ஜப்பான் புல்லட் ரயிலை விஞ்சிய வேகம்... உலகின் அதிவேக டிரக் பற்றிய தகவல்கள்!!

By Saravana

ஷாக்வேவ்... நம் இருதயத்திலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும் அம்சங்களை உள்தாங்கி நிற்கிறது இந்த உலகின் அதிவேக டிரக். ஜப்பானிய புல்லட் ரயிலின் வேகத்தையும் விஞ்சிவிடும் ஆற்றல் கொண்ட இந்த சமீபத்தில் கனடாவின் ஒன்டாரியோ நகரில் நடந்த ஆட்டோமொபைல் திருவிழாவில் காட்சி தந்தது.

கடந்த 1984ம் ஆண்டு லெஸ் ஷாக்லி என்பவர் உருவாக்கிய இந்த டிரக்கை டார்னெல்(64) மற்றும் அவரது மகன் கிறிஸ்(31) ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு வாங்கியதுடன், புதுப்பொலிவு கொடுத்து, எஞ்சினிலும் மாற்றங்களை செய்தனர். ஒன்டாரியோ நகரில் சமீபத்தில் தனது வல்லமையை காட்டி, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும், இந்த டிரக்கை பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகள், படங்கள் மற்றும் வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.

வேகம்

வேகம்

அதிகபட்மாக மணிக்கு 605 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. ஜப்பானிய புல்லட் ரயிலின் வேகத்தை விட இது வேகம் அதிகம். இதுமட்டுமா 0- 482 கிமீ வேகத்தை வெறும் 11 வினாடிகளில் எட்டிவிடுமாம்.

 எஞ்சின்கள்

எஞ்சின்கள்

அமெரிக்க கப்பற்படையின் டி2ஏ புக்கி விமானங்களில் பயன்படுத்தப்படும் பிராட் அண்ட் ஒயிட்னி ஜே34 என்ற மூன்று ஜெட் எஞ்சின்களை இந்த டிரக்கில் பொருத்தியிருக்கின்றனர்.

 பவர்

பவர்

ஒவ்வொரு ஜெட் எஞ்சினும் 12,000 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஒட்டுமொத்தமாக இந்த ஜெட் எஞ்சின்கள் அதிகபட்சமாக 36,000 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.

சேஸீ

சேஸீ

1985ம் ஆண்டு வருடத்திய பீட்டர்பில்ட் கேப் சேஸீயில் இந்த டிரக்கை வடிவமைத்துள்ளனர். இது 3 டன்னுக்கும் அதிகமான எடையை கொண்டிருக்கிறது.

பாராஷூட்

பாராஷூட்

விமான ஓடுதளங்களில் அதிவேகத்தில் சென்று தனது வல்லமையை பரைசாற்றும் இந்த டிரக்கின் வேகத்தை குறைப்பதற்காக, பாராஷூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, மிகப்பெரிய டிஸ்க் பிரேக்குகளையும் பொருத்தியுள்ளனர்.

ஸ்பாய்லர்

ஸ்பாய்லர்

அதிவேகத்தில் செல்லும்போது டிரக்குக்கு அதிக நிலைத்தன்மையை தருவதற்காக மிக பிரம்மாண்டமான ஸ்பாய்லர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

வீடியோ

தீ சுவாலையை கக்கியபடி இந்த டிரக் காட்டும் வித்தைய வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X