கஸ்டமைஸ் வண்டிகளை விரும்புபவர்களுக்கான டிஸ்பர்டு கேடவர்

இருசக்கர வாகனங்களை பிரத்யேகமாக வடிவமைக்கும் பிரபல நிறுவனம் ஒன்று, தனது அடுத்த மோட்டார் சைக்கிள் மாடலை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரங்கள் உங்களுக்குகாக

Written by: Azhagar

திறன்பெற்ற மற்ற மோட்டார் சைக்கிள்களின் பாகங்களை கொண்டு புதிய வண்டியாக வடிவமைக்கும் (customization) நிறுவனம் மார்தாகுவ ஃபைட்டர். 1995ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இருசக்கர வாகனங்களை பிரத்யேகமாக வடிவமைத்து தருவதில் உலகின் முன்னணியில் உள்ளது.

போர்ச்சுகல் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கு மார்தாகுவ ஃபைட்டர், மோட்டார் சைக்கிள்களுக்கான வடிமைப்பில் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்ல பிரயத்தனப்படும்.

போர்ச்சுகல் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கு மார்தாகுவ ஃபைட்டர், மோட்டார் சைக்கிள்களுக்கான வடிமைப்பில் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்ல பிரயத்தனப்படும்.

பெயருக்கு ஏற்றவாறு மோட்டார் சைக்கிளை பார்க்கும்போது நமக்கும் பைக்கை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது. அதேபோல இந்த நிறுவனம் வடிவைக்கும் 8வது மோட்டார் சைக்கிளாகவும் டிஸ்டர்படு கேடவர் உள்ளது.

பைக்கை பார்க்கும்போது நமக்கு படங்களில் பேட்மென் பயன்படுத்தும் வண்டிபோல் தோன்றினாலும், வண்டியில் முனைகள், வடிவங்கள் அனைத்தும் எதிர்கால வடிவமைப்புகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது போன்ற சிந்தனையை தருகிறது.

இந்தாண்டில் மார்தாகுவ ஃபைட்டர் வெளியிடும் டிஸ்டர்படு கேடவரில் 1993ம் ஆண்டு சூசிகி நிறுவனம் வெளியிட்ட GSX-R1100 எஞ்சினை இடம்பெற்றுள்ளது. மேலும், 17 அங்குல சக்கரங்களை பொருத்தப்பட்ட மிரட்டலான தோற்றத்துடன் உள்ளது

சுஸுகி நிறுவனம் தனது தயாரிப்புகளில் பயன்படுத்தும் வடிவமைப்புகளை கொண்டே பெரும்பாலும், டிஸ்டர்படு கேடவர் மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான உருவாக்க பணிகளில் கூட சில சூசிகி நிறுவன பொறியாளர்களும் பணியாற்றியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளிற்கு ஒரு மிரட்டலான தோற்றத்தை தர, பைக்கின் எஞ்சின் உட்பட சில பாகங்கள் வெளியே தெரியும்படியே தயாரிக்கப்பட்டுள்ளது. அதை மெருகேற்றி காட்ட வெள்ளை, தங்கநிறங்கள் வன்ணங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மிரட்டலான வண்டிகள் எதிர்காலத்தில் எப்படி ஒரு கண்ணோட்டத்துடன் தயாரிக்கப்படுமோ அதுபோன்ற வடிவமைப்பையே டிஸ்பர்டு கேடவர் மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது.

தனித்துவமான இயந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படும் டிஸ்டபர்டு கேடவர் மோட்டார் சைக்கிளை கிட்டத்தட்ட 18 மாதங்கள் வடிவமைத்திருக்கிறார், மார்தாகுவ ஃபைட்டர் நிறுவனத்தின் தலைவர் கர்லோஸ் ராட்ரிகுவிஸ்.


எங்களது தளத்தில் வாசகர்கள் படித்துவரும் பிரதானமான மற்ற செய்திகள்

 

புதிய கவாஸாகி நிஞ்சா ZX-10RR மோட்டார் சைக்கிளின் புகைப்பட தொகுப்பு!

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Saturday, March 18, 2017, 15:48 [IST]
English summary
Mortagua Fighter was established in 1995 and has become synonymous with a very particular design style of Carlos Rodrigues
Please Wait while comments are loading...

Latest Photos