உலகில் அதிகம் தயாரிக்கப்பட்ட டாப் 10 போர் விமானங்கள்!

By Saravana

ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கும், அந்த நாடு வைத்திருக்கும் போர் விமானங்களின் எண்ணிக்கையும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எதிரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு இந்த எண்ணிக்கை அத்தியாவசியமானதாக உள்ளது. ஆனால், பெரும் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் சந்தித்த இரண்டாம் உலகப் போர்தான் போர் விமான பயன்பாட்டின் முக்கியமான காலக்கட்டமாக இருந்துள்ளது.

போர் விமானங்களுக்கு இருந்த தேவையும், உற்பத்தி எண்ணிக்கையும் அந்த காலக்கட்டத்தில் இருந்த தொழில்நுட்பங்களை வைத்து சாத்தியமானதை நினைத்து வியக்க வைக்கிறது. இந்த நவீன தொழில்நுட்ப உலகில், பொருளாதாரத்தில் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தியா, தேஜஸ் என்றொரு சொந்த போர் விமானத்தை தயாரிக்க எடுத்துக் கொண்ட காலமும், அது இன்னமும் பயன்பாட்டில் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கை பிசைந்து வரும் நிலையில், இரண்டாம் உலகப்போரின்போது குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் போர் விமானங்களின் எண்ணிக்கை வியப்பை ஏற்படுத்துகிறது.

அவ்வாறு உலகிலேயே அதிகம் தயாரிக்கப்பட்ட டாப் 10 போர் விமானங்கள் பற்றி செய்தித் தொகுப்பை இங்கே காணலாம்.

10. ஹாக்கர் ஹூரிக்கேன்

10. ஹாக்கர் ஹூரிக்கேன்

இங்கிலாந்து நாட்டு தயாரிப்பான இந்த போர் விமானம் ஒற்றை இருக்கை அமைப்பு கொண்டது. இங்கிலாந்தின் ராயல் ஏர் ஃபோர்ஸ்க்காக ஹாக்கர் நிறுவனம் வடிவமைத்து தயாரித்தது. இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் மிக முக்கிய தாக்குதல் சக்தியாக விளங்கியது. எதிரி நாடுகளுக்கு இந்த விமானங்களின் தாக்குதல் திறனை கண்டு அச்சம் கொண்டன. மொத்தம் 14,533 ஹாக்கர் ஹூரிக்கேன் விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

Photo credit:- Wiki Commons/Arpingstone

09. ஜுங்கர்ஸ் ஜூ- 88

09. ஜுங்கர்ஸ் ஜூ- 88

இரண்டாம் உலகப்போரின்போது அதிக பயன்பாட்டில் இருந்த இந்த விமானம் ஜெர்மானிய தயாரிப்பு. எதிரிகளின் கூடாரத்திற்குள் சென்று அதிவேகமாக குண்டு வீசி பல தாக்குதல்களை நடத்தி அப்போதையே அதி அதிவேக குண்டு வீச்சு விமானமாக பெயர் பெற்றது.

Photo credit: Wiki Commons/Martin

08. நார்த் அமெரிக்கன் பி- 51 மஸ்டாங்

08. நார்த் அமெரிக்கன் பி- 51 மஸ்டாங்

அமெரிக்காவின் நீண்ட தூர இலக்கை தாக்கும் திறன் கொண்ட ஒற்றை இருக்கை போர் விமானம். இரண்டாம் உலகப்போர் மற்றும் கொரிய போர்களின்போது இது அமெரிக்காவின் மிக முக்கிய தாக்குதல் கருவியாக பயன்பட்டது. இதனை வட அமெரிக்க ஏவியேஷன் கம்பெனி தயாரித்தது. மொத்தம் 15,875 மஸ்டாங் விமானங்Kல் தயாரிக்கப்பட்டன. இந்த விமானத்தின் பெருமையை பரைசாற்றும் விதத்திலேயே ஃபோர்டு மஸ்டாங் பெயரிடப்பட்டது.

Photo credit: Wiki Commons/US Goverment

07. ரிபப்ளிக் பி47 தண்டர்போல்ட்

07. ரிபப்ளிக் பி47 தண்டர்போல்ட்

ரிபப்ளிக் பி47 தண்டர்போல்ட் விமானமும் அமெரிக்க தயாரிப்புதான். இந்த விமானத்தில் 1,133 கிலோ குண்டுகளை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இது இரட்டை எஞ்சின் கொண்ட குண்டு வீச்சு விமானம். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் முக்கிய குண்டு வீச்சு விமானமாக விளங்கியது. மொத்தம் 16,231 விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/US Air Force photo

06. கன்சாலிடேடட் பி-24 லிபரேட்டர்

06. கன்சாலிடேடட் பி-24 லிபரேட்டர்

கன்சாலிடேடட் பி24 லிபரேட்டர் சக்திவாய்ந்த குண்டு வீச்சு விமானம். இதுவும் அமெரிக்க தயாரிப்புதான். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவும், நேச நாட்டுப் படைகளும் இந்த விமானத்தை பயன்படுத்தின. மொத்தமாக 18,482 விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/U.S. Air Force photos

05. சூப்பர்மரைன் ஸ்பிட்ஃபயர்

05. சூப்பர்மரைன் ஸ்பிட்ஃபயர்

இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பு. இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தும், நேச நாட்டுப் படைகளும் இந்த விமானத்தை அதிக அளவில் பயன்படுத்தின. பறப்பதற்கு தகுதியுடைய 53 ஸ்பிட்ஃபயர் விமானங்கள் தற்போது உலகின் பல்வேறு நாட்டு விமான அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் உலகப்போர் முடியும் வரை தொடர்ந்து இந்த விமானத்தை இங்கிலாந்து உற்பத்தி செய்தது. மொத்தமாக 20,351 ஸ்பிட்ஃபயர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/Bryan Fury75

04. ஃபாக் வல்ஃப் எஃப்டபிள்யூ 190 வர்கர்

04. ஃபாக் வல்ஃப் எஃப்டபிள்யூ 190 வர்கர்

இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட விமான மாடல்களில் இதுவும் ஒன்று என்பதுடன், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. ஜெர்மானிய தயாரிப்பு போர் விமான இதில் ஒரு பைலட் அமர்ந்து செலுத்தும் அமைப்பு கொண்டது. இரவிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானம். மொத்தம் 29,001 வர்கர் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/USAAF

 03. மெஸ்ஸர்ச்மிட் பிஎஃப் 109

03. மெஸ்ஸர்ச்மிட் பிஎஃப் 109

நேச நாட்டு விமானப்படையினரால் 109 என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த போர் விமானம் இரண்டாம் உலகப்போரின்போது அதிகம் பயன்படுத்தப்பட்டது. மெஸ்ஸர்ச்மிட் மற்றும் ராபர்ட் லசர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் வடிவமைக்கப்பட்ட நவீன ரக போர் விமானமாக இது குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 30,480 மெஸ்ஸர்ச்மிட் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/D. Miller

02. யகோவ்லேவ் யாக்- 3

02. யகோவ்லேவ் யாக்- 3

இரண்டாம் உலகப்போரின்போது அதிகம் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களில் ரஷ்ய தயாரிப்பான யகோவ்லேவ் யாக் 3 போர் விமானமும் ஒன்று. விமானிகளாலும், தரைக் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிகளாலும் மிகவும் விரும்பப்பட்ட மாடல். மொத்தம் 31,000க்கும் மேற்பட்ட யகோவ்லேவ் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/Marko M

01. இலுஷின் Il-2 போர் விமானம்

01. இலுஷின் Il-2 போர் விமானம்

இரண்டாம் உலகப்போரின்போது அதிகம் பயன்படுத்த மாடல்களில் இலுஷின் Il-2 போர் விமானம் ஸ்டர்மொவிக் விமானம் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. சோவியத் யூனியனின் தயாரிப்பு. மொத்தம் 36,183 இலுஷின் Il-2 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இலுஷின் Il-2 அடிப்படையில் வெளிவந்த இலுஷின் Il-10 போர் விமானத்தையும் சேர்த்து இலுஷின் வரிசையி்ல 42,330 போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. ஒரே டிசைனில் உலகிலேயே அதிகம் தயாரிக்கப்பட்ட போர் விமானம் என்ற பெருமையை இந்த விமானம் பெற்றிருக்கிறது.

Photo credit: Wiki Commons/John Veit

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Here are 10 Most Produced Combat Aircrafts in the world.
Story first published: Tuesday, May 12, 2015, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X