ஆற்றுக்குள் விழுந்த விமான உடற்கூடுகள்: பெரும் சேதம் என தகவல்!

அமெரிக்காவில் சரக்கு ரயில் தடம்புரண்ட விபத்தில், அந்த ரயிலில் கொண்டு செல்லப்பட்ட விமானத்தின் உடற்கூடுகள் ஆற்றுக்குள் விழுந்து நொறுங்கின.

ஆற்றுக்குள் விழுந்த 3 விமானக்கூடுகளிலும் கடுமையாக தெறிப்புகள் ஏற்பட்டதுடன், ஒரு விமான உடல்கூடு இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் அதிக பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


போயிங் விமானம்

போயிங் விமானம்

கன்சாஸ் நகரிலுள்ள ஸ்பிரிட் ஏரோசிஸ்டம் நிறுவனத்தின் ஆலையிலிருந்து போயிங் 737 ரகத்தை சேர்ந்த 6 விமான உடற்கூடுகள் வாஷிங்டன் நகரில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதுதான் விபத்தில் சிக்கின.

 மீட்பதில் சிக்கல்

மீட்பதில் சிக்கல்

3 விமான உடற்கூடுகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆற்றில் நீரின் வேகம் அதிகம் இருந்ததால் மீட்புப் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இன்னமும் அந்த விமான உடற்கூடுகளை மேலே இழுத்து வரும் பணிகள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 விபத்துப் பகுதி

விபத்துப் பகுதி

அமெரிக்காவின் மேற்கு மான்டோனா அருகில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சேதம்

சேதம்

இந்த விபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்படும் என்று கருதுவதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தனது நிபுணர் குழு ஒன்றையும் அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

விசாரணை

விசாரணை

இந்த விபத்து குறித்து ரயில்வேத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகளும் பெரும் சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணி வீடியோ

விமான உடல்கூடுகளை மீட்பதற்கு மீட்புப் படையினரின் முயற்சிகளை வீடியோவில் காணலாம்.

Most Read Articles
English summary
A train derailment near Superior, Montana sent two brand new Boeing 737 fuselages tumbling into the Clark Fork River on Thursday. The planes were on their way from Spirit Aerosystems in Wichita, Kansas to final assembly at Boeing in Renton, Washington. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X