சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த லம்போகினி ஹியூராகேன் கார்...

By Meena

வாழ்க்கையில் ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்தக் காரை சொந்தமா வாங்குவேன் பாஸ்... என லம்போகினி காரைக் காட்டி நண்பர் ஒருவர் கூறினார். வாஸ்தவம்தான், எல்லோருக்கும் வரக் கூடிய நியாயமான ஆசை ஒரு சொகுசுக் காரை சொந்தமாக்க வேண்டும் என்பது.

பார்க்க படு க்யூட்டகாவும், செம ஸ்டைலாகவும் இருக்கும் அந்தக் கார்கள் சாலையில் சென்றாலே அழகுதான். அதேநேரத்தில் எதிர்பாராமல் அந்த அழகு வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்தால் என்னவாகும்?... என்று நண்பரிடம் கேட்டேன். என்ன பாஸ் அபசகுணமாகப் பேசறீங்க...அப்படியெல்லாம் நடக்காதுங்க... என்றார். ஒருவேளை நடந்தால்?... கார் போச்சேனு விரக்தியில நாம் போய்ச் சேர்ந்து விடுவோம் இல்லையா... வீரத்துறவி விவேகானந்தரின் பாதம் பட்ட சிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்..

லம்போ கார்

லம்போகினியின் அல்ட்ரா மாடல் காரான ஹியூராகேன் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்து வந்த வாகனம் ஒன்று லம்போகினி மேல் மோதியதாகத் தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லம்போகினி ஹியூராகேன், சுழன்று சென்று சாலை ஓரத்தில் இருந்த தூணில் மோதியது. இதில் டிரைவர் இருக்கை இருக்கும் பக்கத்தில் பெரிய அடி எதுவும் விழவில்லை.

அதேவேளையில், எஞ்சின் மற்றும் பின்பாகங்கள் உள்ள பகுதிகள் சிதறிப் போய் சாலையிலும், நடைபாதையிலும் விழுந்துள்ளன.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் லம்போகினிக்குள் இருந்த டிரைவரை மீட்டனர். நல்லவேளையாக அவர் சுயநினைவில்தான் இருந்துள்ளார். இருப்பினும் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நபரை காரை விட்டு வெளியேற்றி சில நிமிடங்களில் அந்த வண்டியில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்துக்குள் தீ மளமளவெனப் பரவியதை அடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இறுதியாக எரிந்த கரிக்கட்டை போல நின்றிருந்தது லம்போகினி ஹியூராகேன்.

இப்ப சொல்லுங்க லம்போகினி கார் எப்ப வாங்கப் போலாம் என்றேன் நண்பரிடம். ஷேர் ஆட்டோ வந்திருச்சு கிளம்புறேன் என்றார் முறைத்தபடியே...

Most Read Articles
English summary
That's One Fiery Bull — Lamborghini Huracan Goes Up In Flames.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X