தன் காரின் சிவப்பு சுழல் விளக்கை தானே அகற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

மத்திய அரசின் அரிவிப்பை அடுத்து தன் காரின் சைரனை தானே நீக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் காரில் இருந்த சைரனை தானே நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர உதவி வாகனங்களுக்கு வழிவிடும் வகையில், விஐபிக்களின் கார்களுக்கு சாலையில் வழங்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்க, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

பிரதமர், ஜனாதிபதி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை தவிர மற்றவர்கள் சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நாட்டில் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் என பலரும் தங்களது கார்களில் சிவப்பு சைரன் விளக்குகளை பயன்படுத்துகின்றனர். இதனை வைத்து, போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க, இதர வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

இது தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும், இதர அவசர உதவி வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சிவப்பு சைரன் விளக்குகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என, மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் காரின் சைரனை இன்று தானே அகற்றினார், மேலும் அமைச்சர்கள் தங்களது காரில் உள்ள சைரன்களை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அசாத்திய அரசியல் சூழல் நிலவி வருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசியல் காட்சிகள் மாறி வருகின்றன.

காரில் இருந்த சைரனை தானே நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி..!

தமிழக அரசு முடங்கிவிட்டதாக ஆளுங்கட்சியின் மீது எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் மாற்றங்களுக்கு நடுவே முதல்வர் பழனிச்சாமி தனது காரில் இருந்து சைரனை தாமே நீக்கியுள்ளது ஆச்சியப்பட வைக்கிறது.

Most Read Articles
English summary
Read in Tamil about TN CM Edapadi palanichamy removes his car's beacon for himself.
Story first published: Thursday, April 20, 2017, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X