சாதனை மேல் சாதனை... 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

மெட்ரோ மேன் என்று மக்களால் போற்றப்படும் பொறியாளர் ஸ்ரீதரன் இந்திய ரயில்வே துறைக்கு செய்த அளப்பரிய சாதனைகளை இந்த செய்தி பட்டியலிடுகிறது.

By Saravana Rajan

கொச்சி மெட்ரோ ரயில் துவக்க விழாவில், அதனை தலைமையேற்று நடத்திய மெட்ரோ மேன் ஸ்ரீதரன் மேடையில் அமர்வதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்தது.

அதன்பின், மேடையில் ஸ்ரீதரன் அமர்வதற்கு அனுமதி வழங்குமாறு கேரள அரசு கடும் அழுத்தம் கொடுத்தது. ஸ்ரீதரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ஆனால், பிரதமரின் பாதுகாப்பே மிக முக்கியம். நான் மேடையில் அமர்வது பெரிய விஷயமல்ல என்று வழக்கம்போல் தன்னடக்கத்துடன் ஸ்ரீதரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீதரனுக்கு உள்ள செல்வாக்கையும், அவருக்கு சார்பாக சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்பையும், சற்றும் எதிர்பாராத பிரதமர் அலுவலகம் உடனடியாக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை பிரதமர் அமரும் துவக்க விழா மேடையில் அமர்வதற்கு அனுமதி வழங்கியது.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்த நிலையில், ஸ்ரீதரனுக்கு இந்தளவு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதற்கான காரணங்கள் மிகவும் வலுவானவை. இந்திய பொறியியல் துறையில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ஸ்ரீதரன்.

ரயில் போக்குவரத்து துறையில், ஸ்ரீதரன் ஆற்றிய அரும் பணிகள் பற்றியும், சாதனைகள் பற்றியும் திரும்பி பார்க்கும் விதத்தில் இந்த செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

1932ம் ஆண்டு கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வரவூர் என்ற ஊரில் சேர்ந்தவர் ஸ்ரீதரன். தற்போது 85 வயதாகும் ஸ்ரீதரன் பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் பயின்றவர். கட்டடப் பொறியியல் துறை பேராசிரியராக பணியை துவங்கியவர்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

1964ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் புயல் காற்றில் கடுமையாக சேதமடைந்தது. இதனால், ராமேஸ்வரம் தீவுடனான தொடர்பு பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில், சேதமடைந்த பாம்பன்

பாலத்தை சீரமைத்து கொடுக்க 6 மாதங்கள் காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில், வெறும் 3 மாதங்களில் புனரமைத்து கொடுத்து மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இதுதவிர, இந்திய ரயில்வே துறையின் பொறியியல் வல்லமையை பரைசாற்றும் விதமாக அமைக்கப்பட்ட கொங்கன் ரயில் பாதை திட்டத்தையும் இவர்தான் தலைமையேற்று முடித்தார்.

மிக சவாலான இந்த ரயில் வழித்தடம், இந்தியாவின் மிக அழகான ரயில் வழித்தடங்களில் ஒன்றாக சுற்றுலாப் பயணிகளால் போற்றப்படுகிறது. அத்துடன், இந்த பாதையில் பயணிப்பது பலரின் கனவாக உள்ளது.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

1970ம் ஆண்டு இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டமான கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவில் துணை தலைமை பொறியாளராக பணியமர்த்தப்பட்டார். அடுத்து, நாட்டிலேயே மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டிருக்கும் டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தலைவரானார்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

கடந்த 1995ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். டெல்லி மெட்ரோ ரயில் மிக வெற்றிகரமாக செயல்படுவதற்கு மூலக்காரணமாக இவர் கருதப்படுகிறார்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இதைத்தொடர்ந்து, தற்போது கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் தலைமை வகித்துள்ளார். மேலும், கொச்சி மெட்ரோ திட்டப் பணிகளை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றி சாதித்து காட்டியிருக்கிறார்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

லக்ணோ மெட்ரோ ரயில் திட்டம், ஜெய்ப்பூர் மெட்ரோ, விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். எனவேதான், இவருடைய பெயருடன் மெட்ரோ மேன் என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டுவிட்டது.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இவரது அளப்பரிய சாதனைகளை போற்றும் விதமாக பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷன் போன்ற நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார். 2003ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட ஆசியாவின் தலைசிறந்த மனிதர்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ஆனால், இவரது சேவைகளுக்காக மக்களும், ஊடகங்களும் வழங்கிய விருதுதான் மெட்ரோ மேன் என்ற செல்ல பெயர். ஆம், நாட்டின் பல கோடி மக்கள் இன்று சிறப்பான போக்குவரத்தை பெறுவதற்கான காரணிகளில் ஒருவராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் விளங்குகிறார்.

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பணிகள் செவ்வனே தொடர வேண்டும் என்று டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாழ்த்துகிறது.

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீதரனை நிறுத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெறுவதற்கு மெட்ரோ மேன் ஸ்ரீதரன் சிறந்த தேர்வாக இருக்கும் என்று பாஜக கருதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Metro Man Sreedharan- Drivespark Exclusive.
Story first published: Saturday, June 17, 2017, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X