ஸ்டீவ் ஜாப்ஸ் எண்ணத்தில் உருவான கடைசி பொக்கிஷம் இதுதான்!!

By Saravana

நவீன கால தொழில்நுட்பத் துறையின் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர் ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ். இவரது தலைமையிலும், ஆலோசனையிலும் உருவான ஐ பிராண்டில் வெளியிடப்பட்ட ஐ-போன் உள்ளிட்ட சாதனங்கள் தரத்திலும், தொழில்நுட்பத்திலும் உலகின் முதன்மையானதாக கருதப்படுகிறது.

தனது திறமையால் வாழ்வின் உச்சத்தை தொட்ட மனிதர்களில் ஒருவராக மாறிய ஸ்டீவ் ஜாப்ஸ் மிகுந்த ஆசையுடன் கடைசியாக உருவாக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக குறிப்பிடுவது அவர் ஆர்டர் செய்த உல்லாச படகுதான். ஆம், அவரது ஆலோசனையில் பல சாதனங்கள் வந்தாலும், சொந்த பயன்பாட்டுக்காக அவரது ஆலோசனையில் கடைசியாக வெளிவந்தது இந்த உல்லாச படகுதான் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும், ஆசையாய் அவர் ஆர்டர் செய்த படகில் ஒருமுறை கூட அவர் பயணிக்காமலேயே மரணத்தை தழுவியது துரதிருஷ்டம். அவருக்காக உருவாக்கப்பட்ட அந்த படகு சமீபத்தில் உட்புறத்தில் மாற்றஙகள் செய்யப்பட்டு மீண்டும் பயணத்துக்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் படகில் அப்படி என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 நனவாகாத கனவு

நனவாகாத கனவு

உலக அளவில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் உல்லாச படகு வடிவமைப்பில் புகழ்பெற்றவை. அதில், ஒன்றான ஃபெட்போட் என்ற நிறுவனத்திடம் படகு கட்டுமான பணியை வழங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதேபோன்று, இந்த படகின் வடிவமைப்பு பணியை பிரபல டிசைனரான பிலிப் ஸ்டார்க்கிடம் வழங்கியிருந்தார்.

மிதக்கும் மாளிகை

மிதக்கும் மாளிகை

இந்த படகில் இடம்பெறும் கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகளில் ஆப்பிள் ஸ்டோர்களின் டிசைனை வடிவமைத்த தலைமை டிசைனரையும் ஈடுபடுத்தினார். அதாவது, இந்த உல்லாசப் படகை மிதக்கும் கண்ணாடி மாளிகையாக உருவாக்க வேண்டும் என்று தனது அவாவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

துரதிருஷ்டம்

துரதிருஷ்டம்

கடந்த 2008ம் ஆண்டில் படகுக்கு ஆர்டர் செய்திருந்த நிலையில், 2009ம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2011ம் ஆண்டு அக்டோபரில் மரணமடைந்தார். ஆனால், இந்த படகு 2012ம் ஆண்டு அக்டோபரில்தான் கட்டுமானப் பணிகள் முடிந்ததால், இந்த படகில் அவர் பயணிக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

இழுபறி

இழுபறி

ஸ்டீவ் ஜாப்ஸின் கனவான இந்த உல்லாச படகு கட்டுமானம் அவர் மரணமடைந்து சரியாக ஓர் ஆண்டுக்கு பின்னர் முடிந்த நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் குடும்பத்தினர் தனக்கு பணம் பாக்கி வைத்துள்ளதாக கூறி, வடிவமைப்பு நிபுணர் பிலிப் ஸ்டார்க் படகு டெலிவிரிக்கு தடை போட்டார். அதன்பின்னர், ஸ்டீப் ஜாப்ஸ் குடும்பத்தினர், படகுக்கான முழுப் பணத்தையும் செலுத்திய பின்னர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

பெயர்

பெயர்

ஸ்டீவ் ஜாப்ஸிற்காக உருவாக்கப்பட்ட உல்லாச படகிற்கு, வீனஸ் என்று பெயரிடப்பட்டது. அன்பை குறிக்கும் கிரேக்க மற்றும் ரோமானிய பெண் கடவுளின் பெயர்தான் இந்த படகிற்கு சூட்டப்பட்டது.

ரகசியம்

ரகசியம்

இந்த உல்லாசப் படகின் உட்புறத்தின் அம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து மிகவும் ரகசியம் காக்கப்படுகிறது. உலகிலேயே அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இந்த உல்லாசப் படகை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், விருந்தினர் கூடம், படுக்கை வசதி, பொழுதுபோக்கு வசதிகள் என பிற உல்லாசப் படகுகளை போலவே பல வசதிகள் இந்த உல்லாச படகில் இருக்கிறது.

 ஆப்பிள் கம்ப்யூட்டர்

ஆப்பிள் கம்ப்யூட்டர்

வீனஸ் படகின் பல்வேறு சாதனங்களை ஏழு ஆப்பிள் ஐ-மேக் கம்ப்யூட்டர் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறதாம். மேலும், நேவிகேஷன் வசதியையும் இந்த ஐ- மேக் கம்ப்யூட்டர் மூலமாகவே பெறும் வகையில் வடிவமைத்துள்ளனர். அதாவது, இந்த உல்லாசப் படகை உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு பரீட்சார்த்த முறையில் தொழில்நுட்ப வல்லமை பொருந்தியதாக உருவாக்க ஸ்டீவ் முனைந்துள்ளார் என்பது தெரியவருகிறது.

வடிவம்

வடிவம்

இந்த படகு 260 அடி நீளம் கொண்டது. பிற உல்லாச படகுகளுடன் ஒப்பிடும்போது, கூடுதல் நீளம் கொண்டதாக கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆறு வாரத்திற்கும் ஒருமுறை படகு டிசைன் மற்றும் பிற அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்ட பிறகே, அதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கின்றனர்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் கன்ட்ரோல்

ஆப்பிள் கம்ப்யூட்டர் கன்ட்ரோல்

இந்த உல்லாச படகில் 27 இன்ச் திரை கொண்ட ஏழு ஐ-மேக் சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கினறன. படகின் பெரும்பான்மையான சாதனங்கள் மற்றும் வசதிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நேவிகேஷன் வசதியையும் இந்த ஐ-மேக் கம்ப்யூட்டர் மூலமாக செய்யப்படுகிறது.

பெரிய ஜன்னல்கள்

பெரிய ஜன்னல்கள்

இந்த உல்லாச படகின் இன்டீரியர் இதுவரையிலுமே ரகசியம் காக்கப்படுகிறது. இதுபற்றி, ஸ்டீப் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசக்சன் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். தரையிலிருந்து கூரை வரையிலான மிகப்பெரிய கண்ணாடி ஜன்னல்கள், தேங்கு மர வேலைப்பாடுகள் மனதை வசீகரிக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

பயன்பாடு

பயன்பாடு

ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரின் பவல் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸின் குடும்பத்தினர் இந்த உல்லாசப் படகை பயன்படுத்துகின்றனர். ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவாகவும் இந்த படகை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.

விலை

விலை

ஸ்டீப் ஜாப்ஸ் ஆர்டர் செய்த இந்த வீனஸ் படகு 100 மில்லியன் பவுண்ட்டுகளுக்கும் அதிகமானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைசி பொக்கிஷம்

கடைசி பொக்கிஷம்

ஸ்டீவ் ஜாப்ஸ் எண்ணத்திலும், ஆசையிலும் உருவாக்கப்பட்டு வெளிவந்த, கடைசி பொக்கிஷமாக இந்த உல்லாச படகையே குறிப்பிடுகின்றனர்.

சுவாரஸ்ய செய்திகள்

01.அம்பானி, மல்லையாவுடன் உலகின் டாப்-10 கார் சேகரிப்பாளர்கள்!!

02. விஜய் மல்லையாவின் விண்டேஜ் கார்கள்...

03. இந்தியாவின் முன்னணி சிஇஓ.,க்களின் காஸ்ட்லி கார்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
A year after his death, Steve Jobs' final masterpiece, a 257-foot pleasure yacht he called Venus, was unveiled to a small group at the headquarters of legendary Dutch boat-builders Feadship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X