உலகின் மிகவும் அபாயகரமான ரயில் வழித்தடங்கள்!

பயணிகளுக்கு பாதுகாப்பான உணர்வை அளிக்கும் ரயில் பயணங்கள் அதன் செல்லும் வழியால் சில நேரங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதாவும் அமைந்துவிடுகிறது.

அதள பாதாளத்திலிருந்து எழுப்பப்பட்ட பாலங்கள், மலைச்சரிவுகள், அச்சுறுத்தும் கடற்கரையோரங்கள் என ரயில் வழித்தடங்கள் சில அபாயகரமான பகுதிகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதுபோன்ற, உலகின் மிக மோசமானதாக கருதப்படும் 10 ரயில் வழித்தடங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சிக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

அழகும், ஆபத்தும்...

அழகும், ஆபத்தும்...

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உலகின் ஆபத்துகள் நிறைந்த 10 வழித்தடங்கள் பற்றிய தகவல்களை காணலாம். அபாயகரமானதாக குறிப்பிடப்படும் இந்த வழித்தடங்களில் பெரும்பாலானவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அழகான ரயில் வழித்தடங்களாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1. ஆஸ்திரேலியா

1. ஆஸ்திரேலியா

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பதுபோல அமைந்திருக்கும் இந்த ரயில் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கெய்ர்ன்ஸ் நகரிலிருந்து குரந்தா என்ற சிறு நகரத்தை இணைக்கிறது. ஆஸ்திரேலியாவின் பேரன் கார்ஜ் தேசிய பூங்காவை இந்த தடம் கடந்து செல்கிறது. நீர்வீழ்ச்சிகள் மலைச்சரிவுகள், செங்குத்தான பாலங்கள் வழியாக செல்லும்போது மனதில் குளிரையும், பயத்தையும் ஒரு சேர வழங்கும்.

2. இந்தோனேஷியா

2. இந்தோனேஷியா

ஜகார்த்தாவிலிருந்து பாண்டூங் என்ற பகுதியை இணைக்கும் ரயில் பாதை மலையழகை கண்டு ரசிக்கக்கூடிய பயணமாக அமையும். ஆறுகள், பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் இந்த ரயில் வழித்தடமும் உலகின் அபாயகரமான ரயில் வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரயில் விபத்துகளும் நடந்துள்ளன.

3.தென் ஆப்ரிக்கா

3.தென் ஆப்ரிக்கா

1908ல் முதல் சேவையை துவங்கிய ஒட்டினிக்கா ச்சூ ஜோ என்ற ரயில் தென் ஆப்ரிக்காவின் மேற்கு கேப் பகுதியிலுள்ள ஜார்ஜ் மற்றும் நிஸ்னா பகுதிகளை இணைக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு வரை நீராவி எஞ்சின் மூலம் இயக்கப்பட்டது. 67 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தில் தற்போது டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மிக பழமை வாய்ந்த இந்த ரயில் தடத்தில் உள்ள பாலங்கள் வழியாக செல்லும்போது பயணிகள் ஆபத்தை உணரலாம். குறிப்பாக, காய்மான்ஸ் ஆற்றுப் பாலம் அழகும், ஆபத்தும் நிறைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

4. அமெரிக்கா

4. அமெரிக்கா

கொலராடோவிலுள்ள அன்டோனிட்டோ மற்றும் நியூ மெக்சிகோவிலுள்ள சாமா நகரங்களுக்கு இடையிலான ரயில் வழித்தடமும் மிகவும் ஆபத்தானதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிக நீளமான குறுகிய ரயில் பாதையாக விளங்குகிறது. குகைகள், செங்குத்து பாலங்கள் வழியாக கடந்து செல்லும்போது பயணிகளை பரவசப்படுத்தும்.

5. அர்ஜென்டினா

5. அர்ஜென்டினா

வடமத்திய அர்ஜென்டினாவிலுள்ள சால்டாவிலிருந்து சிலி நாட்டு எல்லையிலுள்ள லா போல்வொரில்லாவை இணைக்கும் இந்த ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் 1921ல் இருந்து 1948 வரை நடந்தது. 21 குகைகள், 13 பாலங்கள் வழியாக செல்லும் இந்த வழித்தடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என்பதோடு, ஆபத்துக்களும் நிறைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

6.இங்கிலாந்து

6.இங்கிலாந்து

இங்கிலாந்தின் லின்டன் அண்ட் லின்மவுத் கிளிப் இடையிலான ரயில் வழித்தடம் துணிச்சல்காரர்களையும் அச்சுறுத்தும் ரயில் வழித்தடமாக குறிப்பிடப்படுகிறது.

7.அலாஸ்கா, அமெரிக்கா

7.அலாஸ்கா, அமெரிக்கா

அமெரிக்காவின் அலாஸ்காவின் ஸ்காக்வே துறைமுகத்தையும், யகோனிலுள்ள ஒயிட்ஹார்ஸ் பகுதியையும் இணைக்கும் ரயில் வழித்தடம் இது. 1898ல் கட்டுமானப் பணிகள் துவங்கி 1900ல் நிறைவடைந்தன. பனிபடர்ந்த மலைகளில் கடும் முயற்சிகளுக்கு பின்னர் இந்த ரயில் பாதையை அமைத்தனர். இன்றளவும் இது மிக மோசமான ரயில் வழித்தடமாக குறிப்பிடப்படுகிறது.

8.கொலராடோ, அமெரிக்கா

8.கொலராடோ, அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோவின் வடபகுதிகளை இணைக்கும் இந்த ரயில் வழித்தடம் ஆபத்துக்கள் நிறைந்ததே. தற்போது சுற்றுலா ரயிலாக கோடைகாலங்களில் இயக்கப்படுகிறது. சுரங்கங்கள் நிறைந்த இந்த வழித்தடமும் பயணிகளுக்கு ஜிலீர் அனுபவத்தை வழங்குவதாகவே உள்ளது.

9. அசோ மினாமி, ஜப்பான்

9. அசோ மினாமி, ஜப்பான்

எரிமலைகள் சூழ்ந்த பகுதிகள் வழியாக செல்லும் மிக ஆபத்தான ஜப்பானிய வழித்தடமாக இது குறிப்பிடப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த வழித்தடமாக உள்ளது.

10. ராமேஸ்வரம்

10. ராமேஸ்வரம்

உலகின்ஆபத்தான வழித்தடங்களில் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலமும் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் அதிக ஆபத்துக்கள் உள்ள இந்த ரயில் வழித்தடமும் ஆன்மிக சுற்றுலா மற்றும் வெளிநாட்டினரை கவர்ந்த ரயில் வழித்தடமாக உள்ளது. பலமான காற்று வீச்சு, கடல் அலைகளின் ஆபத்துக்களை கடந்து ரயில் செல்லும்போது பயணிகளுக்கு நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.

Most Read Articles
English summary
Here’s top 10 most dangerous railroads in the world. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X