ரூ.1.27 கோடியில் விலையில் புதிய ஆடம்பர படகு: முன்பதிவு நடக்கிறது

By Saravana

ஆடம்பர வசதிகள் மற்றும் பல்வகை பயன்பாட்டுக்கு ஏற்ற அடக்கமான புதிய ஆடம்பர படகை இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரை சேர்ந்த நிறுவனம் படகு தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.1.27 கோடி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த படகை தனி நபர் பயன்பாடு தவிர்த்து ரோந்து மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்த முடியும்.

கடல்சார்ந்த பகுதிகளுக்கு டாக்சியாகவும் பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த பல் வகை பயன்பாட்டு படகு குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

மொனாகோவில் நடந்த கண்காட்சியில் இந்த ஆடம்பர படகு அறிமுகம் செய்யப்பட்டது. ஜெட் கேப்சூல் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த படகுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. அடுத்த 4 மாதங்களில் இந்த படகின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க உள்ளன.

பரிமாணம்

பரிமாணம்

24.6 அடி நீளம், 11.5 அடி அகலம் கொண்டதாக மிக தாராள உட்புற இடவசதியுடன் மிகச் சிறந்த தோற்றத்தை கொண்டிருக்கிறது. இந்த ஆடம்பர படகின் இன்டிரியரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

சுற்றுலா ஸ்தலங்களில் வாடகை படகாகவும், நதிகள் மற்றும் கடல்வழி போக்குவரத்துக்கும், போலீசாரின் கண்காணிப்பு பணிகளுக்கும் இந்த படகை பயன்படுத்த முடியும். இதுதவிர, மருத்துவ உபகரணங்களை பொருத்தி ஆம்புலன்ஸ் போன்றும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

வாடிக்கையாளர்களின் விருப்பத்தை உணர்ந்து இந்த படகில் வசதிகளை ஏற்படுத்த முடியும். படுக்கையாக மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட சோபா, குளியலறை, சமையலறை உள்ளிட்ட வசதிகளை இதில் செய்து கொடுப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

விதவிதமான விளக்குகள், பின்புறம் தானியங்கி கதவுகள், சன்டெக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

இந்த படகு கார்பன் ஃபைபர் பாடி கொண்டுள்ளதால் மிக உறுதியானதாக இருக்கிறது.

டாக்சி

டாக்சி

இந்த படகை 6 பேர் அல்லது 9 பேர் செல்லும் வகையிலான இருக்கை வசதியுடன் கூடிய டாக்சியாக கட்டமைத்து பெறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

315 எச்பி முதல் 740எச்பி வரையிலான திறன் கொண்ட எஞ்சின்களை உரிமையாளர் விருப்பம் மற்றும் பயன்பாட்டில் அடிப்படையில் பொருத்திக் கொள்ளலாம்.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

இந்த படகு 70 சதவீதம் கார்பன் ஃபைபர் வாக்கம் மோல்டிங் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, மிக இலகுவான எடை கொண்டிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகம் வரை செலுத்த முடியும் என்பதால் ஆம்புலன்ஸ், ரோந்து பணிகளுக்கும் மிகச் சிறந்ததாக இருக்கும்.

Most Read Articles
Story first published: Wednesday, November 13, 2013, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X