர்தர் ரவேனல் ஜூனியர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 836.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. 2005ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.5,320 கோடி மதிப்புடையது.

Photo credit: Wiki Commons/Ted

 07. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம், நியூயார்க்

07. ஜார்ஜ் வாஷிங்டன் பாலம், நியூயார்க்

அமெரிக்கா என்றில்லை, உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் நியூயார்க். அந்த நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், இந்த ஜார்ஜ் வாஷிங்டன் தொங்கு பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹட்சன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலம் நியூஜெர்ஸியிலுள்ள மான்ஹட்டன் நகரை இணைக்கிறது. 4 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 7,000 கோடி மதிப்புடையது.

Photo credit: Flickr/Charles Boyle

 06. சான்பிரான்சிஸ்கோ, ஆக்லேண்ட் பாலம்

06. சான்பிரான்சிஸ்கோ, ஆக்லேண்ட் பாலம்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவையும், ஆக்லேண்ட் வளைகுடாவையும் இணைக்கும் இந்த தொங்கு பாலம் 1936ல் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் 7 தங்களில் கட்டப்பட்ட இந்த பாலம் 13.5 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் திட்ட செலவில் அமைக்கப்பட்டது. இந்திய மதிப்பில் 8,263 கோடி மதிப்புடையது.

Photo credit: Wiki Commons/Caroline Culler

05. சிங் மா தொங்கு பாலம், சீனா

05. சிங் மா தொங்கு பாலம், சீனா

அமெரிக்க பாலங்களை தொடர்ந்து, சீனாவின் ஹாங்காங் நகரில் இருக்கும் சிங் மா தொங்கு பாலம் உலகின் அதிக திட்ட செலவில் அமைக்கப்பட்டவைகளில் ஒன்றாக இருக்கிறது. அங்குள்ள சிங் யீ மற்றும் சிங் மா தீவுகளுக்கு இடையில் மைக்கப்பட்டிருக்கிறது. 1997ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் அப்போதைய உலகின் 2வது நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது 9வது இடத்தில் இருக்கிறது. 1.37 கிமீ நீளத்துக்கான இந்த பாலம் 1.35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்திய மதிப்பில் 8,600 கோடி மதிப்புடையது.

Photo credit: Flickr/sonotoki

 04. இயாங்ஜாங் கிராண்ட் பாலம், தென்கொரியா

04. இயாங்ஜாங் கிராண்ட் பாலம், தென்கொரியா

தென்கொரியாவில் இருக்கும் இந்த இயாங்ஜாங் தொங்கு பாலம்தான் ஆசியாவின் காஸ்ட்லியான பாலம். 2000ல் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட இந் பாலம் இயாங்ஜாங் மற்றும் தீவையும், தென்கொரியாவின் முக்கிய தீவையும் இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது. 4.42 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டிரு்ககும் இந்த பாலம் நவீன பொறியியலின் அற்புதங்களில் ஒன்றாக புகழப்படுகிறது. 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ரூ.12,077 கோடி மதிப்புடையது.

Photo credit: Wiki Commons/Jinho Jung

03. வெராஸானோ, நேரோஸ் பாலம், நியூயார்க்

03. வெராஸானோ, நேரோஸ் பாலம், நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் மற்றொரு காஸ்ட்லியான தொங்கு பாலம் இது. ஹட்சன் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலம் 4.1 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகள் 7 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் 2.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இப்போதைய இந்திய மதிப்பு ரூ,15,000 கோடியை தாண்டுகிறது.

Photo credit: Flickr/Joyce A

 02. கிரேட் பெல்ட் ஃபிஸ்டு லிங்க், டென்மார்க்

02. கிரேட் பெல்ட் ஃபிஸ்டு லிங்க், டென்மார்க்

டென்மார்க் நாட்டின் ஸீலேண்ட் மற்றும் ஃபியூனன் இடையில், அமைக்கப்பட்டிருக்கிறது. 1997ல் திறக்கப்பட்ட இந்த தொங்கு பாலம் 10 ஆண்டுகளில் கட்டப்பட்டது. டென்மார்க் நாட்டின் பொதுப்பணித்துறை திட்டங்களில் மிகப்பெரியதாக கூறப்படுகிறது. இந்த பாலம் 6.75 கிமீ நீளம் கொண்டது. இது 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.27,800 கோடியாகிறது.

Photo credit: Wiki Commons

 01. சான்பிரான்சிஸ்கோ, ஆக்லேண்ட் பாலம்

01. சான்பிரான்சிஸ்கோ, ஆக்லேண்ட் பாலம்

இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த அதே பாலம் தவறி இந்த பட்டியலில் மீண்டும் இடம்பிடித்துவிட்டதாக நினைக்க வேண்டாம். ஆக்லேண்ட் தொங்கு பாலம் இரண்டு பாலங்களை உள்ளடக்கியதாக ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது. அதாவது, கிழக்குப் பகுதியில் இருந்த பாலம் சேதமடைந்துவிட்டது. இதையடுத்து, அதை சரிசெய்வதற்கு பதிலாக புதிதாகவே அமைத்துவிட்டனர். இன்றைய மதிப்பில் பார்த்தால், இந்த பாலம் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது. இன்றைய மதிப்பில் வைத்து பார்த்தால் 40,000 கோடியாகிறது.

Photo credit: Wiki Commons/Frank Schulenburg

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are given some interesting details of the 10 most expensive suspension bridges in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X