ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் அடையாளமாக திகழ்வது லோகோ எனப்படும் பிரத்யேக சின்னம்தான். பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்கும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், நிறுவனத்திற்கு தனித்துவம் கிடைப்பதற்கும் லோகோ முக்கிய காரணியாக இருக்கிறது. ஹீரோ ஹோண்டா உடைந்தபோது புதிய சின்னத்தை உருவாக்குவதற்காக பல கோடிகளை ஹீரோ மோட்டோ கார்ப் வாரி இறைத்தது நினைவிருக்கலாம்.
வர்த்தகத்தில் அதி முக்கியவத்துவம் வாய்ந்த பிராண்டு லோகோவை உருவாக்குவதற்கு தற்போது அதிக செலவிடப்பட்டு வரும் நிலையில், சில நிறுவனங்களின் லோகோ பிறந்த கதையில் சில சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளன. அதுபோன்றே, ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்டு லோகோ உருவானதிலும் இருக்கும் சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.
பின்னணி
பிஎம்டபிள்யூ விமான எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டபோது பிறந்ததுதான் இந்த லோகோ. விமானத்தின் முன்னாள் இருக்கும் புரொப்பல்லர் மற்றும் ஆகாயத்தின் நீலம் மற்றும் வெண்மை நிறத்தை அடிப்படையாக கொண்டு இந்த லோகோ உருவானதாக நினைக்கிறீர்களா. 1917ல் பிஎம்டபிள்யூ நிறுவனம் துவங்கியபோதுதான் இந்த லோகோ உருவானதா? அதுதான் இல்லை, அடுத்த படத்துக்கு வாருங்கள்.



































