டாம் க்ரூஸை விட வரவேற்பை குவிக்கும் பி.எம்.டபுள்யூ-வின் புது ரக பைக்

Written By:

1996ம் ஆண்டிலிருந்து 5 பாகங்களாக வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் மிஷின் இம்பாஸிபிள். ஹாலிவுட் சினிமாவின் என்றும் மார்கண்டேயன் டாம் க்ரூஸிற்கு உலகளவில் மார்கெட்டை உருவாக்கிய இப்படத்தின் 6வது பாகம் துரித கதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட செட்டில், கோடி கோடியாக அமெரிக்க டாலரை கொட்டி உருவாக்கப்பட்டு வரும் மிஷின் இம்பாஸிபிள் படத்தை தயாரிக்கும் நிறுவனத்துடன் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் பி.எம்.டபுள்யூ சத்தமே இல்லாமல், ஒரு ஒப்பந்தத்தை செய்துக்கொண்டுள்ளது.

2018ம் ஆண்டில் வெளிவரும் இந்த படத்தில் டாம் க்ரூஸிற்கு இணையாக ஒரு மோட்டார் சைக்கிளுக்கான காட்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 'ஆர் நைன் டி' என்ற பெயரில் பி.எம்.டபுள்யூ தயாரித்துள்ள இந்த பைக்கை நடிகர் டாம் க்ரூஸ் பாரீஸ் நகர வீதிகளில் தெறிக்கவிட்டு ஓட்டிவரக்கூடிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன.

டாம் க்ரூஸ், பி.எம்.டபுள்யூ ஆர் நைன் டி பைக்கை பிடித்து வைத்திருப்பது போலவும், அவர் அந்த மோட்டார் சைக்கிளை தெருவில் ஓட்டி வருவதும் போன்றவும் படங்கள் வெளியாகி வைரலடித்துள்ளன. குறிப்பாக டாம் க்ரூஸ், மிஷின் இம்பாஸிபள் 6 என்பதை தாண்டி பி.எம்.டபுள்யூ ஆர் நைன் டி பைக் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.எம்.டபுள்யூ ஆர் நைன் டி பைக் மட்டுமின்றி, பி.எம்.டபுள்யூ வெளியிட்ட முந்தைய கார்களையும் இந்த படத்தில் டாம் க்ரூஸ் ஓட்டுவது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மெஷின் இம்பாஸிபிள் 6வது பாகத்தில் டாம் க்ரூஸ் ஒட்டும் அனைத்து வண்டிகளும் பி.எம்.டபுளியூவின் தயாரிப்பாக இருக்கும்.

2011ம் ஆண்டில் வெளியான மெஷின் இம்பாஸிபிளின் 'கோஸ்ட் ப்ரோட்டோகால்' படத்தில் முதன்முறையாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. தொடர்ந்து அந்த ஒப்பந்தம் நீடித்திருந்தாலும், பி.எம்.டபுள்யூ-வின் லோகோ அல்லது வடிவமைப்பு எதுவும் தெரியும் விதத்தில் படத்தின் எந்த காட்சியிலும் தெரியும்படியாக இருக்கவில்லை.

ஆனால் அடுத்தாண்டு வெளிவரும் மிஷின் இம்பாஸிபிள் 6வது பாகத்தில் அந்நிறுவனத்தின் லோகோ, காரின் முழு வடிவமைப்பு தெரியும் படியாக காட்சிகள் உள்ளன. பி.எம்.டபுள்யூவின் தயாரிப்புகளை டாம் க்ரூஸ் ஓட்டுவது போன்ற காட்சிகள் முழுவதும் பாரீஸ் நகரத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

54 வயதாகும் டாம் க்ரூஸ் 21 ஆண்டுகளுக்கும் மேலாக மிஷின் இம்பாஸிபிள் பட வரிசையில் நடித்து வருகிறார். இதற்காகவே கடுமையாக உடற்பயிற்சி, டயட் ஆகியவற்றை தொடர்ந்து வருகிறார். மேலும் பாரீஸில் படமாக்கப்பட்ட கார் சேஸிங் காட்சிகளில் டாம் க்ரூஸூடன் பிரபல நடிகர் சீன் ஹாரிஸும் தோன்றுகிறார்.

2015ம் ஆண்டில் பி.எம்.டபுள்யூ மிஷின் இம்பாஸிபிள் படங்களின் பார்டனருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்தாண்டில் வெளியான மிஷின் இம்பாஸிபிள் படத்தின் 5வது பாகமாக ரோஹ் நேஷன் படத்தில் எம்3, மோட்டராட் எஸ் 100 ஆர்.ஆர் சூப்பர் பைக் போன்ற பி.எம்.டபுள்யூவின் தயாரிப்புகளை வைத்து அசத்தலான காட்சிகள் உருவாக்கப்பட்டன.

மிஷின் இம்பாஸிபிள் படத்தின் பி.எம்.டபுள்யூ வெறும் கார்களை மட்டும் வழங்காமல், படப்பிடிப்பிற்கான ஊர்திகளை பழுது பார்க்கும் வேலையிலும் தனது ஊழியர்களை அந்நிறுவனம் அமர்த்தியது. அவர்கள் ஸ்டண்ட் காட்சிகளுக்கு தேவையான அனைத்து வாகனங்களை மாற்றியமைக்கவும் செய்தனர்.

2011ம் ஆண்டில் வெளியான மிஷின் இம்பாஸிபிள் 5வது பாகமான கோஸ்ட் ப்ரோட்டோகால் படத்தில் பி.எம்.டபுள்யூ தனது ஹைபிரிட் ஐ8 சூப்பர் கார் முதன்முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அந்த காரை வைத்து டாம் க்ரூஸ் செய்து காட்டிய சாகசம் தான் இன்று ஐ8 ஹைபிரிட் கார்களுக்கு ஏற்பட்டுயிருக்கும் வரவேற்பிற்கான முதல் அச்சாணி.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
In Mission Impossible latest edition actor Tom Cruise can be seen riding a BMW R Nine T motorcycle as well as BMW sedan.
Please Wait while comments are loading...

Latest Photos