1880 முதல் இன்று வரை... ஒவ்வொரு தசாப்தத்திலும் அதிவேக கார்கள்!

By Saravana

ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தின் உண்மையான பரிணாம வளர்ச்சியையும், தொழில்நுட்ப வலிமையையும் அந்தந்த காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட கார்களின் அதிவேகத்தை வைத்தே எடையிட்டுவிட முடியும்.

அந்த வகையில், கடந்த 1880ல் துவங்கிய கார் யுகத்தின் ஒவ்வொரு தசாப்தத்திலும், அதிவேக கார் என்ற பெருமைக்குரிய மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலம்.

1880- 1889

1880- 1889

1880 முதல் 1889 வரையிலான கார் தலைமுறை துவங்கிய முதல் தசாப்தத்தின் அதிவேக கார் என்ற பெருமையை பென்ஸ் மோட்டார்வேகன் பெறுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 10 கிமீ வேகம் வரை மட்டுமே செல்லும். அதாவது, குதிரை வண்டியைவிட மெதுவாக சென்றாலும், அந்த தசாப்தத்தின் அதிவேக கார் என்ற பெருமை பென்ஸ் மோட்டார் வேகனுக்கே உரித்தானது.

1890- 1899

1890- 1899

இந்த தசாப்தத்தில் மணிக்கு 30 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய ஸ்டான்லி ரன்எபவுட் கார்தான் அதிவேக கார் என்ற பெருமையை பெறுகிறது. இது நீராவியில் இயங்கும் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

1900 - 1909

1900 - 1909

1900 - 1909 இடையிலான தசாப்தத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் சிம்ப்ளெக்ஸ் கார்தான் அதிவேக மாடல் என்ற பெருமைக்குரியது. 60 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொரு்தப்பட்டிருந்த இந்த கார் மணிக்கு 117 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

1910 - 1919

1910 - 1919

இந்த தசாப்தத்தின் அதிவேக கார் மாடல் அஸ்ட்ரோ டெய்ம்லர் பிரின்ஸ் ஹென்றி. இது பந்தயத்தில் பயன்படுத்துவதற்காக தயாரிக்ப்பட்ட மாடல். அதிகபட்சமாக மணிக்கு 136 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இதற்கான எஞ்சினை போர்ஷே நிறுவனத்தின் ஸ்தாபகர் ஃபெர்டினான்ட் போர்ஷே டிசைன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: Brian Snelson/Wiki Commons

1920 - 1929

1920 - 1929

இந்த தசாப்தத்தில் டசன்பெர்க் மாடல் ஜே கார் அதிவேக மாடல் என்ற பெருமைக்குரியது. அதிகபட்சமாக மணிக்கு 191 கிமீ வேகம் வரை தொடக்கூடிய திறன் கொண்டது.

1930 - 1939

1930 - 1939

இந்த தசாப்தத்தில் டசன்பெர்க் மாடல் எஸ்ஜே கார் அதிவேக மாடலாக அறியப்பெறுகிறது. 1932ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. அதேநேரத்தில், அதிவேக சாதனைக்காக டசன்பெர்க் நிறுவனம் தயாரித்த மோர்மன் மீட்டியோர் என்ற பிரத்யேக கார் மணிக்கு 239.21 கிமீ வேகத்தை தொட்டு புதிய உலக சாதனை படைத்தது.

Picture credit: Dennis Elzinga/Wiki Commons

 1940- 1949

1940- 1949

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜாகுவார் உருவாக்கிய ஸ்ட்ரெயிட் சிக்ஸ் எஞ்சினுடன் வெளியிடப்பட்ட எக்ஸ்கே- 120 கார் மணிக்கு 193 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக இருந்தது. மேலும், இதன் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 217 கிமீ என்ற அளவில் அதிகரிக்க முடியும்.

Picture credit: dave_7/Wiki Commons

1950 - 1959

1950 - 1959

இத்தாலிய பாடி டிசைன் மற்றும் இங்கிலாந்தின் பொறியியல் திறனில் உருவாக்கப்ட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி4 ஜிடி கார் 1950-59 இடையிலான தசாப்தத்தின் அதிவேக கார் என்ற பெருமையை பெறுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 246 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. இதன் வழித்தோன்றலாக உருவாக்கப்பட்ட மாடல்தான் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் அஸ்டன் மார்ட்டின் கார் என்ற பெருமைக்குரியது.

1960 - 1969

1960 - 1969

இந்த தசாப்தத்தில் வி12 எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபெராரி 365 ஜி டிபி/4 டேடோனா மாடல்தான் அதிவேக கார் என்ற பெருமைக்குரியது. மணிக்கு 280 கிமீ வேகம் வரை செல்லும். லம்போர்கினி மியூரா காரின் மணிக்கு 275 கிமீ வேகம் என்பதை முறியடிக்கும் விதத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டது.

1970 - 1979

1970 - 1979

இந்த தசாப்தத்தில் லம்போர்கினி கூன்டாச் காருக்கும், ஃபெராரி ஜிடி4 பெர்லினேட்டா பாக்ஸர் காருக்கும் இடையில் போட்டி இருந்தது. அதில், ஃபெராரி ஜிடி4 பெர்லினேட்டா கார் மணிக்கு 302 கிமீ டாப் ஸ்பீடையும், லம்போ கூன்டாச் மணிக்கு 281 கிமீ டாப் ஸ்பீடையும் கொண்டவையாக இருந்தன.

Picture credit: Thesupermat/Wiki Commons

1980- 1989

1980- 1989

நவீன கார் தொழில்நுட்ப யுகத்தின் துவக்க காலகமாக கருதப்படும் இந்த தசாப்தத்தில் போர்ஷே 959 கார் அதிவேக மாடல் என்ற பெருமைக்குரியது. இந்த கார் மணிக்கு 200 மைல் வேகம்[மணிக்கு 321 கிமீ வேகம்] என்ற இலக்கை கொண்டு வெளியிடப்பட்டது. ஆனால், ஃபெராரி நிறுவனம் இதற்கு போட்டியாக மணிக்கு 202 மைல் வேகம்[மணிக்கு 325 கிமீ வேகம்] கொண்ட ஃபெராரி எஃப்40 காரை களமிறக்கி, அதிவேக கார் மாடல் என்ற டைட்டிலை தட்டிச் சென்றது.

1990 - 1999

1990 - 1999

இந்த தசாப்தத்தில் மெக்லாரன் எஃப் கார் அதிவேக கார் என்ற பெருமையை பெற்றது. இந்த கார் மணிக்கு 386 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை பொருந்தியதாக வெளியிடப்பட்டது. ஆட்டோமொபைல் வரலாற்றில் இந்த வேகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை தந்ததாக குறிப்பிடப்படுகிறது.

Picture credit: Wiki Commons

2000- 2009

2000- 2009

2007ம் ஆண்டு ஷெல்பி எஸ்எஸ்சி ஏரோ கார் உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்றது. கின்நஸ் சாதனை படைத்த இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 431 கிமீ வேகம் வரை தொடக்கூடிய வல்லமை பொருந்தியது.

Picture credit: Nate Hawbaker/Wiki Commons

நடப்பு தசாப்தத்தில்...

நடப்பு தசாப்தத்தில்...

2010ம் ஆண்டு முதலான இந்த தசாப்தத்தில் புகாட்டி வேரான் கார் உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், ஹென்னிஸி வீனோம் ஜிடி கார் அதிகபட்சமாக 434 கிமீ வேகம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்து இதனை விட சில கிமீ கூடுதல் அதிகபட்ச வேகம் கொண்ட கோனிக்செக் ஒன் காரும் இந்த தசாப்தத்தின் அதிவேக கார் மாடலாக இருக்கிறது. ஆனால், பிரத்யேகமான அதிவேக சோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Fastest Car of Every Decade (1880-present).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X