உலகின் மிகப்பெரிய சோலார்’ பூங்காவை அமைத்தது டெஸ்லா

Written By:

எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பிலும், எனர்ஜி துறையிலும் வேகமாக முன்னேறிவந்த அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் அதில் முன்னணி இடத்தையும் கைப்பற்றியுள்ளது. உலகின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி அசத்தியது. தற்போது அடுத்த சாதனையாக அமெரிக்க அருகிலுள்ள தீவு ஒன்றில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்திப் பூங்காவை நிறுவியுள்ளது, இதன்மூலம் தீவு முழுமைக்கும் ஆன மின்தேவையையும் டெஸ்லா பூர்த்தி செய்துள்ளது.

அமெரிக்கா அருகில் உள்ளது ஹவாய் தீவுக்கூட்டம். இவை மேற்கு பசிபிக் பெருங்கடலில் 2,500 கிமீ நீளத்திற்கு பரந்து விரிந்த தீவுக்கூட்டமாகும். இதில் சுமாராக ஒருலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய ‘கவுஆய்' எனும் தீவில் உள்ள மக்களின் அன்றாட மின்சார தேவையை பூர்த்தி செய்ய டெஸ்லா நிறுவனம் மிகப் பெரிய சோலார் எனெர்ஜி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த சோலார் பூங்காவில் 54,978 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 13 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை 272 பவர்பேக்-கள் மூலம் கவுஆய் தீவில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என 35,000 மின் இணைப்புதாரர்களுக்கு மின்சப்ளை அளிக்கிறது. இந்த மிகப்பெரிய சோலார் பூங்காவிற்கு ‘சோலார் சிட்டி' என பெயரிட்டுள்ளனர்.

பவர்பேக் எனப்படுவது மிகப்பெரிய பேட்டரியாகும். இதில் தான் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமும் சேமித்து வைக்கப்படுகிறது. பவர்பேக்குகளில் சேமிக்கப்படும் மின்சாரம் இந்த தீவில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு மின்பாதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

50 ஏக்கரில் இந்த சோலார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ள டெஸ்லா நிறுவனம், கவுஆய் தீவு நிர்வாகத்திடம் 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக டீசல் மற்றும் படிம எரிபொருட்களை கொண்டு இத்தீவிற்கு மின்சாரம் அளித்து வந்துள்ளனர்.

இந்த பூங்கா குறித்து கவுஆய் தீவின் மின்சார பகிர்மான கழகத்தலைவர் டேவிட் பிஸ்ஸல் கூறுகையில், இத்தீவில் உள்ள சோலார் பூங்காவின் சேமிப்பு திறன் தான் உலகிலேயே மிகப்பெரியது என்றார். மரபுசாரா எரிசக்தி ஆற்றல் என்பதோடு இது டீசல் பயன்பாட்டையும் குறைக்கிறது என்றார்.

டெஸ்லாவின் சோலார் பூங்கா மூலமாக மரபுசாரா எரிசக்தி கொண்டு இத்தீவு மின்சார வசதி பெற்றுள்ளது. டெஸ்லா நிறுவனம் இதற்கு முன்னதாக தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்கன் சமாஉ தீவிலும் இதே போன்றதொரு சோலார் பூங்காவை அமைத்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எக்ஸ் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்: 

Story first published: Saturday, March 11, 2017, 8:45 [IST]
English summary
American energy storage company Tesla has unveiled its first big solar energy storage project. This project will power the island of Kauai in Hawaii.
Please Wait while comments are loading...

Latest Photos