அனுமானின் உருவப்படத்தை ஃபேஷனாக்கும் கர்நாடகா இளைஞர்கள்

ஆட்டோமொபைல் உலகில் கோபம் கொண்ட அனுமானின் போஸ்டர் ஒன்று ஃபேஷனாகி வருகிறது. பெங்களூரு நகர வாகனங்களில் பரவலாக இடம்பெற்றிருக்கும் இந்த ஸ்டிக்கர் குறித்த பின்னணி தகவல்களை பார்க்கலாம்.

பெங்களூரு டிராஃபிக்கில் சாலையை அடைத்து நிற்கும் வண்டிகளுக்கு மத்தியில் சோர்வடைந்திருக்கும் மக்களுக்கு பரவசம் ஏற்படுத்து வருகிறார் புஜபல பாராக்கிறமசாலியான கடவுள் அனுமான். கோபமான உணர்ச்சியோடு பெங்களூரு நகர வண்டிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் அனுமானின் ஸ்டிக்கர் ஒன்று ஆட்டொமொபைல் சூழ் உலகில் கவனிப்பை ஈர்த்திருக்கிறது.

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

அனுமானின் இந்த ஸ்டிக்கரை தனியார் வாகனங்கள் மட்டுமின்றி ஒரு சில அரசு தரப்பு வண்டிகளிலும் ஒட்டப்பட்டு இருக்கின்றன. வாகனங்களின் புதிய அடையாளமாக மாறிப்போயிருக்கும் இந்த ஸ்டிக்கரை வடிவமைத்தவர் கேரளாவை சேர்ந்த கிராஃபிக் டிசைனரான கரண் ஆச்சார்யா.

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

கோபம் கண்ட அனுமான் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த படத்தை வடிவமைத்த பிறகு மறந்தே போய்விட்டார் கரண். பின், ஒருவருடம் கழித்து, மங்களூருவில் உள்ள ஒரு நண்பர் கர்நாடகாவில் அனுமானின் ஸ்டிக்கர் வைரலான செய்தியை கூற, பிறகு தான் அதற்கான டிசனை செய்த நினைவு கரணுக்கு வந்துள்ளது.

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

அனுமான் ஸ்டிக்கரை கரண் தான் வடிவமைத்தார் என்பது அவரது நண்பரில் சிலருக்கு தான் தெரியும், ஒரு சாதரண டிசைனாகவே கரண் அதனை உருவாக்கியிருந்ததால், வாட்டர் மார்க் தொழில்நுட்பத்தை கூட படத்தில் கரண் பயன்படுத்தமால் போய்விட்டார். தற்போது இது அவருக்கு மிகவேதனையை அளித்துள்ளது.

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

கோபம் கொண்ட அனுமான் என்று நாம் இந்த ஸ்டிக்கரை கூறிவருகிறோம், ஆனால் இதை வடிவமைத்த கரண் ஆச்சார்யாவோ படத்தில் அனுமான் கோபமாகவே இல்லை என்கிறார். இப்படி ஒரு டிசைனை உருவாக்கலாம் என்று ஐடியா தோன்றியபோது, அனுமானின் முகத்தில் ஒரு அளூமையை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என ஒரு உடனிருந்த நண்பர் கூறியிருக்கிறார். அதன்பிறகே அனுமானின் முகத்தில் அப்படியொரு உணர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

இளைஞர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ஸ்டிக்கரை தனது டாக்ஸியில் ஒட்டியிருக்கும் ஓட்டுநர் கிரிஷ் குமார், கோபம்கொண்ட அனுமானின் ஸ்டிக்கர் தற்போது சாலைகளில் ஃபேஷனாகி விட்டதாகவும், மிக பழமையான தனது வண்டியே அனுமானின் படத்தை ஒட்டிய பிறகு புதியது போல் உள்ளதாகவும் கூறுகிறார்.

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவுகளில் பெரும்பாலானோர் தங்களது கார், பைக்குகளை மிரட்டலாகவும், மிரட்சியாகவும் மாற்றியமைத்துக்கொண்டு இருக்கும் தற்போதைய சூழலில், ஒரு படம், ஒரே ஒரு அனுமான் படம் கர்நாடாக மாநிலத்தில் ஆட்டோமொபைல் வர்த்தக்கத்தில் வைரலாகி உள்ளது, இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாகும்

பெங்களூரு வாகனங்களில் ஆதிக்கம் செலுத்தும் அனுமான்

இனி வரும் காலங்களில் டிரெண்டுகளுக்கு ஏற்றவாறு, வாகன தயாரிப்பில் உள்ள பல முன்னணி நிறுவனங்களே போஸ்டர் டிசைனில் இறங்கி விடும் போல. பைக், ஸ்கூட்டர், கார் போன்று வண்டிகளில் மட்டுமல்லாமல், டி-ஷர்ட், லேப்டாப் கவர், சுடிதார் என கோபம் கொண்ட அனுமான் எங்கும் நீக்கம் மற நிறைந்திருக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bengaluru has an undeniable traffic problem. During the hours spent in its standstill traffic, when engines are killed and drivers look around to acknowledge mutual irritation, there is plenty of time to count the saffron and black images of Hanuman pasted proudly on motorbikes and cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X