செயல்திறனில் மிரட்டும் 10 சிறந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்!

By Saravana

கால்களை ஆக்சிலரேட்டரில் வைத்தால் பிளிறிக் கொண்டு செல்லும் கார்களை அடக்கி ஆளும் கலை எல்லோருக்கும் வாய்த்துவிடாது.

அவ்வாறு, கட்டுப்படுத்துவதற்கு கடினமான செயல்திறன் கொண்ட கார்கள் ரேஸ் வீரர்களையும், பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளையும் சுண்டி இழுக்கும். அதுபோன்று, மெர்சிடிஸ் பென்ஸ் இதுவரை வெளியிட்ட அதிசெயல்திறன் மிக்க 10 அடங்காப்பிடாரி கார்களின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

 10. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்550 [2013]

10. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்550 [2013]

இலகு எடை, அதிக செயல்திறன் மிக்க பென்ஸ் மாடல்களில் ஒன்று. 1950களில் இருந்து இந்த எஸ்எல் பிராண்டு கார் மாடலை பென்ஸ் வெளியிட்டு வருகிறது. பல தலைமுறை மாற்றங்களுடன் வந்து கொண்டிருக்கும் இந்த காரின் எஸ்எல்550 என்ற 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாடல் 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் 429 எச்பி பவரை அளிக்கும் 4.7 லிட்டர் இரட்டை டர்போசார்ஜ்டு எஞ்சின் இருக்கிறது.

09. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் [2016]

09. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் [2016]

2014ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட இந்த இரண்டு சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் போர்ஷே 911 காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இலகு எடை கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 500 எச்பி பவரை அளிக்கும் இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் உருவாக்கிய மாடல்களில் அதிவேக ஆக்சிலரேசன் கொண்ட மாடல்களின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 0- 97 கிமீ வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் தொட்டுவிடும்.

08. மெர்சிடிஸ் பென்ஸ் சி63 ஏஎம்ஜி பிளாக் சீரிஸ் [2013]

08. மெர்சிடிஸ் பென்ஸ் சி63 ஏஎம்ஜி பிளாக் சீரிஸ் [2013]

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன் மெர்சிடிஸ் பென்ஸ் உருவாக்கிய மாடல் இது. இந்த கார் கூபே பாடி ஸ்டைலில் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த காரில் 510 எச்பி பவரை அளிக்க வல்ல 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிரு்ககிறது. 0 -97 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும்.

07. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்63 ஏஎம்ஜி [2013]

07. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்63 ஏஎம்ஜி [2013]

1980களிலிருந்து 90வரையிலான காலக்கட்டத்தில் இந்த பென்ஸ் எஸ்எல் சீரிஸ் கார்களுக்கு தனி ரசிக பட்டாளம் இருந்தது. ஆறாம் தலைமுறை மாடல் இலகு எடை கொண்டதாகவும், அதிக செயல்திறன் கொண்ட எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த காரில் இருக்கும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 530 எச்பி பவரை அளிக்கும். 0- 97 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும்.

06. மெர்சிடிஸ் பெந்ஸ் எஸ்எல்65 ஏஎம்ஜி [2013]

06. மெர்சிடிஸ் பெந்ஸ் எஸ்எல்65 ஏஎம்ஜி [2013]

பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் மாறுதல் செய்யப்பட்ட இந்த காரில் 6.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி12 எஞ்சின் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

05. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்ஆர் மெக்லாரன் ஸ்டிர்லிங் மோஸ் எடிசன் [2009]

05. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்ஆர் மெக்லாரன் ஸ்டிர்லிங் மோஸ் எடிசன் [2009]

உலகின் ஜாம்பவான் கூட்டணியில் உருவான இந்த அதிர்ஷ்டகார மாடலில் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. கார் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த கார் 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும்.

 04. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே ஜிடிஆர்

04. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே ஜிடிஆர்

ரேஸ் காராக வடிவமைக்கப்பட்ட மாடல். ஆனால், பந்தய கார் தயாரிப்பு விதிகளின்படி, குறைந்தது 25 சாதாரண சாலைக்கான மாடல்களையும் தயாரிக்க வேண்டும். ஆனால், மெர்சிடிஸ் பென்ஸ் 35 கார்களை தயாரித்தது. இந்த காரின் சாதாரண சாலைக்கான மாடலில் 6.9 லிட்டர் எஞ்சினும், ரேஸ் மாடலில் 6.0 லிட்டர் வி12 எஞ்சினும் பொருத்தப்பட்டிருந்தது. 0- 97 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். 1.5 மில்லியன் டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஒரு கார் 2.37 மில்லியன் டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

 03. மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி எஸ் செடான் [2014]

03. மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி எஸ் செடான் [2014]

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், ஏஎம்ஜி எஞ்சினியர்கள் ட்யூனிங் செய்த எஞ்சின் பொருத்தப்பட்ட செடான் கார் எப்படி இருக்கும்? ஆம், அப்படியொரு செயல்திறனை வெளிக்காட்டக்கூடிய மாடல்தான் இது. இந்த காரில் இருக்கும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் 577 எச்பி பவரை அளிக்க வல்லது. 0 - 97 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் எட்டிவிடும்.

 02. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்63 ஏஎம்ஜி எஸ் [2014]

02. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ்63 ஏஎம்ஜி எஸ் [2014]

இந்த காரில் இருக்கும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் உதவியுடன் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டது. இந்த கார் 0 -97 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும்.

 01. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஜிடி3 ரேஸ் கார் [2012]

01. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஜிடி3 ரேஸ் கார் [2012]

பட்டியலில் முதன்மையான இடத்தை பெற்றிருக்கும் இந்த கார் சர்வதேச ஃபார்முலா பந்தய அமைப்பின் ஜிடி3 பந்தயங்களுக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த காரில் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 600 எச்பி பவரை அளிக்க வல்ல இந்த கார் 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் தாண்டிவிடும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The 10 Best Accelaration Cars From Mercedes-Benz.
Story first published: Wednesday, July 22, 2015, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X