ஆனந்த் மஹிந்திரா பற்றிய அரிய தகவல்கள்

By Ravichandran

ஒரு தொழில்அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மஹிந்திரா குரூப் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஆனந்த் மஹிந்திரா சிறந்த முன் உதாரணமாக விளங்குபவர்.

ஆனந்த் மஹிந்திரா பொறுமை, தாராள குணம், புதுமையாக யோசிக்கும் தன்மை உள்ளிட்ட குணாம்சங்களை கொண்டுள்ளார். தொழில் நிர்வாக அறிவும், உலகளவிலான கனவுகளும், பல்வேறு தடைகளை தாண்டி மஹிந்திராவை அதிக அளவிலான சொத்துக்களையும் நன்மதிப்பினையும் சேகரிக்க உதவியுள்ளது.

பணக்காரர்கள் பட்டியலில் ஆனந்த் மஹிந்திரா;

பணக்காரர்கள் பட்டியலில் ஆனந்த் மஹிந்திரா;

2015-ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ஆனந்த் மஹிந்திரா 99-வது இடத்தில் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் சொத்துகள் மற்றும் தொழில் மதிப்பீடுகள் குறித்து வருடாந்திர பட்டியல்களை வெளியிடுகிறது.

ஆதாரம்: ஃபோர்ப்ஸ்

ஆனந்த் மஹிந்திராவின் சொத்து மதிப்பீடு;

ஆனந்த் மஹிந்திராவின் சொத்து மதிப்பீடு;

நவம்பர் 2, 2015-ஆம் தேதி படி, ஆனந்த் மஹிந்திராவின் நிகழ் நேர சொத்து மதிப்பு 1.22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ஆனந்த் மஹிந்திரா, 2014-ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் தலைசிறந்த 50 தலைவர்களில், ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011-ல், ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த 25 தொழில் அதிபராக தேர்வானார்.

ஆதாரம்: ஃபோர்ப்ஸ்

மஹிந்திரா குழுமத்தில் ஆனந்த்தின் வளர்ச்சி;

மஹிந்திரா குழுமத்தில் ஆனந்த்தின் வளர்ச்சி;

ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை தொழில் அதிபராக உள்ளார். மஹிந்திரா குழுமம் 1945-ல், ஆனந்த்தின் தாத்தா கே.சி.மஹிந்திரா அவர்களால் துவக்கபட்டது. கே.சி.மஹிந்திரா-வை அடுத்து, ஜே.சி. மஹிந்திரா அந்த பொறுப்பினை ஏற்றார். ஸ்டீல் வர்த்தகத்தை

குலாம் மொஹம்மத் நிர்வாகம் செய்து வந்தார்.

ஆனந்த் மஹிந்திரா முதன் முதலாக 1981-ல், மஹிந்திரா யூகின் ஸ்டீல் கம்பெனியில் (முஸ்கோ), ஃபைனான்ஸ் டைரக்டருக்கு, எக்ஸிக்யூடிவ் உதவியாளராக சேர்ந்தார். முஸ்கோ ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக விளங்கியது.

ஆட்டோமொபைல் துறையில் ஆனந்த்;

ஆட்டோமொபைல் துறையில் ஆனந்த்;

ஆட்டோமொபைல் துறையை பொறுத்த வரை, ஆனந்த் மஹிந்திரா ஆராய் அல்லது ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அஸோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவராக பணியாற்றினார்.

ஆராய் அமைப்பானது, பாதுகாப்பான, குறைந்த மாசு உமிழ்வு மற்றும் அதிக திறன் கொண்ட வாகனங்களின் தயாரிப்பை உறுதி செய்கிறது. மேலும், ஆராய், ஆர் அண்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, சோதனை, சர்டிஃபிகேஷன், வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுக்கும் பணி உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.

படிப்பு;

படிப்பு;

ஆனந்த் மஹிந்திரா பில்ம் மேக்கிங் (பட தயாரிப்பு) மற்றும் கட்டிடக்கலையை படித்தார். 1977-ல் அமெரிக்காவின் ஹார்வர்ட் காலேஜ்-ஜில் இருந்து ஹானர்ஸ்-ஸுடன் பட்டம் முடித்துள்ளார். மேலும், 1981-ல் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் இருந்து எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

சமூக பணி;

சமூக பணி;

ஆனந்த் மஹிந்திரா சமூக சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் தான் ‘நன்ஹா களி' என்ற திட்டத்தை உருவாக்கினார். 1996-ல் உருவாக்கபட்ட ‘நன்ஹா களி' திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக தவிக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கபடுகிறது.

இன்றைய தேதியில், ‘நன்ஹா களி' திட்டத்தில் சுமார் 70,000 பெண் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ‘நாண்டி தானோன்' என்ற திட்டத்தையும் ஆனந்த் மஹிந்திரா துவக்கியுள்ளார். இந்தியாவிலேயே மிகப்பெரிய பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டமாக உள்ளது. பிரத்யேகமாக, கிராமப்புற பகுதிகளில் செயல்படும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 3 மில்லியன் மக்கள்

பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஹார்வர்ட் பல்கலைகழகத்துடனான பிணைப்பு;

ஹார்வர்ட் பல்கலைகழகத்துடனான பிணைப்பு;

ஆனந்த் மஹிந்திராவுக்கு ஹார்வர்ட் பல்கலைகழகத்துடன் மிக நெருக்கமான பிணைப்பு உள்ளது. ஆனந்த் மஹிந்திரா ஹார்வர்ட் ஹூமேனிட்டீஸ் செண்டருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார்.

இது தான், ஹார்வர்ட் ஹூமேனிட்டீஸ் செண்டருக்கு ஒரு இந்தியரால், வழங்கப்பட்ட அதிகபடியான நன்கொடை ஆகும். இதனையடுத்து, ஹார்வர்ட் ஹூமேனிட்டீஸ் செண்டர், மஹிந்திரா ஹூமேனிட்டீஸ் செண்டர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் மஹிந்திரா, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் அஸோசியேஷன் ஆப் இந்தியா-வின் இணை-நிறுவனராக உள்ளார்.

ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா;

ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா;

ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஈடுபாடு கொண்டவர். அவரது ட்விட்டர் ஹாண்டல் @anandmahindra

2-11-2015 தேதி படி, ஆனந்த் மஹிந்திராவை சுமார் 2.54 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். 2013-ல் வெளியிடப்பட்ட "WorldofCEOs.com" மதிப்பீடுகளின் படி, உலக அளவில் உள்ள ‘சமூக வலைதளங்களில் டாப் 30 சீ.ஈ.ஓ-க்கள்' பட்டியலில், ஆனந்த் மஹிந்திரா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

சினிமாவில் ஆர்வம்;

சினிமாவில் ஆர்வம்;

ஆனந்த் மஹிந்திரா சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் மிக திறன்மிக்க புகைப்பட வல்லுனராவார். ஆனந்த் மஹிந்திரா புளூஸ் மியூசிக்கை விரும்பி ரசிப்பவர். இதற்காக, ஆண்டுதோறும், மஹிந்திரா புளூஸ் ஃபெஸ்டிவல் என்ற நிகழ்ச்சியை 2011-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

ஒவ்வொறு ஆண்டும் இரண்டு நாள் நடைபெறும் மஹிந்திரா புளூஸ் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலும் இருந்து இசை வல்லுனர்கள் பங்குபெறுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தனிப்பட்ட வாழ்க்கை, ஆர்வங்கள்;

தனிப்பட்ட வாழ்க்கை, ஆர்வங்கள்;

ஆனந்த் மஹிந்திரா தற்போது மஹிந்திரா குழுமத்தின் சேர்மேன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக உள்ளார்.

அவருக்கு செய்லிங் (படகு சவாரி), டென்னிஸ், உலக சினிமா மற்றும் புத்தகம் படிப்பது மிகவும் பிடித்த விஷயங்களாக உள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் மனைவி அனுராதா மஹிந்திரா ஆவார். அனுராதா மஹிந்திரா, வெர்வ் எனப்படும் லைஃப்ஸ்டைல் இதழின் எடிட்டர் மற்றும் பதிப்பாளராக உள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா, அனுராதா மஹிந்திராவுக்கு ஆலிக்கா மற்றும் திவ்யா என்ற பெயரில் இரு மகள்கள் உள்ளனர்.

தமிழ் மொழி அறிவு;

தமிழ் மொழி அறிவு;

அனைத்து விஷயங்களை தாண்டி, ஆனந்த் மஹிந்திராவுக்கு தமிழ் மொழி தெரியும் என்பது மிக சிறப்பான செய்தியாகும்.

அவர் தமிழ்நாட்டின் ஊட்டியில் (லவ்டேல்) உள்ள லாரன்ஸ் ஸ்கூலில் படித்த சமயத்தில் தமிழ் மொழியை கற்று கொண்டார் என தெரிகிறது.

ஸ்வாரஸ்யமான, அரிய செய்திகளின் தொகுப்பு;

ஸ்வாரஸ்யமான, அரிய செய்திகளின் தொகுப்பு;

இதேபோல், பல்வேறு ஸ்வாரஸ்யமான, அரிய செய்திகளை காண...

கிளிக் செய்யவும்

Most Read Articles
English summary
These are the few things which You Didn't Know About Anand Mahindra. Anand Mahindra is the Chairman of the Mahindra Group. Apart from being a successful Businessman, he is also a multifaceted personality with lots of other talents.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X