பீக் ஹவர் டிராஃபிக் ஜாமில் உலகின் மோசமான 10 நகரங்கள்: டாம்டாம் வெளியிட்ட லிஸ்ட்!

போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிதைந்து அலுவலகம் சென்று திரும்புவதற்குள் படும் பாடு சொல்லி மாளாது. இந்த நிலையில், அதிக நெரிசல் மிகுந்த உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்கள் குறித்து கார் நேவிகேஷன் சாதன தயாரிப்பு நிறுவனமான டாம்டாம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.

அதில், கடந்த ஆண்டு உலகின் மிக மோசமான போக்குவரத்து நகரங்கள் எவை என்பது குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் 218 நகரங்களின் போக்குவரத்து நெரிசல் குறித்து புள்ளிவிபரங்களை சேகரித்து இந்த பட்டியலை தயாரித்துள்ளனர்.

உலக அளவில் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 100 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் விரயம் செய்கிறாராம். வாருங்கள் உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை காணலாம்.

10. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

10. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் பீக் ஹவர் டிராஃபிக்கில் மிக மோசமானதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் இந்த நகரத்தில் அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு, சராசரியாக கூடுதலாக 25 நிமிடங்களை செலவழிக்க வேண்டியிருக்கிறதாம். ஒரு வாகன ஓட்டி ஆண்டுக்கு 95 மணி நேரத்தை விரயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாராம்.

Photo credit: Commons Wiki

 09. வார்சா, போலந்து

09. வார்சா, போலந்து

இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு கூடுதலாக 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதாம். மேலும், வாகனத்தில் செல்வோர் ஆண்டுக்கு சராசரியாக 103 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறாராம்.

Photo credit: Commons Wiki

08. புசாரெஸ்ட், ருமேனியா

08. புசாரெஸ்ட், ருமேனியா

இந்த நகரமும் பீக் ஹவர் டிராஃபிக்கில் அதிக நெருக்கடி கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு கூடுதலாக 27 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு சராசரியாக 104 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் விரயம் செய்கின்றனராம்.

Photo credit: Commons Wiki

 07. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

07. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் ரஷ்ய நகரம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். இந்த நகரத்தில் 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய தூரத்திற்கு கூடுதலாக 27 நிமிடங்களை தினசரி செலவிட வேண்டியிருக்கிறதாம்.

Photo credit: Commons Wiki

06. ரெசிஃபி, பிரேசில்

06. ரெசிஃபி, பிரேசில்

உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக பிரேசிலை குறிப்பிடலாம் என்றே தோன்றுகிறது. பிரேசில் நாட்டின் ரெசிஃபி நகரம் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 30 நிமிட பயணத்திற்கும் கூடுதலாக 27 நிமிடங்களை செலவிட வேண்டியிருக்கிறதாம். வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு சராசரியாக 103 மணிநேரம் போக்குவரத்து நெரிசலால் விரயம் செய்கின்றனராம்.

Photo credit: Commons Wiki

 05. சால்வேடார், பிரேசில்

05. சால்வேடார், பிரேசில்

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட உலகின் 5வது நகரமாக பிரேசில் நாட்டின் சால்வேடார் நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு வாகன ஓட்டி சராசரியாக 93 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறாராம். மேலும், அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய தூரத்திற்கு கூடுதலாக 25 நிமிடங்கள் செலவிட வேண்டியிருக்கிறதாம்.

Photo credit: Commons Wiki

 04. மாஸ்கோ, ரஷ்யா

04. மாஸ்கோ, ரஷ்யா

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இங்குள்ளவர்கள் பீக் ஹவரில் 30 நிமிடங்களில் செல்ல இடத்தை அடைவதற்கு, கூடுதலாக 31 நிமிடங்களை செலவிட வேண்டியிருக்கிறதாம்.

Photo credit: Commons Wiki

03. ரியோடி ஜெனிரோ, பிரேசில்

03. ரியோடி ஜெனிரோ, பிரேசில்

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரம் பீக் ஹவர் டிராஃபிக்கில் மிக மோசமான நெரிசலை சந்திக்கும் நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு சராசரியாக 94 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Photo credit: Commons Wiki

 02. மெக்சிக்கோ சிட்டி, மெக்சிக்கோ

02. மெக்சிக்கோ சிட்டி, மெக்சிக்கோ

பீக் ஹவர் டிராஃபிக் ஜாமில் மெக்சிக்கோ சிட்டிதான் உலகின் இரண்டாவது மோசமான நகரமாக குறிப்பிடப்படுகிறது. 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய தூரத்தை கடப்பதற்கு 58 நிமிடங்கள் பிடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 01. இஸ்தான்புல், துருக்கி

01. இஸ்தான்புல், துருக்கி

ஆசியாவையும், ஐரோப்பிய கண்டத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கும் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரம்தான் உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக டாம்டாம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு வாகன ஓட்டி 125 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய தூரத்திற்கு கூடுதலாக 29 நிமிடங்கள் செலவிட வேண்டியிருக்கிறதாம்.

 இந்திய நகரங்கள்

இந்திய நகரங்கள்

.நம் நாட்டில் டாம்டாம் நிறுவனம் செயல்பட்டு வந்தாலும், தேவையான புள்ளிவிபரங்களை பெறும் வகையில், போதிய கட்டமைப்பை இன்னும் பெறவில்லை. இந்தியாவில் நேவிகேஷன் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த பட்டியலில் இந்திய நகரங்களும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. அப்போது, உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் டாப் 10 பட்டியலில் இந்திய நகரங்கள் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தலையை சூடாக்கும் போக்குவரத்து நெரிசல்கள்

தலையை சூடாக்கும் போக்குவரத்து நெரிசல்கள்

01. வரலாற்றில் பதிவான உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் சம்பவங்கள்...

Most Read Articles
English summary
TomTom’s annual Traffic Index explores traffic congestion in over 218 cities around the world. The data revealed that the average commuter last year traveled an extra 100 hours during the evening rush hour alone.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X