உலகின் விலையுயர்ந்த டாப்-5 மோட்டார் சைக்கள்களின் பட்டியல்

ஆட்டோமொபைல் உலகில் தயாரிப்பு அளவிலும், விலையிலும் கவனம் ஈர்த்துள்ள டாப்- 5 பைக்குகளை குறித்து இங்கே பார்க்கலாம்

Written by: Azhagar

அசாத்திய திறன்பெற்ற, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கவேண்டும் என்பது ஒவ்வொருக்கும் இருக்கக்கூடிய கனவு. புதுசாக வாங்கிய வண்டியை விட, அதனுடைய விலையை சொல்லி நண்பர்களை ஆச்சர்யப்பட வைப்பதில் நமக்குள் ஒரு பெருமிதம் இருக்கும். எல்லோராலும் அந்த கனவை நினைவாக்கிக்கொள்ள முடியமா என்றாலும், காணும் கனவுகளுக்கு எல்லை இல்லை என்பது தான் உண்மை.

அப்படி ஒரு கனவை வைத்திருப்பவர்களுக்காக, உலகின் அதிக விலையுடனும், அதீத தரத்துடனும் தயாராகி வரும் மோட்டார் சைக்கள்களின் டாப் 5 பட்டியலை உங்களுக்காக...

எனர்ஜிக்கா ஈகோ 45

இத்தாலி நாட்டு நிறுவனமான எனர்ஜிக்கா நிறுவனம், மின்சார மோட்டார் சைக்கிள்களை தயாரிப்பதில் கில்லாடி. ஃபெராரி அமைந்திருக்கும் சாலையில் அடுத்த கடையை வைத்திருக்கும் எனர்ஜிக்கா நிறுவனம், தனது பெருமித படைப்பாக தயாரித்து வரும் வண்டி தான் எனர்ஜிக்கா ஈகோ 45.

 

என்னடா பெயரிலேயே ஈகோ உள்ளதே என்று பார்க்காதீர்கள், ஸ்போர்ட்ஸ் பைக்கான இது ட்ராக்குக்ளில் சீறிப் பாயும் மின்னல் வேகத்துடன் இயங்கக்கூடிய அளவில் தயாராகி வருகிறது. இப்படி ஒரு தகுதியை வைத்திருப்பதால் தான் எனர்ஜிகா நிறுவனம் வண்டிக்கு ஈகோ என்ற பெயரை வைத்துள்ளது.

ஈகோ மாடலில், முதல் தயாரிப்பாக 45 வண்டிகளை மட்டுமே எனர்ஜிகா வெளியிடுகிறது. அமெரிக்க மதிப்பில் 68000 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ள எனர்ஜிகா ஈகோ 45 பைக் இந்திய மதிப்பில் ரூ.45.21 லட்சமாகும்.

ஆர்ச் கெஆர்ஜிடி- 1

மேட்ரிக்ஸ் பட புகழ் நடிகரான கியானு ரீவ்ஸ், ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை தனக்கு ஏற்றவாறு வடிவமைப்பதில் கெட்டிகாரர். மோட்டார் சைக்கிள்கள் மீது தனக்கு இருக்கும் ஆசையால், தனது நண்பர் கார்ட் ஹோலிங்கருடன் இணைந்து கியானு ஆரம்பித்த நிறுவனம் தான் ஆர்ச் மோட்டார் சைக்கிள்ஸ்.

 

ஆர்ச் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகர் கியானு ரீவ்ஸ் வடிவமைத்து தயாரித்திருக்கும் வண்டிதான் ஆர்ச் கெஆர்ஜிடி- 1. இதுவரை தான் பயன்படுத்திய கஸ்டம் பைக்குகளிலிருந்து குறிப்புகளை எடுத்து இந்த புதிய மோட்டார் சைக்கிளை கியானு தயாரித்திருக்கிறார். 2032சிசியில், T124 v-ட்வின் சிலிண்டர் எஞ்சின், ஆர்ச் கெஆர்ஜிடி- 1 மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.

78,000 டாலர்கள் விலையை கொண்ட இந்த பைக், இந்திய மதிப்பில் ரூ.51.66 லட்சமாகும்.

எம் எம் எக்ஸ் 500

கிராண்ட் பிக்ஸ் விளையாட்டுகளில் முன்னணி வீரராக இருந்த எஸ்கில் ஸூட்டர், பந்தய உலகிற்கு மறுபிரவேசம் செய்கிறார். இம்முறை 500சிசி பைக்குகளுக்கான போட்டியில் களமிறங்கும் எஸ்கில் ஸூட்டர், எம் எம் எக்ஸ் 500 என்ற பெயரில் தயாராகிப்பட்டுள்ள வண்டியை போட்டியில் ஒட்டுகிறார்.

 

576சிசி, வி4 இருவிசையில் எதிர்த்து சுழலும் கிராங்ஷெஃப்ட்ஸ்களை கொண்டுள்ள ஸூட்டர் எம் எம் எக்ஸ் 500 வண்டி, 195 பிஎச்பி பவர் வழங்கும். ட்ராக்குகளில் மட்டுமே ஓட்டப்படும் இதனின் எடை 127 கிலோ கிராம். செயல் திறன், பெரும் எதிர்பார்ப்பு ஆகியவற்றில் முன்னிலையில் உள்ள எம் எம் எக்ஸ் 500 டாலர் மதிப்பில் 1,18,565 விலையை கொண்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.78.83 லட்சமாகும்.

G2 கான்ஃபெடரேட் P51 காம்பேட் ஃபைட்டர்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இயங்கும் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் நிறுவனம், தனது G1 ஹெல்கேட், G2 ஹெல்கேட் போன்ற வண்டிகளுக்காக உலகளவில் பெயர் பெற்றது. தற்போது அதே G வரிசையில் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் தயாரித்திருக்கும் வண்டி தான் G2 கான்ஃபெடரேட் P51 காம்பேட் ஃபைட்டர் மோட்டர் சைக்கிள்.

 

இந்த வண்டியை அறிமுகப்படுத்தும்போது, கான்ஃபெடரேட் கூறிய வார்த்தைகள் தான் ஆட்டோமொபைல் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. G2 கான்ஃபெடரேட் காம்பேட் P51 ஃபைட்டர் வண்டி மிருகத்தனமான, மாற்றம் தரக்கூடிய, புதிய வளமார்ந்த ஆற்றலை பெற்ற படைப்பாக கான்ஃபெடரேட் நிறுவனம் வண்டியை அடையாளப்படுத்தியது.

அந்நிறுவனம் கூறிய வார்த்தைகளைப்போலவே, வண்டியின் தோற்றம் வெளியானபோது மிரட்டலாக இருந்தது. உற்சாகமான சுதந்திரமான ஒரு பயணத்தை இந்த வண்டியில் மேற்கொள்ளும்போது, வண்டி ஓட்டுபவரின் தோள்கள் பெருமையால் கம்பீரமாக நிமிரும்.

அதுபோன்ற உணர்வை G2 கான்ஃபெடரேட் காம்பேட் P51 ஃபைட்டர் மோட்டார் சைக்கிளிடம் நீங்களும் பெறவேண்டும் என்றால், அமெரிக்க மதிப்பில் 140,000 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ. 93.09 லட்சமும் செலவழிக்க தயாராக இருங்கள். வண்டி வந்துகொண்டே இருக்கிறது.

ஹோண்டா RC213V-S

இதுவரை நாம் பார்த்த வண்டிகளிலேயே அதிக விலைக்கு தயாராகி வரும் மோட்டார் சைக்கிளை ஹோண்டா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹோண்டாவின் புதிய RC213V-S மோட்டார் சைக்கிள் உலகிலேயே அதிக விலையுயர்ந்த வண்டி என்று சொன்னாலும் மிகையாகாது.

 

2016ல் அறிமுகமான MotoGP என்ற வண்டியின் புதிய பிரதியாக வெளிவரவுள்ள வண்டி தான் ஹோண்டா RC213V-S. பொறியியல் துறையின் தலைசிறந்த வடிவமைப்பாக பார்க்கப்பட்டும் ஹோண்டா RC213V-S மாடலில் வெறும் 250 வண்டிகளே தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க மதிப்பில் 184,000 டாலர்களாக சந்தையில் விற்கப்படவுள்ள இந்த வண்டியின் விலை இந்தியாவில் ரூ. 1.22 கோடியாக உள்ளது.

2017ல் வெளிவர இருக்கும் ஹோண்டாவின் RC213V மோட்டோ ஜிபி வண்டியின் புகைப்படங்கள்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Here’s a look at the current top 5 most expensive production motorcycles in the world
Please Wait while comments are loading...

Latest Photos