உலகின் அதிபயங்கர கண்டம் விட்டு கண்டம் பாயும் டாப் 10 ஏவுகணைகள்!

தற்காப்பு என்ற பெயரில் உலகின் பல நாடுகள் ஆயுதப் போட்டியில் குதித்துள்ளன. இதனால், மனித குலத்தை அழிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்து வருகின்றன.

அதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் மிசைல் என்று அழைக்கப்படும், உலகின் அதிபயங்கரமான ஏவுகணைகளில் முதன்மையான 10 ஏவுகணைகள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ஆர்-36எம்2- ஐசிபிஎம் சதன்[ரஷ்யா]

01. ஆர்-36எம்2- ஐசிபிஎம் சதன்[ரஷ்யா]

உலகிலேயே மிக நீண்ட தூரம் செல்லும் திறன் படைத்த ஏவுகணை இது. அதிகபட்சமாக 16,000 தூரம் வரை பயணித்து, இலக்கை தாக்கி அழிக்கும். 231 டன் எடை கொண்ட இந்த ஏவுகணைதான் உலகிலேயே அதிக எடை கொண்ட ஏவுகணையைகாவும் குறிப்பிடப்படுகிறது. வினாடிக்கு 7.9 கிமீ வேகத்தில் பறக்கும். அமெரிக்க ராணுவத்தின் கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வரும் ரஷ்யாவின் அதிபயங்கரமான அணு ஆயுதமாகவும் கருதப்படுகிறது. இது வெடிக்கும்போது, அளப்பரிய அணுக்கதிர் வீச்சை இலக்கு பகுதியையே நாசமாக்கிவிடும்.

Picture credit: Wiki Commons

 02. டிஎஃப்41 அல்லது டாங்ஃபெங்-41 - சீனா

02. டிஎஃப்41 அல்லது டாங்ஃபெங்-41 - சீனா

இது அதிகபட்சமாக 12,000 கிமீ முதல் 15,000 கிமீ தூரம் வரை பாய்ந்து செல்லும். அமெரிக்காவின் மினிட்மேன் ஏவுகணையை விட இது கூடுதல் தூரம் பயணிக்கும். இது 21 மீட்டர் நீளமும், 80,000 கிலோ எடையும் கொண்டது. இதுவும் அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் ஏவுகணைதான். மேக் 25 என்ற வேகத்தில் பயணிக்கும்.

Picture credit: Anton Denisov / Sputnik

03. யுஜிஎம்-133 டிரைடென்ட்-2 - அமெரிக்கா/இங்கிலாந்து

03. யுஜிஎம்-133 டிரைடென்ட்-2 - அமெரிக்கா/இங்கிலாந்து

நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுத ஏவுகணை. லாக்ஹீடு மார்ட்டின் நிறுனத்தின் தயாரிப்பு. அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு கடற்படைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 59,000 கிலோ எடை கொண்டது. மணிக்கு 29,020 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 11,300 கிமீ தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும்.

Picture credit: Wiki Commons

04. ஆர்29 ஆர்எம்டியூ சினெவா- ரஷ்யா

04. ஆர்29 ஆர்எம்டியூ சினெவா- ரஷ்யா

இதுவும் ரஷ்ய தயாரிப்புதான். அதிகபட்சமாக 11,547 கிமீ தூரம் பயணித்து சோதனைகளில் வெற்றி பெற்றது. 40 டன் எடை கொண்டது. 12 அணு ஆயுதங்களை வைத்து செலுத்த முடியும். நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் செலுத்த முடியும்.

Picture credit: The Richest

05. எல்ஜிஎம்-30ஜி மினிட்மேன்-3, அமெரிக்கா

05. எல்ஜிஎம்-30ஜி மினிட்மேன்-3, அமெரிக்கா

அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. தரையிலிருந்து ஏவக்கூடிய வகையை சேர்ந்த பாலிஸ்டிக் ரக ஏவுகணை. இது போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு. 36.030 கிலோ எடை கொண்டது. சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணையாகவும் பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 9656 கிமீ தூரம் பயணிக்கும். மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் பறக்கும்.

Picture credit: marvellouswings

06. ஆர்எஸ்4 யார்ஸ்- ரஷ்யா

06. ஆர்எஸ்4 யார்ஸ்- ரஷ்யா

இந்த ஏவுகணை 40,000 கிலோ எடை கொண்டது. 4 அணு ஆயுதங்களை பொருத்தி இதனை செலுத்த முடியும். அதிகபட்சமாக 11,000 கிமீ தூரம் பயணிக்கும்.

Picture credit: Соколрус/Wiki Commons

07. ஆர்டி-2, ரஷ்யா

07. ஆர்டி-2, ரஷ்யா

இந்த ஏவுகணையும் ரஷ்ய தயாரிப்புதான். சோவியத் யூனியன் உடைந்த பிறகு தயாரிக்கப்பட்ட ஏவுகணையாக குறிப்பிடப்படுகிறது. இது 47,200 கிலோ எடை கொண்டது. இந்த ஏவுகணையில் 800 கிலோடன் அணு ஆயுதத்தை வைத்து செலுத்த முடியும். அதாவது, இந்த ஒரு அணுகுண்டு ஒரு பெருநகரத்தையே நாசமாக்கும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 11,000 கிமீ தூரம் பறக்கும். மணிக்கு 26,400 கிமீ வேகத்தில் பறந்து செல்லும்.

Picture credit: Vitaliy Ragulin/Wiki Commons

08. டிஎஃப்-31, சீனா

08. டிஎஃப்-31, சீனா

சீனாவின் மற்றொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. 42 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை அதிகபட்சமாக 8,000 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

Picture credit: IceUnshattered/Wiki Commons

 09. எம்-51 எஸ்எல்பிஎம்- பிரான்ஸ்

09. எம்-51 எஸ்எல்பிஎம்- பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகத்தை சேர்ந்த ஏவுகணை. நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் இதனை ஏவ முடியும். 52,000 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை அதிகபட்சமாக 10,000 கிமீ தூரம் பயணிக்கும். மேக் 25 என்ற வேகத்தில் சீறிச்செல்லும்.

Picture credit: IceUnshattered/Wiki Commons

10. ஆர்எஸ்எம்-56 புலாவா, ரஷ்யா

10. ஆர்எஸ்எம்-56 புலாவா, ரஷ்யா

எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ரஷ்யா, அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளையும் வைத்திருக்கிறது. அந்த வகையில், இந்த ஏவுகணையும் அதற்கு வலு சேர்க்கிறது. இந்த ஏவுகணையில், 6 அணு ஆயுதங்களை வைத்து செலுத்த முடியும். அதிகபட்சமாக 8,000 கிமீ தூரம் பயணிககும். மேக் 25 என்ற வேகத்தில் பயணிக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ten Most Powerful missiles in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X