நிலம், நீரில் செல்லும் இந்த ஆம்பிக்ரூஸர் எஸ்யூவிக்கு துபாயில் கிராக்கி!

நிலத்திலும், நீரிலும் செல்லும் தகவமைப்பு கொண்ட ஆம்பிபியஸ் வாகனங்கள் குறித்த ஏற்கனவே சில செய்திகளை படித்திருப்பீர்கள். அந்த வகையில், புதிதாக வந்திருக்கும் ஓர் எஸ்யூவி மாடல்தான் ஆம்பிக்ரூஸர்.

டச்சு நிறுவனத்தால் வடிவமைக்கப்படும் இந்த எஸ்யூவிக்கு துபாயில் அதிக டிமான்ட் இருக்கிறதாம். ஆர்டர்களும் அதிகம் வருகிறதாம். ஆம்பிக்ரூஸரின் சிறப்பம்சங்களையும், துபாயிலிருந்து ஆம்பிக்ரூஸருக்கு அதிக ஆர்டர்கள் கிடைப்பதற்கான காரணங்களையும் ஸ்லைடரில் காணலாம். வீடியோவையும் காணத்தவறாதீர்.

ஆம்பிக்ரூஸர் பற்றிய கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் தொடர்கிறது!

தயாரிப்பு அனுபவம்

தயாரிப்பு அனுபவம்

இந்த புதிய 4 வீல் டிரைவ் ஆம்பிக்ரூஸர் எஸ்யூவியை வடிவமைத்த டச்சு ஆம்ஃபிபியஸ் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனம் இதற்கு முன் நிலத்திலும், நீரிலும் செல்லும் பஸ்சை வடிவமைத்து அனுபவம் பெற்றது.

பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

ஆம்பிக்ரூஸரை ஒரு சிறந்த ஆஃப்ரோடராகவும் அதேநேரத்தில் நீரிலும் இயல்பாக மிதந்து செல்லும் விதத்திலும் வடிவமைத்துள்ளனர். மேலும், நெடுஞ்சாலை பயணத்திற்கும் ஏற்றது. குறிப்பாக, ஆஃப்ரோடு மற்றும் சாகச பயணங்கள் செல்வோருக்கு சிறப்பான மாடலாக இருக்கிறது.

வேகம்

வேகம்

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த வாகனம் தரையில் பிற கார்களை போன்ற வேகத்தில் செல்லும். ஆனால், தண்ணீரில் 13 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும்.

டொயோட்டா எஞ்சின்

டொயோட்டா எஞ்சின்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியின் 4.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. டொயோட்டா தயாரிப்புகளுக்கு துபாயில் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவேதான், டொயோட்டா எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த வாகனத்துக்கு துபாயில் இருந்து அதிக ஆர்டர்கள் வருகிறதாம்.

எளிமையான இயக்கம்

எளிமையான இயக்கம்

இந்த எஸ்யூவியை இயக்க சிறப்பு பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. மேலும், ஒரு பொத்தானை அழுத்தினால் எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு பதிலாக வாட்டர் ஜெட்டுக்கு செல்லும். இதன் பாடியும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

 இரு மாடல்கள்

இரு மாடல்கள்

2 டோர் சாஃப்ட் டாப் கொண்ட ஆம்பிக்ரூஸர் மாடல் 1.80 லட்சம் டாலர் விலையிலும், 4 டோர் முழுவதும் கட்டமைப்பு கொண்ட மாடல் 2.48 லட்சம் அமெரிக்க டாலர் விலையிலும் ஆர்டரில் பேரில் கிடைக்கிறது.

 சுற்றுலா பயன்பாடு

சுற்றுலா பயன்பாடு

இந்த புதிய ஆம்பிக்ரூஸர் எஸ்யூவியை சுற்றுலாத் துறையில் பயன்படுத்துவதற்காகவும் அதிக ஆர்டர்கள் வருகிறதாம். இது எந்தவொரு சாலை நிலையை சமாளிக்கும் திறன் கொண்டது என்று டச்சு ஆம்பிபியஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.

வீடியோ

வீடியோவில் ஆம்பிக்ரூஸர் எஸ்யூவியின் வல்லமையை பார்க்கலாம்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X