'மாடர்ன் கார்' என்பதை பரைசாற்றும் 10 நவீன தொழில்நுட்ப வசதிகள்!!

By Saravana

கடந்த சில ஆண்டுகளில் கார்களுக்கு ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது கார்களுக்கு நித்தமும் ஒரு புதிய தொழில்நுட்பம் அல்லது சிறப்பு வசதிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

கடந்த காலங்களில் உயர்வகை சொகுசு கார்களில் மட்டுமே பார்க்க முடிந்த தொழில்நுட்ப வசதிகள் தற்போது சாதாரண ரக கார்களில் கூட கிடைக்கிறது. அந்த வகையில், நவீன கார் என்பதை பரைசாற்றும் விதத்தில் கார்களில் கொடுக்கப்படும் 10 சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை ஸ்லைடரில் காணலாம்.


1.புஷ் பட்டன் ஸ்டார்ட்

1.புஷ் பட்டன் ஸ்டார்ட்

கார் சாவி பாக்கெட்டில் இருந்தால் போதுமானது. எளிதாக ஒரு பொத்தானை அழுத்தி காரை ஸ்டார்ட் செய்யும் வசதிதான் புஷ் பட்டன் ஸ்டார்ட் என்று அழைக்கின்றனர். தற்போது மாருதி ஸ்விஃப்ட் காரில் இந்த வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் ஆண்டுகளில் ஆல்ட்டோவில் கூட இந்த புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2.எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்

2.எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் கார்களில் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதைய நவீன கார்களில் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கப்படுகிறது. இதனால், பல அனுகூலங்களை பெற முடியும். ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் எஞ்சின் சக்தியை உறிஞ்சுவதால், பெர்ஃபார்மென்ஸ் குறையும் என்பதுடன், மைலேஜும் குறையும். ஆனால், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மூலம் எரிபொருள் மிச்சமாவதுடன், எஞ்சின் ஆயுளும் அதிகரிக்கிறது.

3. ஸ்மார்ட்போன் வசதி

3. ஸ்மார்ட்போன் வசதி

கார் வைத்திருக்கும் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால், காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. வாய் மொழி உத்தரவுகள் மூலமாக பல்வேறு வசதிகளை பெறுவதற்கும், பொழுதுபோக்கு வசதிகளை எளிதாக பெறுவதற்கும் இது உதவுகிறது. இது ஓட்டுனரின் கவனக்குறைவை தவிர்ப்பதுடன், பல்வேறு கூடுதல் வசதிகளை பெற முடிகிறது. டட்சன் கோ ப்ளஸ் காரில் கூட ஸ்மார்ட்போன் மூலமாக ஆடியோ சிஸ்டத்தை இணைத்து இசையை கேட்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 4.டிஜிட்டல் கேஜ்

4.டிஜிட்டல் கேஜ்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் தற்போது தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது டிஜிட்டல் திரை. பல்வேறு வசதிகளை துல்லியமாகவும், எளிதாக தெரிந்துகொள்ளும் விதத்தில் காட்டுவதால் டிஜிட்டல் திரை இல்லாத கார்களே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. சில கார்களில் அனலாக் மற்றும் டிஜிட்டல் திரையுடனும், சில கார்கள் முழுமையான டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொண்டதாக வருகிறது.

5. இலகு எடை

5. இலகு எடை

மாடர்ன் கார்களில் கூடுதலாக சாதனங்கள் மற்றும் நீள, அகலம் கூடினாலும், எடை மட்டும் குறைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்திலான உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இலகு எடை கொண்டதாக இருந்தாலும், மிகவும் உறுதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ரிமோட் கீ

6. ரிமோட் கீ

ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரின் கதவுகளை திறப்பதற்கு பயன்படும் ரிமோட் கீ அல்லது கீ லெஸ் என்ட்ரி வசதி தற்போது பெரும்பான்மையாக அனைத்து கார்களிலும் இருக்கிறது. இல்லையெனில், தனியாகவும் பொருத்திக் கொள்ள முடியும். எனவே, தற்போது இந்த வசதி இல்லாத கார் இல்லை எனும் கூறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

7. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

7. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

முன்பு ஆடியோ சிஸ்டம் வைத்திருப்பது கார் பயணங்களை இனிமையாக்குவதாக இருந்ததுடன், இன்டிரியர் கவுரவத்தின் அடையாளச் சின்னமாக இருந்தது. ஆனால், தற்போது ஆடியோ, வீடியோ, நேவிகேஷன், ஸ்மார்ட்போன் இன்டகிரேஷன் என பல்வேறு வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்பது அத்தியாவசிய அம்சமாகிவிட்டது.

 8. டிசைன்

8. டிசைன்

கார் டிசைன் தலைமுறைக்கு தலைமுறை மேம்படுத்தப்பட்டு புதிய அத்தியாயங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி, சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக டிசைன் செய்யப்படுகிறது. மேலும், கிராஷ் டெஸ்ட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் விதத்தில் பல்வேறு பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொண்டு புதிய கார்கள் வடிவமைக்கப்படுகின்றன.

 9. அடாப்டிவ் ஹெட்லைட்/ வைப்பர்கள்

9. அடாப்டிவ் ஹெட்லைட்/ வைப்பர்கள்

இரவு நேரங்களில் கார் வளைவுகளில் திரும்பும்போது, ஹெட்லைட் நேராக ஒளியை பாய்ச்சுவதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, ஹெட்லைட்டும் கார் திரும்பும் திசையில் ஒளியை பாய்ச்சும் விதத்தில் இருப்பதுதான் அடாப்டிவ் ஹெட்லைட். மேலும், இருள் வந்தால் தானாக ஆன் செய்து கொள்ளும் வசதி கொண்ட ஹெட்லைட்டும் தற்போது கார்களில் கிடைக்கிறது. இதேபோன்று, மழை வந்தால் தானியங்கி முறையில் செயல்படும் ரெயின் சென்சிங் வைப்பர்களும் மாடர்ன் கார்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக கூறலாம்.

10. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

10. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

தற்போதைய கார்களில் முக்கியமான ஆக்சஸெரீகளில் ஒன்றாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா இடம்பெறுகிறது. பின்னால் இருக்கும் பொருட்களை சென்டர் கன்சோலில் இருக்கும் திரை மூலமாக தெளிவாக பார்த்து காரை ரிவர்ஸ் செய்வதற்கு இது உதவுகிறது. இது வெளிச்சந்தையிலும் குறைவா விலையில் கிடைப்பதால், தற்போது கார் உரிமையாளர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

Most Read Articles
English summary
The Ten Technologies That Can be Seen Only in Modern Cars.
Story first published: Tuesday, February 17, 2015, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X