ரூ.2.5 கோடி ஆடி ஆர்8 காருக்கு பொம்மை காரை வைத்து ஃபோட்டோஷூட்!

Written By:

ஆடி கார் நிறுவனத்தின் ஆர்8 கார் உலக அளவில் சிறந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் ரூ.2.5 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி ஆர்8 வரிசையில் வரும் மாடல்களை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தொடர்ந்து வாங்கி வருவதன் மூலம், இந்த கார் கார் விரும்பிகளுக்கு எந்தளவு பிரியமானதாக உள்ளது என்பதை கண்கூடாக தெரிகிறது.ஆனாலும், சந்தைப் போட்டி நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் எந்த ஒரு தயாரிப்புக்கும் விளம்பரம் அவசியமாகிறது.

அந்த வகையில், இந்த ஆர்8 ஸ்போர்ட்ஸ் காரை விளம்பரப்படுத்துவதற்கு ஆடி கார் நிறுவனம் முடிவு செய்தது. இதுபோன்ற விளம்பர படங்களுக்கு பல மில்லியன் யூரோ பட்ஜெட்டும், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் அடங்கிய படக்குழுவினரும் ஈடுபடுத்துவது வழக்கமான ஒன்று.

ஆனால், ஆடி ஆர்8 காருக்கான விளம்பர படங்கள் எடுத்து தரும் பொறுப்பை புகைப்பட கலைஞர் ஃபெலிக்ஸ் ஹெர்னான்டஸ் என்பவரிடம் ஒப்படைத்தது. அவர் செய்த காரியம் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது.

போட்டோஷூட்டை மிக வித்தியாசமான முறையில், எடுத்து வியக்க வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞர் பெலிக்ஸ் ஹெர்னான்டஸ். ஆம், ஒரு சிறிய அறையில் வைத்து ஆடி ஆர்8 காரின் ஃபோட்டோஷூட்டை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார்.

ரூ.2.5 கோடி மதிப்புடைய அந்த காருக்கான விளம்பர படங்களை ஸ்கேல் மாடல் எனப்படும் அந்த காரின் பொம்மை மாதிரியை வைத்தே ஃபோட்டோஷூட்டை முடித்துவிட்டார் ஃபெலிக்ஸ். அந்த படங்கள் பார்ப்போரை வியக்க வைக்கிறது.

ஆடி ஆர்8 கார் ஆல்ப்ஸ் மலையின் பனிக்கட்டி நிறைந்த சாலையில் செல்வது போன்றும், பனிக்கட்டி தரையில் ட்ரிஃப்ட் சாகசம் செய்வது போன்றும், கடற்கரையோரத்தில் நிற்பதும் போன்றும் தத்ரூபமாக படங்களை எடுத்து காரியத்தை முடித்துவிட்டார் ஃபெலிக்ஸ்.

ஒரு சிறிய அறையும், ஒரு மரப்பலகையையும் வைத்தே ஃபோட்டோஷூட்டை முடித்துவிட்டார். இதுபோன்று பொம்மை கார்களை வைத்து மிகச் சிறப்பான படங்களை எடுப்பதில் ஃபெலிக்ஸ் ஹெல்னான்டஸ் நிபுணத்துவம் மிக்கவராம்.

பன்மடங்கு குறைந்த செலவில், அவை உண்மையான இயற்கை சூழலில் இருப்பது போன்று எடுத்து எல்லோரையும் வியக்க வைத்து வருகிறார் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஃபெலிக்ஸ்.

English summary
These Stunning Images Of Audi R8 Were Actually Taken Using Scale Model!
Please Wait while comments are loading...

Latest Photos